Thursday, June 25, 2009

காஸ் தொல்லை-தீர்வு Pls

என் mithraku 31 நாட்கள் ஆச்சு. கடந்த 8 நாளா காஸ் தொந்தரவால் ரொம்ப சிரம படரா.. முக்கியமா சாயங்காலம் மற்றும் இரவு... தூங்க 1 மணி ஆயிடுது. சின்னதா முனகிட்டே இருக்கா .Dr செரிமானதுக்காக Neopeptine ட்ராப்ஸ் குடுக்க சொன்னார். ஆனாலும் ரொம்ப effect தெரியலை. இந்த காஸ் troble தாய் பால்லேர்ந்து வருதா ? அப்படினா அதை தடுக்க அம்மா சாப்பிட வேண்டிய , தவிர்க்க வேண்டிய உணவு பத்தி சொல்லுங்களேன்.

11 comments:

pudugaithendral said...

எங்க ஊர் பக்கம் உர மருந்து தருவாங்க. அது கொடுத்த சரியாகும். ஆனா இப்ப அதை யாரும் உபயோகிப்பதா தெரியலை.

தாய்ப்பால் மூலமா வரும் என்பது பெரியவர்களீன் நம்பிக்கை. வாழைக்காய், கோஸ், உருளை போன்ற வாயு பதார்த்தங்களை முதல் இரண்டு மாதத்திற்காவது சாப்பிடாமல் இருந்தால் நல்லது.

pudugaithendral said...

பெருங்காயம் சேர்த்து ஒரு மருந்து தருவார்கள். அம்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன்

goma said...

31 நாள் ஆன குழந்தை தூக்கம் இல்லாமல் இருப்பதற்கு ‘என் பாணியில் சொன்னால் ஜெட் லாக்.10 மாதங்கள் பத்திரமான கத கதப்பில் ,வளர்வதே தெரியாமல் வளர்ந்த சிசு வெளியே வந்த உடன் அனுசரித்துப் போக இயலாத,அதன் தவிப்புதான் தூக்கமின்மை,முனங்கல்..எல்லாம்
டாக்டர் தரும் மருந்தெல்லாம் உங்களை திருதி படுத்தத்தான்.
[கேட்டுப் பாருங்கள் நிறைய டாக்டர்ஸ்,கோமா சொல்வது சரிதான் என்பார்கள்.

கருவில் இருக்கும் பொழுது தாயின் மன நிலை குழந்தையைப் பாதிப்பது தாய்ப்பால் தரும் வரை தொடரும்
ஆகவே யங் அம்மாக்கள் தங்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆகாய நதி said...

பெருங்காயத்தை ஒரு இழுப்பு உரசி அதை தாய்ப்பாலோடு கலந்து கொடுங்கள்... நீங்கள் கட்டிப் பெருங்காயம் விழுங்கி நிறைய நீர் அருந்துங்கள்...

நீங்கள் உணவில் அதிகம் பூண்டு சேர்த்துக் கொள்ளுங்கள்... அதனால் உங்களுக்கும் பாப்பாவுக்கும் வாயுத் தொல்லை வராது மேலும் பால் நன்கு ஊறும்...

ஆகாய நதி said...

தாயின் உடலில் இருக்கும் வாயு தொல்லை கொடுக்கும் காய்கறிகளின் சத்து பால் வழியே குழந்தைக்கும் செல்வதால் நீங்கள் உருளை, வாழைக்காய்,பாகற்காய் போன்ற வாயு உருவாக்கும் உணவினை சாப்பிடும் போது அதனோடு அதிகம் பூண்டு சேர்த்த்உ சமைத்து சாப்பிடுங்கள்...

மற்றபடி குழந்தைக்கு இயற்கையாகவே காற்று வெளியேறுவது நல்லது...

அதிக நேரம் இடைவெளி கொடுக்காமல் அடிக்கடி பால் கொடுங்கள்... உடலில் வாயு அதிகம் உற்பத்தியாகாது இது டாக்டர் எனக்கு கூறியது

Deepa said...

எனக்குத் தெரிந்தது:

நீங்கள் சாப்பாட்டில் பூண்டு அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பூண்டே சாப்பிட்டுப் பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த நேரத்தில் சேர்த்துக் கொள்வார்கள்.

மற்ற படி புதுகைத் தென்றல் சொல்வது போல் உரமருந்து என்று ஜாதிக்காய், மாசிக்காய், பூண்டு, பெருங்காயம், எல்லாம் சுட்டு, உரசி உரமருந்து தருவார்கள். ஆனால் அது அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே தர வேண்டும்.

நீங்கள் டாக்டரிட்ம் கேட்டால் பானிஸன் அல்லது எல்கேரிம் என்று சீரணத்துக்கு ஏதாவது டானிக் தரலாம். ஆனால் அது அந்த டாக்டரைப் பொறுத்தது.

Anonymous said...

வீணா,

குழந்தை சரியான எடை இருக்கிறாளா? நீங்கள் பூண்டு, கீரை போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஜீரண உபாதைகள் இல்லாமல் இருப்பது மிகவும் முக்கியம்.
குழந்தை வாயு வெளியேறுவது, நெஞ்சில் ஒரு மாதிரி சளி போன்ற சப்தம் கேப்பது, கண்ணில் பூளை கட்டுவது, போன்றவை சாதாரணம். நிஜ சளி இல்லாமல் இப்படி சப்தம் கேப்பது 3 முதல் 5 மாதங்கள் தொடரும். பயப்பட வேண்டாம்.

அதிகப்படியான மருந்துகள் கொடுக்காதீர்கள், உரை மருந்து வேண்டவே வேண்டாம். சிறிது நல்லெண்ணெய் இரு தொடை இடுக்குகள், மற்றும் தொப்புள் சுற்றி இரவு தடவுங்கள். தாய்ப்பால் குடுத்துக்கொண்டே இருங்கள். குழந்தைக்கு இரவு பகல் இப்போது புரியாததால் தூக்கம் செட் ஆக இன்னும் ஐந்து மாதங்கள் நீங்கள் காத்து இருக்க வேண்டும்.

(முடிந்தால் வேக வைத்த முட்டை மட்டும் நீங்கள் சாப்பிடாமல் தவிர்த்து விடுங்கள்).

Arasi Raj said...

ஒரு சில குழந்தைகள் இந்த மாதிரி கஷ்டப்படுவது உண்டு...ஒவ்வொரு முறை பால் குடிச்சு முடிச்சதும் குழந்தையை கண்டிப்பாக ஏப்பம் விட வைங்க...தாய்ப்பால் குடிச்ச குழந்தைக்கு ஏப்பம் வர கொஞ்சம் நேரம் ஆகும்...

பால் குடிச்ச உடனே கீழ படுக்க வைக்காம தொல்ல போட்டு முதுகை லேசா தட்டுங்க...ஏப்பம் வந்து விடும்..

அப்பைத்யும் வரலன்னா ஒரு எளிதான முறை இருக்கு...குழந்தையை உக்கார வைத்து......உங்க மடில தாங்க...குழந்தையின் தாடையில் உங்கள் கைகளை வைத்து அப்படியே குழந்தையின் உடம்பை ஒரு வட்ட வடிவு வர்ற மாதிரி சுத்துங்கள்....

குழந்தையின் இடுப்பு பகுதியை மையமாக வச்சு சுத்தணும்...குழந்தையின் வயிறு மற்றும் நேசு பகுதிக்குள் ஒரு ஆட்டம் உண்டாகி ஏப்பம் வந்து விடும்....

Dhiyana said...

வெந்நீரில் (நாம் தொட்டுப் பார்த்தால், வெது வெதுப்பாக இருக்க வேண்டும்..கவனம சூடுநீர் குழந்தையின் நாக்கை பொத்துப்போகச் செய்யும்) சிறிது பெருங்காயம் சேர்த்து, ஒரு ஸ்பூன் அளவு கொடுங்கள்.

நீங்கள் பூண்டு சாப்பிடுங்கள். மற்றும் உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், வாழைக்காய் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள்.

Veena Devi said...

ரொம்ப நன்றி. பெருங்காயம் மற்றும் நல்லெண்ணெய் வைத்தியம் ரொம்ப உபயோகமா இருந்துச்சு. பாப்பாவை நல்ல துணியால சுத்தி வச்சாலும்(Swaddle) நல்ல தீர்வு கிடச்சுது .

Eswari said...

@ ஆகாய நதி
//உருளை, வாழைக்காய்,பாகற்காய் போன்ற வாயு உருவாக்கும் உணவினை//
பாகற்காய் வாயுவா?

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger