Tuesday, February 3, 2009

அம்மாக்கள் கவனத்திற்கு.....

நானும் ஒரு குழந்தைக்குத் தாய் என்னும் முறையில் நான் இது நாள் வரை குழப்பத்திலேயே செய்து வந்த சில பழக்கங்களுக்கு சரியான தீர்வு கிடைத்துவிட்டது :)

நான் கூறுவது குழந்தைகள் பராமரிப்புப் பற்றியது. பொழிலன் பிறந்ததும் பெரியவர்கள் ஒவ்வொருவரும் பொதுவான சில பழக்கங்கள் மற்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பழக்கவழக்கங்களை குழந்தைக்கு செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தினார்கள். என்னைப் பொறுத்தவரை நான் தற்கால மருத்துவர்கள் கூற்றையே அதிகம் நம்புவேன். அக்கால தட்பவெப்ப நிலை, உணவுப் பழக்கங்கள் எல்லாம் இப்போதையவற்றை விட மாறுபட்டவை.
அதனாலேயே எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தது. அதுவும் நல்லாதாய் போனது.
மருத்துவர்கள் சில பழக்கங்களை ஆதரித்தாலும் பல பழக்கங்கள் தேவையற்றவை ஆபத்தானவை என்றே கூறுகிறார்கள். அதன் படி நான் கற்றுக்கொண்டவற்றை உங்களுக்கும் கூறுகிறேன்.
வருமுன் காப்பதும், எச்சரிக்கையும் குழந்தைகள் விஷயத்தில் அதிகம் தேவை.

* குழந்தைகள் கண்களில் எண்ணை விடுதல் கூடாது. இன்னமும் பலர் அவ்வாறு செய்வதை
நேரிலேயே கண்டிருக்கிறேன்.

* வாயினுள் கைவிட்டு சளி எடுத்தல் தவறான சுகாதாரமற்ற செயல்

* குளித்தபின் காதுகளை குழந்தைகளுக்கென்றே விற்கப்படும் தரமான காது துடைப்பான்
கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். காதினையும் மூக்கையும் ஊதிவிடுதல் நல்லதல்ல.

* 3,4 மாதத்தில் திட உணவு தருதல் கூடாது; பால் போதாது என்று எண்ணினால் தாய்மார்கள்
உணவின் அளவினை அதிகப்படுத்தினாலே போதும். போதிய அளவு தாய்பால் கிடைக்கும்.

* முடிந்தவரை பிஸ்கட்டுகளை தவிர்க்க வேண்டும்.

* 6 மாதம் வரை கிரைப் வாட்டர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அதற்கு மேலும்
தேவைப்பட்டால் மட்டுமே தரலாம்(அ) மருத்துவரின் ஆலோசனைப்படி தரலாம்;
நாள்தோறும் கொடுக்கவேண்டியதில்லை.

* விரல் சப்புவதை குழந்தை தானே மறந்துவிடும், அதற்காக நீங்கள் எந்த முயற்சியும் எடுக்க
தேவையில்லை, அதைத் தடுக்கும் போதுதான் அதிகமாகிறது. அதற்கு பதில் டீதர் போன்ற
பொருட்களை அவர்கள் கையில் கொடுக்கலாம்(அ) வேறு விளையாட்டுகளில் அவர்கள்
கவனத்தை மாற்றலாம்.

* வாரம் 1முறை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டலாம்.

* குழந்தைக்கு மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் 3நாட்கள் வரை காத்திருக்கலாம். அதற்கு
மேலும் போகவில்லயெனில் வெது நீர் கொடுத்துப் பார்க்கலாம் பின் மருத்துவரை அணுகலாம்.
அதை விடுத்து சோப்புவிடுதல், வெற்றிலைக் காம்பு விடுதல் போன்ற தவறான செயல்களை
தவிர்க்க வேண்டும்.

* குழந்தைக்கு தாயின் அரவனைப்பு அதிகம் தேவை, ஆதலால் முடிந்தவரை உங்கள்
கைக்குழந்தையை நீங்களே பார்த்துக்கொள்வது அவசியம்.

* 2 வயது வரை தொலைக்காட்சி காண்பிப்பது கூடவே கூடாது.


இந்த விஷயங்களில் தாய்மார்களான நாம் கவனமாக இருப்பது நலம்.

10 comments:

புதுகைத் தென்றல் said...

உபயோகமான பதிவு. எல்லோரின் கவனத்திற்கும் கண்டிப்பாக செல்ல வேண்டிய பதிவும் கூட.

பாராட்டுக்கள்

நட்புடன் ஜமால் said...

இதையும் பாருங்களேன்

உள்ளதுலேயே பெரிய தவறு இதுதான்

\\வாயினுள் கைவிட்டு சளி எடுத்தல் தவறான சுகாதாரமற்ற செயல்\\

Sasirekha Ramachandran said...

ஐயோ கேட்க்கவே பயமா இருக்கு.இப்படி எல்லாம் கூடவா செய்கிறார்கள்.

இப்படி செய்பவர்களுக்கு உங்கள் டிப்ஸ் ரொம்ப உபயோகமா இருக்கும்.

வித்யா said...

நான் எழுதலாமென நினைத்தேன். நீங்களே எழுதிவிட்டீர்கள். உரை மருந்தை விட்டுவிட்டீர்களே. என் பையனுக்கு கொடுக்கச்சொல்லி ஒரே தொல்லை.நான் பிடிவாதமாய் மறுத்துவிட்டேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல பதிவு,

பிறக்கும் போது கழுதைப்பால் கொடுப்பாங்களே அத விட்டுட்டீங்க.
அப்புறம் உரம் எடுக்கறேன்னு சொல்லி அப்பா இன்னும் என்னால மறக்க முடியாது.

வர்ஷினி 3 1/2 மாதம் இருக்கும்போது விடாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள். எனக்கு என்ன செய்வதுன்னெ தெரியல். திடீர்னு பக்கத்து வீட்லருந்து ஒருத்தவங்க வந்து குழந்தைய தூக்கிட்டு போய் மூணாவது வீட்டில் இருக்கும் ஒரு பெரியம்மாவிடம் கொடுத்து உரம் எடுக்க சொன்னார்கள். நான் பின்னாலயே வேணாம்னு கத்திக் கொண்டு ஓடுகிறேன். அங்க போனா வர்ஷினியை தலை கீழா தொங்க போட்டு ஆட்டுறாங்க. அய்யோ என்னால தாங்கவே முடியல. அழுது புரண்டு குழந்தைய அவங்க கையில் இருந்து பிடுங்கிக் கொண்டு வந்தேன்.

ஆகாய நதி said...

ஆமாம் இரு விஷயங்கள் விடுபட்டுள்ளன...

உரம் எடுத்தல் ஒரு முரட்டுத்தனமான காரியம். தசைப் பிடிப்பு ஏற்பட்டிருந்தாலே அப்படி உரம் விழும். அதற்கு மருத்துவரை உடனே அணுகுதல் நலம்.

அடுத்ததாக சுக்கு உரசி தருதல் என்பது 6மாதத்திற்கு மேல் செய்யலாம் அதுவும் தாய்ப்பாலுடன் கலந்து குழந்தைக்கு புகட்ட வேண்டும்.

இந்த விஷயங்களை நினைவூட்டியமைக்கு நன்றி மக்கள்ஸ்:)

Anonymous said...

useful tips
http://mahawebsite.blogspot.com/

ச. ராமானுசம் said...

//2 வயது வரை தொலைக்காட்சி காண்பிப்பது கூடவே கூடாது//

Why? Why?

P N A Prasanna said...

Hi good website.
please refer my site and give your suggestions

http://pnaptamil.blogspot.com
http://pnapenglish.blogspot.com
http://pnappix.blogspot.com
http://pnaplinux.blogspot.com

குடும்பம் said...

நல்ல உபயோகமான தகவல்

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger