Friday, June 19, 2009

தந்தைக்கு

காசு கொடுத்தால் எதுவும் கிடைக்கும் காலம் இது. அதனால் நமக்குப் பிடித்தவர்களுக்குக் கொடுக்கும் பரிசு பொருட்கள் காசு மட்டுமில்லாமல் நம் நேரத்தையும் செலவழித்து செய்ததாக இருந்தால், நாம் அவர்கள் மேல் கொண்டுள்ள அன்பைத் தெள்ளத்தெளிவாகக் காட்டும் என்பது என் நம்பிக்கை. வரயிருக்கும் தந்தையர் தினத்திற்கு குட்டீஸ் தன் தந்தைக்குப் பரிசு அளிக்க சில பெயிண்டிங் செயல்முறைகள்.

1. Bubble wrap painting :

தேவையான பொருட்கள் :

1. Bubble wrap
2. பெயிண்ட்
3. காகிதம்

Bubble wrap மீது குழந்தைகள் பெயிண்ட் செய்ய வேண்டும். அவர்கள் திருப்தி அடைந்தவுடன், காகிதத்தை பெயிண்ட செய்யப்பட்ட Bubble wrap மீது வைத்து மெதுவாக அழுத்த சொல்லவும். காகிதத்தில் பெயிண்ட் அழகாக ஒட்டியிருக்கும்ம். காய வைக்க வேண்டும்.


2. Marble painting:




தேவையான பொருட்கள் :

1. கோலி குண்டு
2. பெயிண்ட்
3. காகிதம்
4. செருப்பு டப்பா

கோலி குண்டை பெயிண்ட்டில் போட்டு, முழுவதும் பெயிண்ட் இருப்பது போல் உருட்ட வேண்டும். செருப்பு டப்பாவில் காகிதத்தை வைத்து, குண்டை காகிதத்தின் மேல் போட்டு டப்பாவை லேசாக ஆட்ட வேண்டும். குண்டு உருளும் இடத்தில் பெயிண்டால் கோடுகள் வரைந்து கொண்டே போகும்.

3. உப்பு/மண் பெயிண்டிங் :



தேவையான பொருட்கள் :

1. கோந்து
2. பெயிண்ட்
3. உப்பு அல்லது மண்
4. காகிதம்


கோந்தால் காகிதத்தில் வரைந்து கொள்ளவும். அதன் மேல் உப்பு அல்லது மண்ணைத் தூவவும். ஈரம் காயும் முன் பெயிண்ட்டால் அதன் மேல் ஒற்றி எடுக்கவும்.காய வைக்கவும்.

4. Monoprint :




தேவையான பொருட்கள் :

1. பாலீத்தின் காகிதம்
2. பெயிண்ட்
3. காகிதம்

குழந்தையை பாலீத்தின் அல்லது பெயிண்ட் ஒட்டாத காகிதத்தில் பெயிண்ட் பண்ண வேண்டும். முடித்தவுடன் அதன் மேல் வெள்ளை காகிதம் போட்டு, லேசாக அழுத்த வேண்டும். காகிதத்தைக் காய வைக்கவும்.

2 comments:

pudugaithendral said...

சூப்பர் ஐடியாக்கள்,

நன்றி

சந்தனமுல்லை said...

ஆகா நல்லாருக்கு கைவண்ணம்! மோனோபிரிண்டிங் முயற்சி செய்தோம்...மிகவும் ஜாலியான ஆக்டிசிட்டி அது! ஹேப்பி ஃபாதர்ஸ் டே!!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger