Tuesday, February 17, 2009

அம்மாவுக்கு, அப்பா சொன்ன அறிவுரை

தலைப்பு மாதிரி நீளமா இருக்காதுங்க இந்தப் பதிவு.

ரெண்டு நாளைக்கு முன்னே, டேபிளின் மீதிருந்த பொருளை அமித்து தள்ளிவிட்டாள். வழக்கம்போல ! அது கீழே விழுந்துவிட்டது. அருகிலிருந்த நான் உடனே அதை எடுத்து வைத்துக்கொண்டே, அம்மு இது மாதிரியெல்லாம் தள்ளக்கூடாது, அது தப்பு, கீழே விழுந்தா உடைஞ்சிடும்னு அமித்து கிட்ட நீட்டி முழக்கினேன். அமித்துவும் அவளின் ட்ரேட் மார்க் சிரிப்போடு நான் எடுத்து வைப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இதை கவனித்த அமித்து அப்பா, அவ தள்ளி விட்டானா, அவளையே எடுத்து வைக்க சொல்லு, அத விட்டுட்டு நீயே அத சரி செஞ்சிட்டு வாயால சொல்றதால அவ எதையும் செய்யக் கத்துக்கமாட்டா.
மறுபடியும் அவ வந்து தள்ளுவா, நீ இதையே செய்வ, அவளுக்கு அது ஒரு விளையாட்டா போய்டும் அப்படின்னு சொல்லிட்டு, மேலே எடுத்து வைத்த அந்தப் பொருளை, மறுபடியும் கீழே வைத்து விட்டு
அமித்துவை கூப்பிட்டு அம்முடா, நீ இதை மேலே எடுத்து வை. பார்க்கலாம். அமித்துவும் அதே ட்ரேட் மார்க் சிரிப்போடு அதை மேலே எடுத்துவைத்தாள்.

ம்ஹூம் என்னத்த சொல்ல, ஒரு ஆச்சர்யத்தோடு அப்பா, மகளை பார்த்துக்கொண்டே திட்டிக்கொண்டேன் என் மடத்தனத்தை (மனசுக்குள்ள தான்).


(இனிமே இது மாதிரி அம்மாக்கள் வலைப்பூக்கள்ல அப்பாக்கள் சொல்ற அட்வைஸையும் எழுதுங்க சகா(கோ)க்களே)

7 comments:

அமுதா said...

/*இனிமே இது மாதிரி அம்மாக்கள் வலைப்பூக்கள்ல அப்பாக்கள் சொல்ற அட்வைஸையும் எழுதுங்க சகா(கோ)க்களே)*/
ஓகே...ஓகே...

நட்புடன் ஜமால் said...

சரியான விடயம்.

ராமலக்ஷ்மி said...

அம்மாக்கள் வலைப்பூவோ
அப்பாக்கள் வலைப்பூவோ
நோக்கம் பெற்றவருக்கு வழிக்காட்டுவதுதானே:)!

யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.

சரிதானா அமித்து அம்மா?

கார்க்கிபவா said...

நான் இங்கெல்லாம் வரலாமா?

அபி அப்பா said...

// ராமலக்ஷ்மி said...
அம்மாக்கள் வலைப்பூவோ
அப்பாக்கள் வலைப்பூவோ
நோக்கம் பெற்றவருக்கு வழிக்காட்டுவதுதானே:)!

யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.

சரிதானா அமித்து அம்மா?//

ஆமாம் பிரண்ட்! நல்லா சொன்னீங்க!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ராம் மேடம் உங்க பேச்சுக்கு மறுபேச்சு உண்டா

ரொம்ப சரி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நன்றி அமுதா, ஜமால்,

வாங்க வாங்க கார்க்கி

வாங்க அபி அப்பா
ராம் மேடம் நல்லாத்தானே சொன்னாங்க
நல்லதுதானே சொன்னாங்க

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger