நம் குழந்தைகளை சாப்பிட வைக்க:
ஸ்டார் தோசை,பூ தோசை, சப்பாத்தியில் நிலா வடிவம்,முக்கோணம்,சதுரம், பூரியில் ஸ்டார், குட்டி பூரி, கேரட் சாதம், தேங்காய் சாதம் என கலர்ஃபுல்லான சாதங்கள், அவ்வொப்பொழுது சாப்பிடும் தட்டையும் புதிது புதிதாக கொடுக்கலாம், இலையில் பரிமாறலாம் ...அப்புறம் பாருங்க சாப்பாடு எப்படி பறக்கிறதுனு.
ஹோம் வொர்க் செய்ய வைக்க:
படிக்கும் முன் சாமி ரூமில் கொஞ்ச நேரம் உட்கார வைத்து சாமி கும்பிட வைத்து பின் நல்ல பிள்ளைகளை தான் ஆஞ்சனேயருக்கு பிடிக்கும்..முருகனுக்கு பிடிக்கும் என்று கூறி, அவர்களுக்கு பிடித்த பேனா, பென்சில், கலர் பென்சில், ரப்பர் சர்ப்ரைசாக அவ்வப்போது கொடுத்து, இடையிடையே ஜோக் சொல்லி, அவர்கள் ஸ்கூலில் நடந்த விஷயங்களை பேசி, ஹோம் வொர்க் செய்ய வைத்தால் அவர்களுக்கு சுமையே தெரியாது..
அதிகமாக டி.வி பார்ப்பதை குறைக்க:
ரிலாக்ஸான நேரங்களில் கார்டனில் பொழுது போக்க பழக்கவும், அட்லீஸ்ட் மொட்டை மாடியில் இரண்டு தொட்டியில் செடி வைத்து தினம்
கண்காணிக்க செய்தால்..எத்தனை மொட்டு, எத்தனை பூ என்று மனசு போகும்...மீன் வளர்த்தல், நாய் வளர்த்தல் என்று பிஸி ஆக்கினால் அவர்களுக்கு ஒரு இண்ட்ரஸ்ட் வந்து விடும். நாமும் டி.வி..சீரியலில் மாட்டிக் கொள்ள கூடாது.,
பெரியவர்களிடம் மரியாதை ஏற்படுத்த:
நல்ல நாள், பெரிய நாளில் தனிகுடித்தனம் இருந்தாலும் பெரியவர்கள் இருக்கும் இடத்திற்கு கூட்டி போய் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
தாத்தா, பாட்டி முன்னாடி கால் நீட்ட கூடாது, சத்தமாய் பேசகூடாது, என்னிடம் சொன்ன எல்லா ஸ்கூல் விஷயத்தையும் அவர்களிடமும் கூறுமாறு செய்தல் வேண்டும்.
உதவும் குணத்தை ஏற்படுத்த:
தெருவில் விளக்குமாறு, கீரை போன்ற பொருள்களை விற்கும் பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளையும் தூக்கி வருவர். அவர்களுக்கு
நம் குழந்தைகளை விட்டே அவர்களின் பொருள்களை கொடுக்க வைக்க வேண்டும். விளையாட்டு சாமான், உடைகள், நோட்டுகள், கலர் பென்சில்கள் என்று கொடுக்கலாம். உதவும் பொழுது ஏற்படும் சந்தோஷம் எத்தகையது என்பதை அவர்களே உணரட்டுமே.
10 comments:
பாராட்டுக்கள் அமுதா,
மிக அருமையான பாயிண்டுகளை சொல்லியிருக்கீங்க.
நல்ல பதிவு.
ரொம்ப நல்லா இருந்தது . பயனுள்ள பதிவு
அருமையாக இருந்தது உங்கள் தகவல்களும், அதை சொன்ன விதமும்.....
வாழ்த்துக்கள்..... தொடருங்கள்.....
அப்படியே என் வலைப் பக்கமும் வந்து போங்க.....
///ஸ்டார் தோசை,பூ தோசை, சப்பாத்தியில் நிலா வடிவம்,முக்கோணம்,சதுரம், பூரியில் ஸ்டார், குட்டி பூரி, கேரட் சாதம், தேங்காய் சாதம் என கலர்ஃபுல்லான சாதங்கள், அவ்வொப்பொழுது சாப்பிடும் தட்டையும் புதிது புதிதாக கொடுக்கலாம், இலையில் பரிமாறலாம் ...அப்புறம் பாருங்க சாப்பாடு எப்படி பறக்கிறதுனு///
அனைத்தும் பயனுள்ள தகவல்கள்.
இப்போதைக்கு இது தான் தேவை.
ஏனெனில் இரண்டரை வயது தான் ஆகிறது என் மகளுக்கு.
1.காலை ஒரு இளநீர் 5 ரூபாதான் வாங்கி ரெண்டு ஸ்ட்ரா வாங்குங்க. 1 2 3 சொல்லி நீங்க ஒரு ஸ்ட்ரா வாயிலே வச்சுக்கனும். ஆனா குடிக்க கூடாது. மனனோ மகளோ குடிக்கட்டும்
2. காலை ஒரு 8 மணிக்கு சின்ன கிண்ணத்திலே திக்கா பசும்பால் காய்ய்ச்சு ஜீனி போடாம கொடுங்க"ஜீனி போட்டா நாக்கு பூச்சி வர வாய்ப்பு இருக்கு)
3. காலை 10க்கு கொஞ்சமா குழைய வச்ச சாதம் கூட பருப்பு போட்டு நல்லா கடைஞ்சு கொஞ்சம் முலைகீரை சேர்த்துக்கனும் - ஒரே அடி மிக்சில எல்லாம் சேர்ந்து 1 கிண்ணம் தான் வரனும்
அப்படியே நாலுசாத்து வாயிலே. அதுக்கு நாம டான்ஸ் ஆடினா கூட பரவாயில்லை
4. 11 மணிக்கு குழந்தையை எழுப்பி உச்சா விடனும்
5. 12 மணிக்கு மதர் பீடிங்கா இருந்தா பால் கொடுக்கவும் அம்மா வேலைக்கு போவதா இருந்தா அபிஅப்பாவின் நூககம் பதிவுக்கு போய் எப்படி சேமிப்பது தாய்ப்பாலைன்னு பார்க்கவும். அதை அழகான வெண்சங்கில் கொடுக்கவும்.
6. மதியம் 3 மணிக்கு தூங்கினா கூட எழுப்பி நல்லா சுத்தி சுத்தி ஆட்டம் போடவும். முடிஞ்சா டாண்ஸ் ஆடவும்(அப்பதான் இரவு நல்லா தூங்கும்)
7. இரவு 7க்கு அழகா காத்து வாங்க நல்ல கிரவுண்டுக்கு கூட்டி போகவும்
7. இரவு ஜாக்கிரதை மைல்டு புட் அதாவது பேரக்ஸ் கொடுங்க கொஞ்சமா பின்ன மதர் பீடிங்
8. இரவு 11 மணிக்கு உச்சா துணி மாத்துங்க
9. 3 மணிக்கு ஒரு தடவை மதர் பீடிங் பின்ன உச்சா துணி மாத்தனும்
உங்க குழந்தை கொழு கொழு பேபிக்கு நான் கேரண்டி
இப்படிக்கு
அபிஅம்மா
உங்கள் பதிவுகள் அருமை தொடருங்கள்.....
வாழ்த்துக்கள்....
நல்ல பதிவு!
//ஸ்டார் தோசை,பூ தோசை, சப்பாத்தியில் நிலா வடிவம்,முக்கோணம்,சதுரம், பூரியில் ஸ்டார், குட்டி பூரி, கேரட் சாதம், தேங்காய் சாதம் என கலர்ஃபுல்லான சாதங்கள், அவ்வொப்பொழுது சாப்பிடும் தட்டையும் புதிது புதிதாக கொடுக்கலாம்//
எங்க பாப்பா kite இது எல்லாம் ஒரு வாரம் varai thaan edupattuchchu. piraku palaiya படி aarambichutaa......
நன்றி அமுதா.
அப்பாக்களும் படிக்கலாம்.
Post a Comment