தந்தையர் தினத்தை முன்னிட்டு என் கணவர் குழந்தைகளிடம் காட்டும் அன்பைக் கவிதையாக எழுத முயற்சித்த ஒரு பதிவை இங்கு மீண்டும் பதிவிடுகிறேன். என் தந்தையும் இப்படி தான் அன்பைப் பொழிந்தார். அன்புத் தந்தையர் அனைவருக்கும் "தந்தையர் தின" வாழ்த்துக்களை முன்கூட்டியே கூறிக்கொள்கிறேன்.
உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!
என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என...
உன் ஒவ்வொரு வளர்ச்சியையும்
வார்த்தையில் வடிக்காது
மெளனமாக இரசிக்கிறேன்...
உன்னைச் சுற்றி ஊரே இருந்தாலும்
என் கண்களுக்குள்
நீ மட்டுமே தெரிந்தாய்...
நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...
உன் கண்ணீருக்கெல்லாம்
கண்ணீர் சொல்ல முடியா
வலியில் நான் துடிக்கின்றேன்...
என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...
சொல்லத் தேவையில்லை
காலம் முழுதும் உன்னை
மனதில் சுமப்பேன் என்பதை...
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
10 comments:
/உன்னிடம் நான்
சொன்னதில்லை மகளே!!
என் வாழ்வின் மிக
மகிழ்வான தருணம்
நான் உன்னை முதன்முதலில்
கையில் ஏந்திய பொன்னான நொடி என.../
அருமையாக,அற்புதமாக,
அன்புத்தந்தையைப் பற்றி சொல்லி உள்ளீர்கள்
வாழ்த்துகள்
என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...\\
அருமையான உணர்வு.
என் குழந்தைக்காக நான் எழுதியது
ஓர் வயது வரை
தாயே எனக்கு தேவதை
ஓர் நிலை வரை
மனைவியே என் தேவதை
என் அன்பு மகளே
வாழ்க்கை முழுதும்
நீயே என் தேவதை.
நன்றி அமுதா...தந்தையர் தினத்துக்கான பதிவுகளை தொடங்கி வைத்தமைக்கு! :-)
தலைப்பே ஒரு கவிதை அக்கா...
நல்லா இருக்கு அமுதா
romba arumayaa erundhuchu!!
vazhthukal
அருமை அமுதா.
//நீ மலர்ந்திருந்தால் தான்
நான் நானாக உள்ளேன்
உன்முன் மட்டுமே
மறுப்பை மறுத்து விடுகிறேன்...//
அழகு. வாழ்த்துக்கள்!
//என் செல்லப் பெண்ணே!!!
பத்து மாதம் சுமக்க முடியவில்லை
என்று சேர்த்து வைத்து
இயலும் வரை சுமக்கிறேன்
தோளிலும் முதுகிலும் ...//
அழகான வரிகள் :-)
கடைசி வரிகள் மிக மிக அற்புதம்.எப்போதுமே அப்பாவிற்கும், பெண்ணிற்கும் உள்ள புரிதல் அதிகம்.
முத்தான வரிகள் அற்புதம் ...
Post a Comment