என் ஆஃபிஸின் கீழே ஆல்ஃபா கிட்ஸ் என்னும் குழந்தைகள் காப்பகம் இருக்கிறது. இன்று அங்கு இருக்கும் குழந்தைகளின் டேலண்ட் மீட் டே. குழந்தைகளின் குதூகலக் குரல் மைக் வழியே மூன்றாவது மாடியில் கேட்டது. ஆர்வத்தை அடக்க முடியாமல், ஆபிஸில் அனுமதி கேட்டுக்கொண்டு கீழே போய் பார்த்தேன்.
யப்பா, குழந்தைகள் குழந்தைகள். விதமான விதமான ட்ரஸ்ஸில். தேவதை மாதிரி ஒன்று, கரடி வேஷம் போட்டு, புலி வேஷம், புடவை கட்டிக்கொண்டு சில வால்கள் இன்னும் ஏகப்பட்ட அலங்காரங்கள். குழந்தைகள் அத்தனையும் மைதா மாவில் பிடித்து வைத்தாற் போல வெள்ளை வெளேரென்றும், செக்கச் செவெலென்றும்.
ஏற்கனவே தயார் படுத்தி வைத்திருந்தாலும், மைக் அருகே வந்து ரைம்ஸ் சொல்லும்போது திக்கியது, இரண்டு வரிக்கு மேல் சில குழந்தைகள் பாடவே யில்லை, ஒன்று கணீர் குரலோடு தெள்ளத் தெளிவாக பாடி அசத்தியது. இன்னொன்று வாஷிங்க் டே ரைம்ஸுக்கு, புடவை கட்டிக்கொண்டு, விக் கொண்டை வைத்துக்கொண்டு, ஒரு சின்ன கர்ச்சீப்பை துவைப்பது போல் ஆக்ஷன் செய்து கொண்டே பாடியது அபாரம்.ஒரு பையன் ரெயின் ரெயின் ரைம்ஸ் சொல்வதற்காக குடையோடு வந்து, பாவம் ஓவென்று ஒரே அழுகை.கரடி ட்ரஸ்ஸில் இருந்த பையன் அழுது கொண்டே இருந்ததில் கன்னமும், கண்களும் சிவந்து போயின. ப்ளாக் அண்ட் ரெட் காம்பினேஷனோடு இருந்தான் பார்ப்பதற்கு.
வழக்கமான குழந்தைகளின் வால்தனங்களை கேட்டு பார்த்து பழகியிருந்தாலும், இந்த அனுபவம் எனக்கு சற்றே புதிதாகத்தான் இருந்தது, அந்தக் குழந்தைகளைப் போலவே.
6 comments:
வாழ்த்துகள் உங்களுக்கு
இப்படி ஒரு அழகிய அனுபவம் பெற்றதற்கு ...
ஜூப்பர்!
குழந்தைகளைப் பார்த்து
ரசிப்பது ஒரு இனிய அனுபவம்!!
:)
எப்படி இருந்தாலும் குழந்தைகள் அழகுதான் "அழகு குட்டீஸ்"
குழந்தைகளின் டேலண்ட் மீட் டே. wow!!
Post a Comment