தந்தையர் தினத்தை கருத்தாகக் கொண்டு இடுகையிட்டு கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்! இந்த ஜூன் ஜுலையென்றாலே பள்ளிகள் ஆரம்பித்து விடும். புது பள்ளிக்கு சேர்க்கைக்கு அலைவது, எந்த பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்று நமக்குள் பலவித கருத்துகள்/ எண்ணங்கள்! பள்ளிக்கு இல்லையென்றால் கூட, டே கேர் செண்டர்கள் அல்லது ப்ளே ஸ்கூல்கள்!பள்ளிக்கூடம்/டே கேர்/ப்ளே ஸ்கூல்கள் இவற்றை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு கேள்விகள், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் - இந்த மாதம் இவற்றைக் குறித்து நாம் அனைவரும் பேசுவோமா?!
குழந்தை இரண்டு வயதானாலே நமக்குள் வரும் கேள்வி எப்படிபட்ட ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புவது அல்லது பள்ளிக்கு அனுப்புவது? என்னென்ன தகுதிகள் இருக்கும் இடத்திற்கு நாம் நமது குழந்தைகளை அனுப்புவோம்? அல்லது என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறோம்? உங்கள் மகள்/மகன் படிக்கும் பள்ளியைத் தேர்ந்தெடுத்த காரணங்கள் என்ன? நீங்கள் பள்ளியின் பெயரை வெளியிட வேண்டிய அவசியமில்லை, ஆனால் ஏதோவொன்று உங்களுக்குள் தோன்றியிருக்கும் அல்லவா, இந்த பள்ளியில் நமது மகள்/மகன் சேர்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள், நன்றாக வளருவார்கள் என்று..அதை எங்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் உபயோகப்படும்.
உங்கள் குழந்தைகளை இன்னும் பள்ளியில் சேர்க்கவில்லையெனில் என்ன மாதிரி பள்ளி/டே கேர்/ப்ளே ஸ்கூல்-ஐ தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்! என்ன மாதிரி போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, இடம் கிடைப்பதில் இருக்கும் சோதனைகள், ஏன் ஒரு குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் இவ்வளவு போட்டி, என் ஆர் ஐ மக்களுக்கு மட்டுமான பள்ளிகள், குளிரூட்டபட்ட பள்ளிக்கூட அறைகள் பற்றி உங்கள் கருத்து...எல்லாவற்றையும் பேசுவோம்!அம்மாக்கள் வலைப்பூ வாசகர்களும் பங்களிக்கலாம்.
லேபிள்கள் உங்கள் பெயர் மற்றும் என் குழந்தைக்கான பள்ளி!
பி.கு: அடுத்த மாதத்திற்கான தீம்கள் வரவேற்கப்படுகின்றன!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
9 comments:
me tha 1st
மீ தி செகண்டு........
சென்னையை விட்டு வெளியே இருப்பதால் என்னால் இந்தப்பதிவுக்கு கருத்து சொல்ல முடியவில்லை.
ஏன் முல்லை,
நம் பதிவுலகில் ஒவ்வொரு மாவட்டத்துக்காரங்களும் இருக்காங்க.
அவங்களை அந்தந்த மாவட்டத்தில் நல்ல பள்ளி எது? ஏன் அப்படின்னு ஒரு தொடர் பதிவு போல போடச் சொல்லுங்களேன்.
சென்னையைத் தவிர மற்ற ஊர்க்காரவுகளுக்கு இது உதவியாய் இருக்கும்.
நன்றி ஜீவன், லவ்டேல் மேடி!
நன்றி புதுகை, நான் எங்கேயுமே சென்னை சேர்ந்தவங்க மட்டும்னு சொல்லலையே! நீங்க வசிக்கும் ஏரியான்னுதானேப்பா சொல்லியிருக்கேன்! பொதுவா, நீங்க வசிக்கற இடத்துலே பல பள்ளிகள் இருக்கும். அதுலே உங்க குழந்தைகளுக்கானதை எப்படி தேர்ந்தெடுத்தீங்கன்னு பகிர்ந்துக்கிறதுதான் நோக்கம்! ஒருவேளை ஏரியான்ற சொல் சென்னைக்கு மட்டும்தான் நினைச்சுட்டீங்க போல.. ;-)
நல்ல தலைப்பு முல்லை
இப்போவே அமித்துவுக்கு ஸ்கூல் சர்ச்சிங்க்.
எனக்கு ரொம்பவும் பயனா இருக்கும் இதுகுறித்தான மற்றவர்களின் கருத்து.
I put my kids in Ganesh Mec School Velachary. It was near my house and my 1st kid was said be a month underage by dav. The School is good.My 1st kid is 2nd Std and 2nd kid has joined pre-kg. Best thing was only 10 student in pre-kg. The school is open for any good suggestion (we made few every year) and kid and parent friendly. this year they got Smart lass(implemented by Educom)
Hope metric board is not hinder their growth...
VS Balajee
F/o Nisha and Ananya
//குழந்தை இரண்டு வயதானாலே நமக்குள் வரும் கேள்வி எப்படிபட்ட ப்ளே ஸ்கூலுக்கு அனுப்புவது அல்லது பள்ளிக்கு அனுப்புவது? //
ரெண்டு வயசிலேயே,.. வலிக்குது லைட்டா,..
நன்றி அமித்து அம்மா!
thanks VS Balajee, kudos to the school and the parents!!
நன்றி jothi, ஏங்க, எல்லோரும் குழந்தை பிறக்கறதுக்கு முன்பே திட்டமிடும்போது நான் இரண்டு வயசுன்னு சொல்லிட்டேன்னா?! பொதுவாக இரண்டு வயதிலிருந்து பள்ளிக்கான அட்மிஷனுக்கு அலைந்தால்தான் மூன்று/மூன்றரை வயதில் சேர்க்க முடியும்! எ.காக இந்த ஆகஸ்டில் இரண்டு வயதாகும் ஒரு குழந்தைக்கு டிசம்பர்/ஜனவரியில் (பொதுவாக அப்ளிகெஷன் கொடுக்கும் நேரம்) அட்மிஷன் வாங்கினால்தான் வரும் ஜூனில் சேர்க்க முடியும்.
ஏதோ சும்மாதான் பின்னூட்டம் இட்டேன்.தெளிவான பதிலுக்கு மிக்க நன்றி சந்தன் முல்லை. எனக்கு உண்மையிலேயே பயமாகத்தான் இருக்கிறது. என் குழந்தைக்கு முதல் தேவையாக நான் கருதுவது communication மற்றும் CBSC. குழந்தைக்கு நான் பாடங்களை திணிப்பதை வெறுக்கிறேன். ஆனால் இன்றைய சூழ்னிலையில் இது நடக்காது போல இருக்கே? மாண்டேசரி கல்வி முறையை பற்றி உங்களுக்கு ஏதாவது idea இருக்கா? 4 வருடம் computer science படித்து விட்டு கம்ப்யூட்டர் சர்வீஸ்க்கு ITI ஆளை கூப்பிடும் இந்த மதிப்பெண் கல்விமுறை எரிச்சலாக இருக்கிறது,..
Post a Comment