Tuesday, June 16, 2009

அன்பு தோழிகளே !!


பதிவுலக நண்பர்களே!!

நம் இந்த பதிவுகளின் மூலம் எத்தனையோ கருத்துகளை பரிமாறிக்கொள்கிறோம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், மறுப்பு, கோபம் எல்லாமே. வெறும் கருத்து பரிமாற்றமாக இல்லாமல் இதை ஏன் ஒரு முதலீடாக நாம் எடுத்து கொள்ள கூடாது?

என்ன சொல்ல வருகிறேன் என்று புரியவில்லையா? ஒரு சின்ன தொழிலோ பெரிய தொழிலோ துவங்குவதும் வளர்ப்பதும் வாடிக்கையாளர்கள் தான், இங்கே நாமே வாடிக்கையாளராக இருக்கலாம், நாமே முதலாளி என்றும் ஆகலாம்.

இந்த பதிவுலகில் எத்தனை பேர் இருக்கிறோம்? நமக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கும், துணிகள், பாத்திரங்கள், கல்வி பற்றிய அறிவுரைகள், வழிகாட்டுதல், பங்கு சந்தை பற்றிய விபரம், வீட்டு மனை, திருமணம், இன்னும் பல பல...

நாம் அம்மாக்களின் வலைப்பூவில் இருந்து ஒரு தொழில் அல்லது நிறுவன வலைப்போவை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். என் ஐடியா இது, உங்கள் கருத்துகளை அறிந்த பின் மட்டுமே அடுத்த கட்டம் பற்றி விவாத்திக்க வேண்டும்.

ஒரு event management கம்பெனி ஆரம்பித்தால் என்ன? அதற்கு தேவை நெறைய தொடர்புகள், புதிதாக யோசிக்கும் தன்மை, பேச்சு திறன், திட்டமிடல், குறித்த நேரத்தில் செய்து தருதல் போன்றவை. இதற்கு நாம் பெரிதாக பண முதலீட்டு தேவை இருக்காது. கம்ப்யூட்டர் மற்றும் நெறைய ஆட்கள் தொடர்பிருந்தால், அந்தந்த ஊரில் நாம் செய்யலாம்.

ஒரே பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம், அதில் யார் எந்த ஊரில் இருக்கோமோ அதை கிளைகளாக கொள்ளலாம், புதிய பொருள் அறிமுகம், சிறிய மற்றும் பெரிய நிறுவன நிகழ்ச்சிகள், கல்லூரி கலை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோ, குழந்தைகள் பிறந்த நாள் விழா, இன்னும். வேலைக்கு ஆட்கள் என்பது நெறைய மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்க்க கிடைப்பார்கள். முதல் ஒரு வருடம் நாம் லாப நோக்கு இல்லாமல் உலத்தல் கண்டிப்பாக பெரிய அளவில் வளரலாம். event management என்பது மட்டும் இல்லாமல் ஒரு HR, என்றும் கூட விரிவு படுத்த வாய்ப்புள்ளது. கண்டிப்பாக நம் வலையுலக நண்பர்கள் அனைவரும் உற்சாக படுத்துவார்கள், வாய்ப்புகளும் தருவார்கள்.

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.
www. ojasvi.co.in - பார்வையிடுங்கள், அல்லது info@ojasvi.co.in , மெயில்பண்ணுங்கள், அல்லது சந்தன முல்லையின் மெயில் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.

வாய்ப்புக்கு நன்றி முல்லை.

17 comments:

Thamarai said...

ungaladhu endha muyarchikku ennadhu manamarndhaa vazhthukkal..

Good luck mullai

நட்புடன் ஜமால் said...

நல்ல ஒரு முயற்சி தான்

தோழிகள் மட்டும் தானா ?

ஜானி வாக்கர் said...

வெற்றி பெறட்டும் உங்கள் முயற்சி.

Anonymous said...

நன்றி தாமரை.

நன்றி ஜமால், தோழிகள் மட்டும் அல்ல, தோழர்களும் சேர்ந்துதான்

நன்றி கவுண்டரே..

Dr.Rudhran said...

good idea, best wishes

Arasi Raj said...

சூப்பர் Idea...I'm in

நட்புடன் ஜமால் said...

முதலில் ஒரு கூகில் குழுமம் துவங்குங்குங்கள், விருப்பம் இருப்பவர் இணைந்து கொள்ளட்டும், அங்கே விடயங்களை பகிரலாம்.
----------------------


உங்கள் சிந்தனை ஒரு நல்ல ஊக்கம் ...

Thamarai said...

excuse me...aarva kolaar la..mullai nnu potutaen..

Good luck Mayil.

i would love to be a part of the team..but avvalavu vivaram pathadhu nammakku..so,naan mudhala audience a erundhu ungalukku back up pannuraen..

:):):)

தீபாதேன் said...

வாழ்த்துக்கள்!

நானும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்ல ஐடியா மயில்

செயல்படுத்தமுடியம் என்று நினைக்கிறேன்.

அன்புடன் அருணா said...

Bravo!!!!This was running in my mind for a long time....thanx for the initiative taken....

" விளம்பரங்கள் " said...

மயில்,

வரவேற்க்கத்தக்க முயற்சி.. பாராட்டுக்கள்..

வலையுலகில் இலவசமாக விளம்பரங்கள் செய்ய 'விளம்பரங்கள்' (http://www.vilambarangal.blogspot.com) என்ற தளத்தை உருவாக்கியுள்ளேன்... புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த வசதியை உங்களது நட்பு வட்டாரத்திற்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Veena Devi said...

ரொம்ப நல்ல சிந்தனை. கண்டிப்பாக செயல் படுத்தலாம். தெளிவான திட்டமிடலும், மனித உழைப்பும் ,விடமுயற்சயும் இருப்பின் கண்டிப்பாக சாதிக்கலாம்.

pudugaithendral said...

நானும் ரெடி. ஐடியா ரொம்ப நல்லா இருக்கு. நான் இருப்பதுஹைதையில்

ஆகாய நதி said...

நல்ல ஐடியா மயில்... நானும் கைகோர்க்கிறேன் :)

vijiraja said...

Its a good idea. I am basically an Human Resource professional....hope i will be able to help you to my extent....

Congratulations....

Cheers

அமுதா said...

நல்ல முயற்சி

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger