Sunday, April 26, 2009

விதவிதமா இட்லி சுடலாம் நம்ம குட்டீஸ்கு!

ஹாய் அம்மாஸ்...

நம்ம குட்டீஸ் 8வது மாதம் முதல் நாம் நம் தமிழகத்தின் முக்கிய உணவான இட்லி கொடுக்க ஆரம்பிக்கிறோம்... இட்லி என்பதை சாதாரணமா நினைச்சுடக் கூடாது!

உலக அளவில் சத்தான உணவு பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க உணவியல் ஆய்வாளர்கள் இறங்கியபோது அவர்கள் தந்த இன்ப அதிர்ச்சி- "உலகிலேயே தலை சிறந்த சத்தான செய்வதற்கும் எளிய உணவு இட்லி தான்" என்பதே அது!

அப்படிப்பட்ட இட்லி சுடும் ஊரில் பிறந்த நாம் நம் குட்டிக்கண்ணுகளுக்கு விதவிதமா இட்லி சுட்டுக்கொடுத்தோம்னா அவங்க விரும்பி சாப்பிடுவாங்க... கைக்குழந்தை முதல் பள்ளி கல்லூரி அலுவலகம் என்று தொடங்கி பல் போன காலத்திலும் சாப்பிடும் இட்லியை எப்படி பல விதங்களில் சுடலாம் என்று நான் எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன்.

அதில் ஏதேனும் சுவை கூட்டியோ சத்து கூட்டியோ சேர்க்கலாம் என்று யாருக்கேனும் தோன்றினால் தயவுசெய்து பின்னூட்டத்தில் கூறலாம்.

இன்று முதலில் நாம் பார்க்கப் போவது... "கைக்குழந்தைக்கான மசாலா இட்லி"

தேவையானவை:

இட்லி மாவு,
வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு
சிறிதளவு பெருங்காயம், மிளகு தூள்
தேவைக்கேற்ப உப்பு
மிகவும் பொடியாக அரிந்த சிறிய வெங்காயம்

செய்முறை:

மசித்த உருளைக்கிழங்குடன் பொடியாக அரிந்த வெங்காயம், மிளகு தூள் சிறிதளவு, உப்பு, பெருங்காயம் மிகச் சிறிதளவு, உப்பு சேர்த்து நன்கு பிசறி வைத்துக்கொள்ளுங்கள்

இப்போது இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி, முதலில் சிறிதளவு மாவு ஊற்றி பின் இந்த பிசறி வைத்த மசாலாவில் சிறிது எடுத்து வைத்து பின் அதற்கு மேலும் இட்லி மாவினை ஊற்றி வைத்துவிட வேண்டும்.

இவ்வாறே உங்கள் குழந்தையின் தேவைக்கேற்ப ஊற்றிக்கொள்ளலாம். முக்கியமான விஷயம் காரம் அதிகமாகிவிடக்கூடாது கைக்குழந்தைகளுக்கு.அப்புறம் மிளகாய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

இப்படி இட்லி வெந்ததும் குட்டிக்கு கொடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும். பெரிய குழந்தைகளுக்கு சாம்பார் தொட்டுக்கொள்ள வைத்துத் தரலாம் :)

குழந்தையின் வயது கூட கூட அவர்கள் விரும்பும் அளவு காரம் சேர்க்கலாம்.

8 comments:

ஆயில்யன் said...

அட இட்லியில புது ஐட்டம் :)

இந்த லீவுக்கு அம்மாகிட்ட சொல்லி செஞ்சு திங்கப்போற லிஸ்ட்ல சேர்த்தாச்சு !

உங்களோட பதிவுகள் என்னிய மாதிரி குட்டீஸ்களுக்கு நொம்ப்ப யூஸ் புல்லா இருக்கு
கண்டினியூ கண்டினியூ :)

Anonymous said...

இதோட காரட், பட்டாணி கூட சேர்த்துக்கலாம்.
நல்ல இருக்கு நதி.

ஆகாய நதி said...

//
இதோட காரட், பட்டாணி கூட சேர்த்துக்கலாம்.
நல்ல இருக்கு நதி.

//

yes :) வரிசையா ஒவ்வொரு ஐட்டமா வருவோம்... இன்னும் நிறைய இருக்கு :) but பட்டாணி புதுசா இருக்கே! முயற்சி பண்ணிடுவோம் :)

ஆகாய நதி said...

//
அட இட்லியில புது ஐட்டம் :)

இந்த லீவுக்கு அம்மாகிட்ட சொல்லி செஞ்சு திங்கப்போற லிஸ்ட்ல சேர்த்தாச்சு !

உங்களோட பதிவுகள் என்னிய மாதிரி குட்டீஸ்களுக்கு நொம்ப்ப யூஸ் புல்லா இருக்கு
கண்டினியூ கண்டினியூ :)
//

நீங்க குழந்தையா?!!! அப்போ நாங்க.... ம்ம்... ஆபிஸ் போனப்போ நான் தொடர்ந்து வாசிக்கும் பக்கங்களில் கடகமும் உண்டு... இப்பவும் தான்... இப்போ நீங்க எனக்கு கமெண்ட் போடுறது சந்தோஷமா இருக்கு :)

நன்றி ஆயில்யன்... :)நீங்களும் இந்த இட்லிய சாப்பிடலாம்...

goma said...

உங்கள் வலைப்பூவை என் அக்கா மகளுக்குத் திசைதிருப்பியிருக்கிறேன்.அவளும் 6 மாதக் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம் எப்படி கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாள்

ஆகாய நதி said...

//
உங்கள் வலைப்பூவை என் அக்கா மகளுக்குத் திசைதிருப்பியிருக்கிறேன்.அவளும் 6 மாதக் குழந்தைக்கு என்ன கொடுக்கலாம் எப்படி கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறாள்

//

ரொம்ப நன்றிங்க :)

உங்கள் அக்காள் மகளின் குழந்தைக்கு என் வாழ்த்துகள்! :)

6வது மாதத்தில் செரலாக், அரிசி+ஜவ்வரிசி+சம்பா கோதுமை மட்டும் கலந்த கஞ்சி கொடுக்கலாம்.

ஆனால் தாய்ப்பாலை விடமால் கொடுப்பது நல்லது :)

Sasirekha Ramachandran said...

sooperu!!!

ஆகாய நதி said...

@sasi
:)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger