Tuesday, February 24, 2009

பயணத்திற்க்கு உதவும் checklist

தொலைதூர பயணமாகட்டும், இல்லை அருகிலிருக்கும் ஊர்களுக்கு செல்வதாகட்டும் இந்த பேக்கிங் வேலை ரொம்ப கஷ்டம். எப்படியாவது எதையாவது மறந்துவிடுவோம். அதுவும் கைக்குழந்தைகளோடு பிரயாணம் செய்கையில் ரொம்பவே கஷ்டம். அதற்காக நான் தயாரித்த செக்லிஸ்ட் இது. உங்களுக்கும் உபயோகமாய் இருக்கும் என்ற நம்பிக்கையில்:)

உடைகள்:

(குளிர் பிரதேசமெனில்) உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகள்
(குளிர் பிரதேசமெனில்) இரண்டு ஸ்வெட்டர்கள்
(குளிர் பிரதேசமெனில்) கையுறைகள்
(குளிர் பிரதேசமெனில்) காலுறைகள்
காலணி
நிறைய டயப்பர்கள்
சிறிய டவல்கள்
குழந்தைக்கு பயன்படுத்தும் போர்வை (சிறியது போதும்)

உணவு:

Cerelac - குழந்தைக்கு பிடித்த flavour
பால் பவுடர் (உபயோகிக்கும் பட்சத்தில்)
ஜூனியர் ஹார்லிக்ஸ் (உபயோகிக்கும் பட்சத்தில்)
பிஸ்கட்
நல்ல தரமான பேக்கரியிலிருந்து வாங்கிய muffins (பயணத்தின் போது உதவும்)
சின்ன கப் (cerelac/சாதம் ஊட்ட)
2 அல்லது 3 ஸ்பூன்கள்
சின்ன flask (நான் 500ml வைத்திருக்கிறேன்)
பால் பாட்டில்/ சிப்பர்/ டம்ளர்
சுத்தப்படுத்த சிறிய பிரஷ்

சில பேர் cerelac போன்ற உணவுகளை அப்படியே டப்பாவோடு தூக்கிக்கொண்டு வருவார்கள். இது தேவையில்லாத சுமை. நீங்கள் எத்தனை நாள் தங்கப்போகிறீர்கள், உங்கள் குழந்தை உட்கொள்ளும் அளவை கணக்க்கிட்டு அதை விட ஒரு வேளைக்கு அதிகமாக இருக்கும்படி சின்ன டப்பாக்களில் எடுத்துக்கொள்ளுங்கள். அதே போல் 3/4 அடுக்கு கொண்ட milk dispenser baby shopல் விற்கிறார்கள். இதில் மூன்று வேளைக்குத் தேவையான உணவுகளை எடுத்து வைத்துக்கொண்டால் கரைத்து ஊட்ட வசதியாக இருக்கும்.

மருந்து:

பிரயாணத்திற்க்கு முன் குழந்தை நல மருத்துவரை சந்தித்து நீங்கள் செல்லப்போகும் இடத்தின் தட்ப வெப்ப நிலையை கூறி தகுந்த ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் நீங்களே மருந்து கொடுக்காதீர்கள். ஜுரத்திற்க்கு மட்டும் crocin/calpol syrup கொடுக்கலாம். அதுவும் டாக்டரிடம் கேட்டுவைத்துக்கொள்ளுங்கள்.

சிறிய காட்டன் ரோல்
விக்ஸ் (கண்டிப்பாக மூக்கில் தடவ கூடாது)
Nappy Rash cream

மற்றவை:

Wet wipes
Tissue papers
சிறிய பாட்டில் பாடி வாஷ்
கொஞ்சம் disposable bags. வேண்டாத பொருட்களை/மீந்த உணவுகளை இதில் போட்டு குப்பையில் போட்டுவிடலாம்.

முடிந்தவரையில் சுமையைக் குறைத்துக் கொள்ளுங்கள். தூக்குவது ரங்கமணிகளானாலும் நமக்குத் தான் வீண் சுமை:)
ஏதாவது விட்டுப் போயிருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்:)

11 comments:

pudugaithendral said...

செக்லிஸ்டில் பிள்ளைகளுக்கு மருந்துன்னு சொல்லியிருக்கீங்கல்லா அது ரொம்ப முக்கியம்.

புது இடம் புது டாக்டர் ஒத்துவராமல் பயண கஷ்டப்பட்டவங்க நிறைய பேரை பாத்திருக்கேன்.

சளி, இருமல், ஜுரம் மருந்து கண்டிப்பாய் அவசியம். அது இல்லாமல் பொட்டி கட்டவே கூடாது. இது என் அன்பு வேண்டுகோள்

நட்புடன் ஜமால் said...

நோட்டிங்ஸ்

அப்புறமா தங்ஸ்ட்ட

டெள்ளிங்ஸ் ...

Sasirekha Ramachandran said...

லிஸ்டே வெயிட்டா இருக்கே!!!!!

முரளிகண்ணன் said...

இன்னும் சில வருஷம் கழிச்சு உபயோகப்படும்

அமிர்தவர்ஷினி அம்மா said...

useful info.

அமுதா said...

நல்ல லிஸ்ட்

சந்தனமுல்லை said...

உபயோகமான பதிவு!

Unknown said...

கைகுழந்தை வைத்துக் கொண்டு தனியாக இருக்கும் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ள டிப்ஸ்

சின்னப் பையன் said...

நல்ல லிஸ்ட்...

அப்புறம் அதிலே தங்கமணின்னும் ஒரு எண்ட்ரி போட்டு வெச்சிக்குங்க... மத்த பொருட்களை தூக்கி வர அவரும் கூட வரணுமே!!! ஹிஹி...

"உழவன்" "Uzhavan" said...

அவசரத்துல பயண டிக்கெட்டை எடுக்காம சிலசமயம் கெளம்பிவிடுவதும் உண்டு. :-)

தமிழ்குறிஞ்சி said...

தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கட்டுரைகள் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger