Friday, February 20, 2009

வழிகாட்டுங்கள் ப்ளீஸ்........

இப்போது பத்மாவிற்கு பள்ளி விடுமுறை என்பதால் அவளுக்கு பிடித்ததுபோல்தான் வீட்டில் சமையல் செய்கிறேன்.ஆனால் அவளோ,என்னை பொறுமையின் எல்லைக்.............கே கொண்டுபோய் விடுவாள்.அவள் என்னை டென்ஷன் ஆக்குவது உணவே வேளையின்போதுதான்.
இத்தனைக்கும் நான் பத்மாவிற்கு நொறுக்ஸ் எதுவும் கொடுப்பதில்லை (காலை முதல் மதியம் வரை).ஆனாலும்,சாப்பாடு என்றால் அவளுக்கு எப்படிதான் இருக்குமோ தெரியவில்லை.
சாப்பிடாமல் விடவும் என்னால் முடியாது.....நான் என்னதான் செய்வது.இப்போது நான் இதை எழுதுவதற்கு காரணமே இன்று எனக்கு அவளுடன் நடந்த போராட்டத்தின் பாதிப்பே.
இதுபோல் எனக்கு மட்டும்தான் நடக்கிறதா,இல்லை எனை போன்ற அம்மாக்களும் இங்கே உண்டா?
இவளுக்கு நான் எப்படித்தான் உணவின் மேல் விருப்பத்தைக் கொண்டு வருவது.......
தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!!!!!!!

21 comments:

அமுதா said...

ஹா... ஹா...ஹா... welcome to the club.
எனக்கும் இப்பிரச்னை இருந்தது. வளர வளரத் தான் கொஞ்சம் பரவாயில்லை. அதுவும் அவர்கள் சுவையை அறிந்து...எதை விரும்பி உண்கிறார்கள் , எதனால் என்று ஒரு பெரிய ஆராய்ச்சி நடத்தி (இந்த ஆராய்ச்சி எல்லாம், அவர்களுக்குப் பிடித்த அடுத்த வீட்டு உணவு மற்றும் ஓட்டல் உண்வில் இருந்து...) ஒருவாறு அவர்களுக்குப் பிடித்தததை ஊகிகித்து செய்வதால் கொஞ்சம் பிரச்சனை இல்லை. பிடிக்காத உணவு என்றால் ம்ஹூம், ஒன்றும் செய்ய முடிவதில்லை எனக்கு. குழந்தைகளுக்குப் பிடிக்கும் உணவு என்று கண்ணையும் கருத்தையும் கவருமாறு இருந்த சில உணவு ரெசிபிகள் கூட எனக்கு உதவவில்லை.

Lalitha said...

same problem fr me also...

he s eating out side food..bt the same thing im preparing... bt he s nt eating..

daily peria yudhdham than :-)

Lalitha said...

same problem fr me also...

he s eating out side food..bt the same thing im preparing... bt he s nt eating..

daily peria yudhdham than :-)

அபி அப்பா said...

என்ன கொடுமை பத்மா அம்மா! உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது.

பாருங்க எங்க வீட்டிலே எல்லாம் டாண் டாண் ன்னு பசங்க பத்து பரோட்டா சாப்பிட்டு விட்டு பத்து நிமிஷத்திலே அடுத்த பந்திக்கு ரெடியாடுவாங்க!

என்னவோ போங்க!:-))

புதுகைத் தென்றல் said...

pillaigaluku variety mukkiyam.

parents club il pillaigaulukana unavu recipies iruku. athai try senju parunga.

தாமிரா said...

அமுதா said...
ஹா... ஹா...ஹா... welcome to the club.//

என்ன‌ அமுதா சிரிப்பு? அவ‌ர் எவ்வ‌ள‌வு நொந்து போய் கேட்கிறார்.. பாவ‌ங்க‌.. ம‌ற்ற‌ மெம்ப‌ர்ஸ் உத‌வ‌லாமே..

கெக்கே பிக்குணி said...

எனக்கு ரெண்டு குழந்தைங்க ‍ ரெண்டுமே இப்படித்தான். 5 வயது வரை ரொம்பவே கஷ்டம். அதற்குப்பிறகு, தனித்தனி சுவை வளர்ந்து விடுகிறது. //அவர்களுக்குப் பிடித்தததை ஊகிகித்து செய்வதால் கொஞ்சம் பிரச்சனை இல்லை// அமுதாவுக்கு ரிப்பீட்டு.

1. மொத்தத்தில் அவங்க சாப்பிடலைன்னா நமக்கு டென்ஷன் என்று குழந்தைகளுக்குத் தெரியவே கூடாது.
2. முக்கியமாக‌ மருத்துவர், குழந்தை வயதுக்கேற்ற எடை என்று சொன்னால் உணவுப் பழக்கத்தைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை.

வளரும் வயதில் சிறு சிறு தீனிகள் கொடுத்தே ஆக வேண்டும். இங்கே பள்ளிகளில் தீனி நேரம் உண்டு என்பதால் வீட்டில் கட்டாயம் அந்த நேரத்துக்குக் கொடுக்கிறேன் (இப்போ, அதுகளே மேய்ந்து விடுகின்றன;-) எத்தனை/என்ன தீனி சாப்பிடுகிறார்கள் என்று கண் வைத்துக் கொள்வேன்). இதற்கு முக்கிய காரணம்: பசி / தூக்கம் இவற்றினால் குழந்தைகள் சாப்பிடப் படுத்துவார்கள் (என்பது என் எண்ணம்). தீனி என்றால் காரட் போன்ற 'அப்படியே சாப்பிடுவேன்' காய்கள், சிறு பிஸ்கட்டுகள், அத்துடன், 'அவர்களுக்குப் பிடித்தது, அவர்கள் கைபட்டதால் இனித்தது'ன்னு பில்டப் கொடுத்து (வீட்டுல எல்லா பெரியவங்களும் பில்டப் கொடுக்கணும்) குழந்தைகள் 'உதவி'யோடு செய்த தின்பண்டங்கள்... போன்றவை.

சாப்பிடும்போது கதை(இந்த பழக்கத்தை ரொம்பத் தொடராதீர்கள்), 'ஹெலிகாப்டரி'ல் வரும் உணவு, 'நீ எனக்குப் பிடித்ததை எல்லாம் சாப்பிட்டுடுறே, எனக்கு ஒண்ணுமே இல்லை' என்ற பெற்றோரின் பொய்க் கண்ணீர், 'புஜத்தில் பலமே இல்லை அதால் தான் உன்னால் தூக்க முடியவில்லை' (ஹனுமான் / கிருஷ்ணரின் குழந்தைக் கதைகள் மிகவே உதவும்).... இருக்கவே இருக்கு!

இதுவும் கடந்து போக - வாழ்த்துகள்!

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

தமிழ் பிரியன் said...

உலகத்துல கஷ்டமான கேள்வியைக் கேட்டு இருக்கீங்க..:)
(இப்ப தான் அனுபவிச்சுட்டு வந்து இருக்கேன்.. :) )
அம்மாக்கள் ரொம்ப நல்லவங்கப்பா.. :)

Sasirekha Ramachandran said...

//கண்ணையும் கருத்தையும் கவருமாறு இருந்த சில உணவு ரெசிபிகள் கூட எனக்கு உதவவில்லை//

அதேதான் இங்கயும் :(

Sasirekha Ramachandran said...

//daily peria yudhdham than :-)//
yes.i have to make her eat atleast veggies.

Sasirekha Ramachandran said...

//பாருங்க எங்க வீட்டிலே எல்லாம் டாண் டாண் ன்னு பசங்க பத்து பரோட்டா சாப்பிட்டு விட்டு பத்து நிமிஷத்திலே அடுத்த பந்திக்கு ரெடியாடுவாங்க!//

அட!அதெப்படி?வீட்ல கேட்டு சொல்லுங்களேன்..........:-)

Sasirekha Ramachandran said...

//என்ன‌ அமுதா சிரிப்பு? அவ‌ர் எவ்வ‌ள‌வு நொந்து போய் கேட்கிறார்.. பாவ‌ங்க‌.. ம‌ற்ற‌ மெம்ப‌ர்ஸ் உத‌வ‌லாமே..//

ஆமாங்க.ரொம்ப பீலிங்க்ஸா இருக்கு.

Sasirekha Ramachandran said...

//1. மொத்தத்தில் அவங்க சாப்பிடலைன்னா நமக்கு டென்ஷன் என்று குழந்தைகளுக்குத் தெரியவே கூடாது.//
இததான் செய்து பாக்கணும் மொதல்ல.அதையும் செய்றேன்!!!

//இதுவும் கடந்து போக - வாழ்த்துகள்!//
மிக்க நன்றி!!!

Sasirekha Ramachandran said...

//அம்மாக்கள் ரொம்ப நல்லவங்கப்பா.. :)
//
aamappa!!!

Sasirekha Ramachandran said...

//pillaigaluku variety mukkiyam.//
இன்னும் கொஞ்சம் விதவிதமாக செய்து பார்க்கிறேன்.

Deepa J said...

நானும் இந்த‌ப் பிர‌ச்னையை ச‌ந்திப்பேன் என்று நினைக்க‌வே இல்லை. என் ம‌க‌ளுக்கு ஒரு வயது ஆக‌ப் போகிற‌து. போன‌ மாத‌ம் வ‌ரை கூட ஒழுங்காகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இப்போது ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிட வைப்பதற்குள் படாத பாடு படுகிறேன். உடம்புக்கு ஒன்றும் இல்லை. லேசாகச் சளி இருக்கிற‌து.

அதுவும் பாலைக் க‌ண்டாலே வெறுக்கிறாள். (Lactogen தான் பிடிக்கவில்லை என ஆவின் பாலும் கொடுத்துப் பார்த்தேன்) பாட்டில் மாற்றி சிப்பர், மறுபடி பாட்டில் என்று என்னென்னவோ செய்து பார்த்து விட்டேன். பசிக்கு டாக்டர் கொடுத்த மருந்தையும் ஒரு வேளை கொடுக்கிறேன். என்ன‌ செய்வ‌து?

afrine said...

நானும் இதே நிலைமையில்தான் இருக்கேன். எனக்கும் வழிகாட்டுங்கள். 1 1/2 வயது குட்டி சாப்பிடாமல் மெலிந்து போகும் போது மனதுக்கு கஷ்டமா இருக்கு

eniasang said...

ரொம்ப சிம்பில். எனக்கு இரண்டு பிள்ளைகள் (ஆறு அடி வளர்ந்த) சிறு வயதில் சாப்பாட்டு பிரச்சனை வந்ததே இல்லை.
சாப்பிட படுத்தும் குழந்தைக்ள் பசி எடுத்தால் தானே சாப்பிடும். your child will not die என்பார் எங்க்ள் DR(FOR UR INFORMATION I THINK HE IS THE BEST ONE .DR.G.N.Natarajan child trust hospital).
நீங்கள் பின்னே ஓட குழந்தை மரத்தில் ஏறீக் கொல்லும்.விட்டு பார்த்தால் அடுத்த வேளை அல்ல்து அதற்கும் அடுத்த வேளை அல்லது .......கண்டிப்பாக கேட்டு வாங்கி சாப்பிடும்.அழுதப் பிள்ளைக்குதான் பால்.
அம்மாவை பிடிக்கவில்லை எனச் சொல்லாம்ல் சாப்பாடு பிடிக்கவில்லை என்று சொல்லும் குழந்தைக்ளும் உண்டு.
சட்டை செய்யாம்ல் இருக்க தாய்மார்கள் பழக வேண்டும்

கல்கி said...

//சாப்பிட படுத்தும் குழந்தைக்ள் பசி எடுத்தால் தானே சாப்பிடும். your child will not die//
//விட்டு பார்த்தால் அடுத்த வேளை அல்ல்து அதற்கும் அடுத்த வேளை அல்லது .......கண்டிப்பாக கேட்டு வாங்கி சாப்பிடும்.அழுதப் பிள்ளைக்குதான் பால்//

எங்க அப்பாவும் இதைத்தான் சொல்லுவார். இன்னொரு முக்கிய காரணம் பாட்டில் பாட்டிலாக பாலைக் குடிக்க வைப்பதும் தான். குழந்தை சரியாக சாப்பிடவில்லை பாலாவது குடிக்கட்டும் என்று பெரியவர்கள் நினைப்பது தான் பெரிய தவறு.

அதிலும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று 3 வயதிற்க்கு மேல் நிச்சயமாக பால் அத்யாவசிய உணவு அல்ல என்பதுதான்.

சொன்னால் நம்புவீர்களா என்று தெரியவில்லை. நான் பிறந்து 6 மாதம் கூட பால் குடித்தது இல்லை. செரலாக்ஸ், ஃபேரக்ஸ் எல்லாம் நான் விளம்பரத்தில் தான் பார்த்திருக்கிறேன். சிறு வயதிலிருந்தே காய்கறிகள் தயிர் என்றால் ஒரு வெட்டு வெட்டி விடுவேன். இதுவரை எனக்குத் தெரிந்து 2 முறை காய்ச்சல் வந்திருக்கிறது.(அப்போதும் நான் சோர்ந்து இருந்ததில்லை). பால் குடித்து, செரலாக்ஸ்,ஃபேரக்ஸ் சாப்பிட்டு வளர்ந்தவர்களை விட நான் 100% ஆரோக்கியமாக இருக்கிறேன் :)


சாப்பிட்டால் போதும் என்று திணிக்கக்கூடாது. அடுத்து அவர்களே வாய் திறந்து கேட்ட பின்பு தான் சாப்பாடு கொடுக்க வேண்டும்.

கல்கி said...

எங்க பக்கத்து வீட்டு குழந்தை எங்க வீட்டுல நல்லா சாப்பிடும். ஆனா அவங்க வீட்டுல வாய தொறக்க வைக்கிறதுக்குள்ள எல்லாருக்கும் வயசாயிடும்.... அதுக்கு என்ன காரணம்னு பாத்தா, அவங்க வீட்டுல கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்கிறது தான். எப்பவுமே அவங்களுக்கு பசிச்சு கேக்குற வரைக்கும் நாம் பொறுமையாதான் காத்திருக்கணும். :)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger