நான் சுட்டி டிவி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பதுண்டு.... அப்படி பார்த்ததில் சில நாடக நிகழ்ச்சிகள் குழந்தைகள் பார்க்கும் விதத்தில் உள்ள கதைகள் அல்ல :( காதல் கதைகள்.கதையே காதலிப்பது பற்றியது தான்....
அதிலும் ஒரு கதை ஒரு நாட்டின் பட்டத்தரசி மன்னனுக்கு(அவள் கணவன்) விசுவாசமான ஒரு பணியாளைக் காதலிக்கிறாள், அவன் காதலை ஏற்காததால் அவனைப் பழி வாங்க திட்டம் போடுகிறாள் ....
இம்மாதிரியான கதைகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா? குழந்தைகளுக்கு ஏற்றபடி எத்தணையோ நிகழ்ச்சிகள் அமைக்கலாமே! மேலும் நம் நாட்டுக் கலாச்சாரத்தினை விளக்கும் விதத்தில் எத்தணையோ கதைகள் நம் வரலாற்றிலேயே இருக்க உதாரணத்திற்கு தெனாலி ராமன் கதைகள், மகாபாரதத்தின் கிளைக் கதைகள், நீதிபதி மரியாதை ராமன் கதைகள்.... இவற்றினை காட்டலாமே.... :)
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
6 comments:
ஆகாயநதி,
காதல் கதைகளை ஒரேயடியா ஒதுக்கிட முடியாதுங்க.. நான் குழந்தையா இருக்கும்போது நிறைய காதல் கதைகளைத் தான் கேட்டதா நினைவு, நம்ம ராமாயணம், விக்கிரமாதித்தன் கதைகள் எல்லாம் காதல் தானே.. ஆங்கில இலக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த சிண்ட்ரெல்லா போன்ற தேவதைக்கதைகள் கூட சரியான காதல் கதைகள் மட்டும்தான்..
நீங்க குறிப்பிட்டுள்ளது போன்ற முறைசாரா காதலை எல்லாம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தாமல் இருக்கலாம் தான். அது சுட்டி டீவியில் வந்தா தப்பு தான்..
நான் சுட்டி டீவி பாத்ததில்லை. ஆனாலும் உங்கள் கேள்வி நியாயமானதுதான்?
குழந்தைகளுக்காக ப்ரத்யேகமான சீரியல்களோ, படங்களோ இல்லாதது பெருங்குறையே!
ஆகாயநதி நீங்க சொல்லி இருக்கறது ஒருவகையில் சரிதான்..ஆனா உதாரணமா நீங்க கொடுத்ததெல்லாம் கூட குழந்தைக்கு சரியா நேரா புகுத்தமுடியாத கதைகள் தான் :) எல்லாத்தையுமே நாம இன்னொரு கோணத்துல சொல்லித்தரவேண்டிய கட்டாயமுள்ளது தான்.. சுட்டி டீவி இங்க வரதில்ல. பெரிய ரிலீப் தான் ஆனா வேற டிஷ் க்கு மாற என்ணம் அதுல வரும் .. பயம்மாத்தான் இருக்கு...
தங்கள் ஆதங்கம் சரியே..
ஜெடிக்ஸ் பாக்கிறதுக்கு இது பெட்டர் இல்லையா???
நான் சுட்டி , ஜெடிக்ஸ் ரெண்டும் பாக்கிறதில்லை இப்போதைக்கு.
//
ஜெடிக்ஸ் பாக்கிறதுக்கு இது பெட்டர் இல்லையா???
நான் சுட்டி , ஜெடிக்ஸ் ரெண்டும் பாக்கிறதில்லை இப்போதைக்கு.
//
ஆமாம் இரண்டுமே குழந்தைகள் பார்க்ககூடியதல்ல உங்களைப் போன்ற வயதில் மிகவும் பெரியவர்கள் வேண்டுமானால் பொழுதுபோக்கிற்காக பார்க்கலாம் :)
Post a Comment