மோதிரம்:
சிறு குழந்தைகளுக்கு நகைகளை மாட்டிக் காட்சி கூடமாக்க வேண்டாம்.கை விரலில் போடப்படும் மோதிரம் வேண்டவே வேண்டாம். ஏனெனில் குழந்தைகள் எப்போதும் கைகளை சப்பிக் கொண்டே இருக்கும். மோதிரம் சில சமயங்களில் வாய்க்குள் போய்விடவும் வாய்ப்புள்ளது.
மேலும், மோதிரம் கீழே விழுந்து காணாமல் போய்விட்டால் கூட, குழந்தை முழுங்கிவிட்டிருக்குமோ என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும்
மேலும், மோதிரம் கீழே விழுந்து காணாமல் போய்விட்டால் கூட, குழந்தை முழுங்கிவிட்டிருக்குமோ என்று பயந்து கொண்டே இருக்க வேண்டும்
மோதிரத்தில் கல் வைத்து இருக்கும். அதுவும் மிகவும் தவறு. தற்செயலாக அந்த கல் மட்டும் கூட குழந்தையின் வாய்க்குள் போய்விட வாய்ப்புண்டு.மேலும், மோதிரத்தின அடிப்பாகத்தில் அழுக்கு சேர்ந்து விடும். அந்த விரலை சப்பும் போது குழந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்காதீர்கள்
ஸ்டிக்கர் பொட்டு:
சின்ன குழந்தைகளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைக்க வேண்டாம். சின்ன குழந்தைகளின் அம்மாக்களும்ஸ்டிக்கர் பொட்டு குழந்தைகள் பெரியவராகும் வரை வைக்க வேண்டாம். சில குழந்தைகள் உடன் படுத்து இருக்கும் போது அம்மாவின் முகத்தை தடவி கொண்டுஇருக்கும் போது பொட்டை எடுத்து அதன் வாயில் அல்லது மூக்கில் வைத்து கொண்டு விடும் நமக்கு தெரியாமலே.
ஜிகு ஜிகுனு டால் அடிக்கும் ட்ரெஸ்:
நம்ம சீதோஸ்ஷணத்திற்கு காட்டனே சிறந்தது. ஜிகினாக்கள் அவர்களின் மெல்லிய தோலினை குத்தும்.
கைக்கெட்டும் தூரத்தில் கத்தி, ப்ளேடு போன்ற ஷார்ப்பான பொருள்களை மறந்தும் வைக்க வேண்டாம்.
கைக்கெட்டும் தூரத்தில் கத்தி, ப்ளேடு போன்ற ஷார்ப்பான பொருள்களை மறந்தும் வைக்க வேண்டாம்.
செல் போன்:தூங்கும் போது செல் போனை படுக்கையில் வைக்க வேண்டாம்.
2 comments:
உபயோகமான இடுகை! நன்றி!
நல்ல பதிவு. கையில் வளையல் போடும் சிறு குழந்தைகளுக்கு காதில் திருகு உள்ள கம்மல் தவிர்க்கலாம். பல வேளைகளில் வளையல் கம்மலில் மாட்டிக் கொண்டு மிகுந்த துன்பம் தரும்
Post a Comment