Monday, February 23, 2009

ஸ்கூலுக்கு ஏன் போகணும்?

அம்மாக்கள் வலைப்பதிவுல எழுதி ரொம்ப நாள் ஆச்சு. என்ன எழுதறதுனு யோசிச்சால் ம்ஹூம் ஒண்ணும் தோணலை. மிஸஸ் டவுட் கொடுத்த ஐடியாதான் நினைவுக்கு வந்தது. அதனால் "கதை நேரம்" என்று ஒன்று போட்டு விட்டேன்.

என்கிட்ட குழந்தைகள் இப்பவும் விரும்பி கேட்கிற என் கற்பனை கதை இது. என் பொண்ணு ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடிச்சப்ப உருவாகி அவளை ஸ்கூலுக்கு தயார் செய்ய வச்ச கதை. என் தோழி அவள் பொண்ணு ஸ்கூல்ல சொல்லி குட்டி குழந்தைகள் விரும்பி இரசித்த கதை. என் வலைப் பதிவுல இருந்து எடுத்து , இணையத்தில் இருந்து படங்களோட போடறேன். உங்க குழந்தைகளுக்குப் பிடிச்சிருக்கானு சொல்லுங்க..


ஒரு காட்டில் ஒரு யானை இருந்ததாம். அது ஒரு நாள், வாக்கிங் போச்சாம். ஒரு முயல் பார்த்ததாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை
சொல்லுச்சாம். "நானும் வரேன்", அப்படீனு முயல், யானை மேல ஏறிக்கிச்சாம்.




முயல் யானை மேல வர்றதை பார்த்து, குரங்கு வந்துச்சாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை சொல்லுச்சாம். நானும் வரேன்", அப்படீனு குரங்கு, யானை வால்ல தொஙகிட்டு வால்தனம் பண்ணிட்டு வர ஆரம்பிச்ச்தாம்.



குரங்கு, பண்ற சேட்டையை, அணில் பார்த்துச்சாம். "யானை அண்ணா, யானை அண்ணா எங்கே போறீங்க?" அப்படீனு கேட்டுச்சாம். "நான் வாக்கிங் போறேன்", அப்படீனு யானை சொல்லுச்சாம். நானும் வரேன்", அப்படீனு அணில், யானை துதிக்கையில் ஏறி விளையாடுச்சாம்.



அப்படியே காட்டில் மயில், குயில், மான் எல்லாம் சேர்ந்து, இயற்கையை இரசிச்சிட்டே போனாங்களாம். திடீர்னு, "உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...." அப்படீனு சத்தம். பார்த்தால், சிங்கம் நின்னுச்சாம்.



"எல்லாரும் எங்க் போறீங்க", அப்படீனு சிங்கம் உறுமுச்சாம். "நாங்க வாக்கிங் போறோம்", அப்படீனு எல்லா மிருகமும் சேர்ந்து கத்துச்சாம். "யானை மேல ஏறிகிட்டு என்ன வாக்கிங்... எல்லாம் இறங்குங்க, நானும் வரேன்.." அப்படீனு சிங்கம் சொல்லிச்சாம்.




எல்லாம் கீழே இறங்கி,ஜாலியா குளத்த்து கிட்ட வந்தாங்களாம். குட்டி முயலுக்கு ஒரே தாகம். ஓடிப் போய் தண்ணில வாய் வச்சுதாம். உள்ள இருந்து ஒரு முதலை வந்துச்சாம்.




"எல்லாரும் எங்க போறீங்க" அப்படீனு முதலை மிரட்டுச்சாம். "நாங்க வாக்கிங் போறோம்", அப்படீனு எல்லா மிருகமும் சேர்ந்து கத்துச்சாம். உடனே முதலை அழ ஆரம்பிச்சதாம். பெரிய மீன் ஒண்ணு வந்துச்சாம்.



அதுவும் எல்லாரும் வாக்கிங் போறாங்கன்ன உடனே அழுதுதாம். எல்லாரும் "ஏன் அழறீங்க" அப்படீனு கேட்டாங்களாம். மீனும் முதலையும், எங்களுக்கும் வாக்கிங் வர ஆசையா இருக்கு, ஆனா நாங்க தண்ணிய விட்டு எப்படி வர்றது" அப்படீனு அழுதுதாம்.எல்லா மிருகமும் அழ ஆரம்பிச்ச்தாம்.

அப்ப யாழ் பாப்பா வந்தாளாம். "எல்லாரும் ஏன் அழறீங்க" அப்படீனு கேட்டாளாம். சிங்கம் காரணத்தை சொல்லுச்சாம். உட்னே யாழ் பாப்பா சிரிச்சாளாம், "இதுக்கா அழறீங்க? நான் ஒரு ஐடியா கொடுக்கட்டுமா?", அப்படீனு கேட்டாளாம். எல்லாரும் "என்ன என்னனு" கேட்டாங்களாம். யாழ் குட்டி சொன்னாளாம், "எல்லாரும் ஜாலியா தண்ணில குதிச்சு நீந்துவோம்". எல்லோருக்கும் சந்தோஷமாம். ஜம்முனு தண்ணில குதிச்சு விளையாடினாஙகளாம்.



யாழ் பாப்பாக்கு மட்டும் எப்படி இது தோணிச்சாம்?
யாழ் பாப்பா புத்திசாலி.

யாழ் பாப்பா ஏன் புத்திசாலி?
சிங்கம் ஸ்கூலுக்கு போகுதா? இல்ல... யானை ஸ்கூலுக்கு போகுதா? இல்ல? மீன் ஸ்கூலுக்கு போகுதா? இல்ல... யாழ் பாப்பா ஸ்கூலுக்கு போறாளா? ஆமாம். அதான் புத்திசாலியா இருக்கா..


10 comments:

அபி அப்பா said...

நல்லாத்தான் இருக்கு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அட அடா!! :)

Sasirekha Ramachandran said...

ஹப்பா...இன்னிக்கி சொல்றதுக்கு எனக்கு இந்த கதை கெடச்சிருச்சு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

யாழ் பாப்பா புத்திசாலி.

யாழ் பாப்பா ஏன் புத்திசாலி?

ஏன்னா அவங்க அம்மா புத்திசாலி.

கதை ரொம்ப அருமை, அத நீங்க சொன்னவிதம், முடிச்ச விதம் அருமையோ அருமை.

அமுதா said...

நன்றி அபி அப்பா
நன்றி முத்துலெட்சுமி-கயல்விழி
நன்றி Sasirekha Ramachandran . குழந்தைக்கு பிடிச்சுதானு சொல்லுங்க..


நன்றி அமிர்தவர்ஷினி அம்மா. ரொம்ப பாராட்டிட்டீங்க. நன்றி...

Deepa said...

ஹையோ! இந்தப் பக்கத்தை இவ்ளோ நாளா மிஸ் பண்ணிட்டேனே!

ரொம்ப நல்ல கதை. அழகா சொல்லி இருக்கீங்க.
படங்களும் சூப்பர்.
நான் குழந்தையா இருந்தபோ எங அக்கா கூட இப்படி நிறைய கதை சொல்லி சாப்பாடு ஊட்டுவாங்க‌.

Sasirekha Ramachandran said...

அமுதா

என்னோட ப்ளாக்ல வந்து பாருங்க உங்க கதையோட பின்விளைவை...:)

"உழவன்" "Uzhavan" said...

ஹா ஹா .. ரொம்ப அருமையான மெஸேஜ் :-)

வாழ்த்துக்கள்!

அன்புடன்,
உழவன்

Unknown said...

excellent story. இது போன்ற கதைகளை ஒரு தனி லேபிளாகத் தொகுத்தால் எங்களை போன்ற பெற்றவர்கள் இதனைப் படித்து அவர்கள் குழந்தைகளுக்கு கதை சொல்ல உபயோகமாக இருக்கும்.

நசரேயன் said...

நல்லா இருக்கு

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger