இனிப்பை விரும்பாத குழந்தைகள் அரிது தான்.
அதிலும் சாக்லேட்டுகளை ...ஐஸ் கிரீம்களைப் பிடிக்காது என்று எந்தக் குழந்தையாவது சொல்லக் கூடுமானால் அது மிகப் பெரிய அதிசயமே .
பாக்கெட் மணியாக ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒரு ஐஸ் கிரீம் வாங்கலாம் அல்லது ஐந்து எக் லேர்ஸ் சாக்லேட்டுகள் வாங்கலாம் ,இன்னும் குறைக்க வேண்டுமெனில் ஐம்பது காசுக்கு ஒரு காச்சா மேங்கோவோ அல்லது காபி பைட் இன்னும் சில குழந்தைகள் மின்ட்டோ பிரெஷ் ...ஹால்ஸ் ..பூமர் இப்படி வாங்கிச் சாப்பிடுகிறார்கள் ,
பத்து ரூபாய் என்றால் ஒரு குர் குரே அல்லது பிங்கோ சிப்ஸ் அல்லது லேய்ஸ் ...அதுவும் இல்லா விட்டால் பய்ட்ஸ்...இப்படித் தான் இருக்கிறது ஐந்து முதல் பத்து வயது வரையிலான குழந்தைகளின் சிற்றுண்டிப் (என்ன ஒரு அழகான தமிழ் வார்த்தை ! அதிகம் புழக்கத்தில் இல்லையோ என்று ஐயமாகி விட்டது ...இப்போதெல்லாம் சிம்பிளாக ஸ்நாக்ஸ் என்று முடித்து விடுகிரோமில்லையா?!) பழக்கம் .
மேலே கூறப் பட்டுள்ளவற்றில் சிப்ஸ் வகையறாக்கள் தவிர்த்து மற்ற எல்லா சிற்றுண்டிகளிலும் இனிப்பு இருக்கும். சிப்ஸ்களிலும் உருளைக் கிழங்கு இருப்பதால் மாவுப் பொருளுக்கே உரித்தான சிறிதளவு இனிப்பு அதிலும் உண்டு.
அளவு மீறாமல் சாப்பிட்டால் பயமேதுமில்லை. "அளவுக்கு மேறினால் அமிர்தம் கூட நஞ்சு தானே"
கடைக்குப் போகும் போதெல்லாம் ஒரு ஹால்ஸ் ...அல்லது எதோ ஐம்பது காசுகள் அல்லது ஒரு ரூபாய் சாக்லேட்டுகள் என்று வாங்கிச் சாப்பிட்டு பழகிய குழந்தைகள் இன்று அநேகம் பேர். விளைவு பற்கள் சொத்தை ...மிகச் சிறு வயதிலேயே பழுப்பான பற்கள் .
இன்னும் சிலருக்கு தீராத சளி ...இருமல் .
எல்லாக் குழந்தைகளுக்குமே மழைக் காலம் மற்றும் குளிர் காலங்களில் சீதோஷ்ணம் ஒத்துக் கொள்ளாமல் சளி இருக்கக் கூடும் .சிலருக்கு கோடையில் பெய்யக் கூடிய மழை ஒத்துக் கொள்ளாமல் கூட சளியும் இருமலும் வரக் கூடும். அவை தவிர்த்து மாதம் ஒருமுறைக்கு இருமுறை கடுமையான சளியும் இருமலும் இருப்பின் பெற்றோர் நிச்சயம் தம் குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பழக்கங்களை கண்டிப்புடன் கவனிக்க வேண்டும்.
நாள் முழுதும் மூன்று அல்லது பலமுறை சாக்லேட்டுகள் அல்லது இனிப்புகளை உண்ணும் பழக்கத்தில் இருந்து நமது குழந்தைகளை நாம் மீட்க வேண்டும். இனிப்பு சுவை அதிகமானால் ;உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.
நான் அனுபவ ரீதியாக உணர்ந்தது சளியும் இருமலும் தீவிரமாக இருக்கும் நாட்களில் குழந்தைகளின் கண்களில் இருந்து சாக்லேட்டுகளை கண்டிப்பாக மறைத்து வைப்பது சாலச் சிறந்தது.
சாக்லேட்டுகள் மட்டும் தான் என்றில்லை இன்று வரும் ஊட்டச் சத்து பானங்களில் பெரும்பான்மையும் சாக்லேட் கலந்த பானங்களே .எல்லாவற்றிலுமே சாக்லேட் ப்ளேவர் உண்டு.
பூஸ்ட்
போர்ன் விட்டா
காம்ப்ளான்
மால்ட்டோவா
ஹார்லிக்ஸ்
மருத்துவர்களின் ஆலோசனை என்னவெனில் சுத்தமான ஆவின் பால் நீர் கலக்காமல் காய்ச்சி அளவான சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குத் தரலாம் அதுவே போதும் ஊட்டச்சத்து பானங்கள் என்ற பெயரில் இவை எல்லாம் அத்த்யாவசியமே இல்லை.
தவிர்க்க முடியாது குழந்தைகள் அதன் சுவைக்குப் பழகி விட்டார்கள் என்ற காரணத்தால் இன்றைய நிலையில் வளரும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த ஊட்டச் சத்து பானங்களை நம்மால் தடை செய்ய இயலாவிட்டாலும் கூட இரவு முழுதும் இருமல் ...சளித் தொல்லை வறட்டு இருமலால் வாந்தி எனும் நிலை வரும் பொது அந்த நாட்களில் மட்டுமேனும் இவற்றை நிறுத்தி விட்டு நீர் கலக்காமல் காய்ச்சிய வெறும் பாலில் செரிமானத்திற்கு உதவும் சதவிகிதத்தில் மட்டுமே கொஞ்சமாக சர்க்கரை கலந்து தரலாம்.
என்ன ஒரு மகாப் பெரிய கஷ்டம் எனில் அப்படிக் குடிக்க குழந்தைகள் ஒத்துக் கொள்ள வேண்டும் !!!
பழக்க வேண்டும் நம் குழந்தைகளை.
4 comments:
உபயோகமான தகவல்கள்.
மிக்க நன்றி
நன்றி தென்றல் ...
ரொம்ப நல்ல வலைப்பூ...இனி அடிக்கடி எட்டிப்பார்க்க ஆவலாய் உள்ளது. நன்றி.
எனது தளத்திற்கு வருகைக்கும்
வாக்கு அளித்தமைக்கும் நன்றி
Post a Comment