Saturday, April 25, 2009

உணவு முறை 0- 1 வயது வரை

பிறந்த குழந்தைகள் குளியல் முறை மிக முக்கியமானது. எங்கள் வீட்டில் பிறந்த குழந்தையை குளிக்கவென ஒரு ஆயா வருவார்கள், அவர்களுக்கு வெற்றிலை பாக்கு தரனும், அவர் வந்து குளிக்க ஆரம்பிக்கும் முன் ஒரு பெரிய சடங்கு நடத்துவர், இப்படி திருப்பி அப்படி திருப்பி குழந்தைக்கு மயக்கமே வந்திருக்கும். இப்பதான் தெரியுது அதெல்லாம் தேவையே இல்லை. குழந்தைகளின் உடம்பு மிக மிருதுவானது, அதன் மேல் என்ன அழுக்கு படிய போகுது.

கவிதா சொன்னது போல் எல்லாம் எடுத்து வைத்து பின் குளிக்க வைங்க. குளிக்க வைக்கும் முன் எதுவும் சாப்பிட குடுக்க கூடாது. குளித்தவுடன் மிருதுவாக துடைத்து மெல்லிய உடை அணிய வைக்க வேண்டும். பொட்டு, பவுடர் போன்றவை குறைந்தது 5 மாதங்களுக்கு வேண்டாமே . மை, பொட்டு போன்றவைகளையும் தவிர்க்கலாம். மிக மிருதுவான சருமம் இதனால் பாதிக்கப்படும். வேங்கை பால் பொட்டு என கிடைக்கும், அது வேண்டுமானால் 5 மாதம் பிறகு வைக்கலாம்.

உங்களுக்கு மை தயாரிக்க தெரிந்தால் நல்லது. வெண்ணை அல்லது விளக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட மை நல்லது.

இன்றைக்கு உணவு முறைகளை பார்க்கலாம்:

கண்டிப்பாக குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே 6 மாதம் வரை கொடுக்கணும். ( என் இரு பெண்களுக்கு 3 வயது வரை கொடுத்தேன.) பாட்டில் பால் வேண்டவே வேண்டாம்.

6 மாதம்:

ஆப்பிள் தோல் சீவி குக்கரில் வேக வைத்து சிறிது நெய் சேர்த்து கொடுக்கலாம். முளை கட்டிய சாது மாவு, கோதுமை , ஜவ்வரிசி, ராகி கூழ் போன்றவை குடுக்க வேண்டும். முக்கியமா கவனிக்க வேண்டியது ஒரு புது உணவு குடுத்தால் குறைந்த பட்சம் நான்கு நாட்கள் வேறு எந்த புது உணவும் அறிமுக படுத்த கூடாது. அப்பதான் அந்த உணவால் எதாவது அலர்ஜி ஆகிறதா என்று நாம் அறிய முடியும். முதல் நாள் மிக கொஞ்சம் அடுத்த நாள் அளவு கூட்டி தர வேண்டும்.

7, 8 மாதங்கள்:

ஒரு வேளை கூழ், ஒரு வேளை பருப்பு சதம், பால் சாதம் ஆப்பிள், வேகவைத்து மசிக்கப்பட்ட காரட், உருளை கிழங்கு, ரொட்டி பால் சேர்த்து, உப்பு பிஸ்கட் ஊற
வைத்து கொடுங்க. வெறும் பருப்பு சாதமா குடுத்து குழந்தையை கொடுமை செய்யாமல், அதற்கென தனியாக சமைத்து கொடுங்கள். பருப்புடன் , காரட் , கீரை, ஒரு வெங்காயம், சிறிய தக்காளி துண்டு எல்லாம் குக்கரில் குழைய வேக வைத்து கொடுங்கள். பசும்பால் அறிமுகபடுத்துங்கள்.

9. ,10 மாதம்:

இப்போது, இட்லி, தோசை, சப்பாத்தி, முட்டை, போன்றவைகளை தரலாம்.

11, 12 மாதங்கள் :

நம் வீட்டு நார்மல் சாப்பாட்டு குழந்தைக்கு பழக்கபடுத்துங்கள்.

எக்காரணம் கொண்டும் மிக்ஸ்யில் அடித்து கொடுக்காதீங்க. அப்பறம் சாப்படவே பழகாது. குறைவாக இருந்தாலும் பார்க்கும் போதே சாப்பிட துண்டும் வகையிலும், சத்துள்ள தாகவும் கொடுங்கள். முக்கியமா குழந்தைகள் சாப்பிட ஒரே தட்டு, டம்ளர் வைத்து கொள்ளுங்கள். அதை அடிக்கடி சுட்டு தண்ணீரில் போட்டு கொதிக்கவிட வேண்டும். காரம், புளி போன்றவைகளை கொஞ்சம் குறைத்து கொடுங்கள். குழந்தை அதிகம் சாப்பிட வில்லை என்று கவலை பட்டு ஒன்றும் போவதில்லை. உணவு வகைகளை மாற்றி, அடிக்கடி கொடுங்கள்.

உணவை கொடுக்கும் நேரம் ரொம்ப முக்கியம். உதாரணமாக் இரண்டு வேளை திட உணவு அதிகம் கொடுத்தால் அதற்கு ஜீரணம் ஆகாது, பதிலாக இந்த அட்டவணையை கடைபிடித்து பாருங்கள்.
7 மணிக்கு ஒரு குழந்தை எழுந்தால்:-எழுந்தவுடன் பசும்பால் அரை டம்ளர்,
8 மணி - குளிக்க வைக்கலாம். இந்த பழக்கமும், toilet பழக்கமும் பினனால் உங்க
குட்டி பள்ளி செல்லும் போது பயன்படும்.
8.30 - காலை உணவு - திட உணவாக இருக்கட்டும்
10.30 - தினம் ஒரு ஜூஸ் அல்லது சூப் கொடுங்கள், அல்லது ஒரு பழம்.
12 - திட உணவு
4 மணிவரை எதுவும் தேவை இல்லை. அப்பறம் பால் கொடுங்கள், கூட இரண்டு பிஸ்கட் அல்லது ஒரு ரொட்டி துண்டு.
7.30 மணிக்கு முழு திட உணவு கொட்டுங்கள்.
9 மணி மீண்டும் பால். இதற்க்கு இடையில் தாய்ப்பால், கணக்கே இல்லை.

இப்ப வயிறு நிறைந்து இருக்கும், குழந்தை நடுவில் எழுது கொள்ளாது. தேவை இல்லாமல் அதற்க்கு நடு இரவில் பால் கொடுத்துஎல்லாம் பழக்காதீர்கள். 8 மாதம் பிறகு வளர்ந்த குழந்தையாக நினைத்தால் எல்லா பழக்கமும் சொல்லி தர முடியும்.

இதெல்லாம் என் சொந்த அனுபவம், என் குழந்தைகள் நடு இரவில் அழுததே இல்லை. காரணம் வயிறு நிறைந்த உணவு நல்ல தூக்கம் கொடுக்கும் தானே?

டிப்ஸ்: அம்மாகளுக்கு பால் கட்டி இருந்தால், ஒரு பாத்திரத்தில் உங்களால் பொறுத்து கொள்ள கூடிய அளவு சுடுதண்ணீரும், இன்னொரு பாத்திரத்தில் ஐஸ் தண்ணீரும் வைத்து கொள்ளுங்கள். இரண்டிலும் ஒரு சின்ன டவல் போட்டு இரு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி துணியை தண்ணீருடன் எடுத்து பத்து போட்டது போல் போடுங்கள். தினமும் இரவில் தூங்குவதற்கு முன்னும், காலையில் குளிக்கும் போதும் செய்தல், கட்டிய பால் தானாகவே வெளியேறும். பிறகுதான் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

3 comments:

ஆகாய நதி said...

இந்த சூப் மட்டும் பொழிலுக்கு இன்னும் கொடுக்க ஆரம்பிக்கவில்லை...

Deepa said...

அசத்தல் மயில். பாராட்டுக்கள்!

:-) நீங்கள் எழுதி இருப்பதைப் பார்த்ததும் என் குழந்தையின் உணவுப் பழக்கத்தையும் தூக்கப் பழக்கத்தையும் நினைத்து வாய் விட்டுச் சிரித்தேன்.

வேறொன்றுமில்லை. ஒரே ஒரு வித்தியாசம் தான். என் குழந்தை 10 மணிக்கு மேல் தான் எழுந்திருக்கும் அதனால் நீங்கள் சொல்லியுள்ள நேரத்துக்கு மேல் ஒவ்வொன்றும் மூன்று மணி நேரம் கழித்துத் தான் நடக்கும்! :-)

Unknown said...

வணக்கம், தாங்கள் பயனுள்ள பல தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்,
நன்றி.என் 5 மாத குழந்தைக்கு போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கவில்லை, சரியான தூக்கம் இல்லை.டாக்டர் உணவை ஆரம்பிக்க சொல்லியுள்ளார் .
தங்களின் அறிவுரையை கூரும்படி
கேட்டுகொள்கிறேன். 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger