அவ்வைப் பாட்டி பற்றி இப்போதுள்ள குழந்தைகளுக்கு பெயரைத் தவிர பெரிதாகத் தெரிய வாய்ப்பில்லை.
அவரைப் பற்றிய சரித்திர நிகழ்ச்சி ஒன்றை இப்போது பார்ப்போம்.
நட்பின் மகத்துவத்தைப் பற்றி கூற வேண்டுமெனில் கோப்பெருஞ்சோழன் ,பிசிராந்தையாருடன் அவ்வையார் அதியமான் கதையையும் சொல்வார்கள்.கூடவே பாரி கபிலர் கதையையும் கூறுவார்கள். அந்தப் பாரி மன்னன் கடையேழு வள்ளல்களுள் ஒருவன். பாரி பரம்பு எனும் மலை குறுநில மன்னன் .

மன்னன் என்றால் போர் இல்லாமலா? மூவேந்தர்கள் தமக்கு அடி பணியாத அல்லது கப்பம் கட்டாத குறுநில மன்னர்களுடன் அடிக்கடி போரில் ஈடுபட்டு வந்தனர் என்பது வரலாறு .அப்படி
மூவேந்தர்களுடன் நடந்த போரில் பாரி இறந்து படவே ,அவனது பெண் மக்கள் இருவரும் ஆதரவற்ற அனாதைகள் ஆயினர் என்று வரலாறு சொல்கிறது.
அந்தப் பெண்களின் பெயர்கள் அங்கவை,சங்கவை (சிவாஜி படத்தில் கூட இந்தப் பெயர்கள் வருமே! பாரியின் மகள்களின் பெயர்கள் தான் அவை)
அப்படி நிராதரவாய் வறுமையுடன் வாழும் போதும் அப்பெண்கள் யாரிடமும் அண்டிப் பிழைக்க விருப்பமற்று ஒரு அரசனின் மகள்கள் எனும் பெருமையை விடுத்து தனியே வாழ்ந்திருக்கையில் அவ்வைப்பாட்டி ஒரு நாள் அவர்களைச் சந்திக்கிறாள்.
முல்லைக்கு தேர் தந்த பாரியின் மக்களுக்கா இந்தக் கதி என அவ்வை வருத்தம் மிகக் கொண்டு அவர்களது நல வாழ்வுக்கு ஏதேனும் செய்தே தீருவது என முடிவு செய்கிறார்.
அவ்வையின் மீது பெரு மதிப்பு கொண்ட சிற்றரசன் ஒருவன் அங்கவை சங்கவியை மணந்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவே அவ்வைப் பாட்டி அவர்களது திருமணத்தை முன்னின்று நடத்துகிறார்.
அவ்வேளையில் அதை எதிர்த்து மூவேந்தர்களும் படை திரட்டி வருகின்றனர். தங்களை எதிர்த்து போரில் மாண்ட அடி பணியாத பாரியின் மகள்களுக்கு அவ்வைப் பாட்டி திருமணம் செய்வித்து ஆதரிப்பதா என்ற அடங்காக் கோபம் அவர்களுக்கு .
மூவேந்தர்களும் படை திரட்டி வருவதை அறிந்த அவ்வை போர்களத்தில் அவர்களிடம் சென்று பாரியின் பெருமைகளை எடுத்துச் சொல்லி சமாதனம் செய்து எப்படி போரை நிறுத்தினார் என்பது இன்னொரு சுவையான சரித்திர நிகழ்வு.
இப்போது சொல்ல வந்த விஷயம் என்ன வென்றால்
மூவேந்தர்களும் ஒற்றுமையாய் ஒரு சமயம் இருந்தார்கள் அதற்க்கு அவ்வை பாட்டி காரணம் என்பது தான்.
அங்கவை...சங்கவியின் திருமணதிற்கு மூவேந்தர்களும் ஒற்றுமையாய் வந்து கலந்து கொண்டனர் அவ்வையின் மீது கொண்ட பெரு மதிப்பினால்.
இதற்க்கான சரித்திர ஆதாரம் .
திருமணதிற்கு வந்த சேர மன்னர் தன் பரிவாரங்களுடன் தங்கியிருந்த இடமே சேலம் என்று பின்பு மருவிற்றாம்.
அங்ஙனமே பாண்டிய மன்னர் தங்கியிருந்த இடம் வீர பாண்டி என ஆயிற்று .
சோழமன்னன் தங்கியிருந்த இடம் வீரசோழபுரம் என்று ஆயிற்று .
இந்த நிகழ்வு சரித்திரத்தில் பதியப் பட்ட ஒன்று என ஆறாம் வகுப்பு ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் காணக் கிடைத்தது.
பகிர்வுக்காக இங்கே அளித்தேன்.

11 comments:
நல்லதொரு பகிர்வு
ஆங்கில புத்தகத்திலா !!!!!!
பாரி ஆண்ட பறம்பு மலை தற்போது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. இது புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகிலுள்ளது.
http://wikimapia.org/12807011/Piraan-Malai-Parambu-Malai
நல்ல பதிவு..அதிக பேர் மறந்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவ்வை...
மேடம்.
அவ்வைப்பாட்டிக்கும் அங்கவை சங்கவைக்கும் சம்பந்தம் இல்லை. இது மொட்டைத்தாத்தாவுக்கும் கம்பூட்டர் கிராபிக்ஸுக்கும் முடிச்சு போடுவது மாதிரி.
அங்கவை சங்கவையை பறம்பு மலையில் இருந்து அழைத்துவந்தவர் கபிலர். அவர்களை திருமணம் செய்தவர் அப்போது திருக்கோவிலூரை ஆண்ட சிறு மன்னர் மலையமான் திருமுடிக்காரி.
திருமணம் நடந்த இடம் மண்டபம் கூட இன்னும் உண்டு.
திருமணம் நடந்தபின், கபிலர், பல குறிஞ்சிப்பாடல்கள் இயற்றிவர்தான்,ஒரு தென்பென்னையாற்றில் ஒரு பெரிய கல்லில் அமர்ந்து வடக்கிருந்து அதாவது உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்தார்.
கபிலர் குன்று என்று இன்னும் அழைக்கப்படுகிறது.
பாடபுத்தகத்தில் தவறான தகவல்களை தருபவர்களை க்வாண்டானமோ பேக்கு நாடுகடத்தவேண்டும்..
"நீலச்சிற்றாடை" என்றொரு பாடம் உண்டு தமிழில் எத்தனையாவது வகுப்பு என்று நினைவில் இல்லை .அதில் அவ்வையார் பாரியின் இரு பெண்களுக்கு திருமணம் செய்வித்து உதவுவதாகப் படித்த ஞாபகம் ,அந்த அடிப்படையில் எழுதியது தன இந்த பதிவு.மேலும் ஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் மூவேந்தர்களும் அவ்வையார் நடத்தி வைத்த ஒரு திருமணத்தில் பங்கேற்றதாக செய்தி.எதற்கும் ஒரு முறை தீர அலசி விட்டு தவறுகள் இருந்தால் திருத்திப் பதிவிடுகிறேன் ,சுட்டிக் காட்டியமைக்கு நன்றி செந்தழல் .
இப்போது குழப்பம் பாரியின் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தது அவ்வையா ? கபிலரா ? ! சான்றுகளை தேடுகிறேன் .
I am not able to type it in Tamil.
After Pari's death, angavai and sangavai were lived with Kabilar. Once avai came to their place and arrange for their marriage. This is the story I read in my elementary scholl books.
--- Parkavi.
உங்களது சுட்டிக்கு நன்றி சுந்தரவடிவேல் ...
கூகுளில் தேடியதில் இன்னும் விளக்கமான செய்தி கிடைத்தது,சேலம் என்பது தவறான தகவலே.பிழை திருத்தப்பட்டது. இன்னும் அதிக தகவலுக்கு இங்கேயும் செல்லலாம். http://nrthennavan.blogspot.com/2006/09/blog-post_28.html
பாரி ஆண்ட பறம்பு மலை தற்போது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது. இது புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு அருகிலுள்ளது. //
ஆமாம் நான் போயிருக்கிறேன்.
அரு்மையான பகிர்வு நன்றி
http://muelangovan.blogspot.com/2007/04/blog-post_599.html
முனைவர் மு.இளங்கோவின் இந்தப் பதிவு செந்தழலின் கருத்தை தெளிவாக விளக்குகிறது.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=303121124&format=print&edition_id=20031211
இந்த சுட்டியில் இருக்கும் கவிதையும் தெளிவான தகவலுக்கு உதவுகிறது .
http://home.eegarai.com/-f25/-t10745.htm
2. அங்கவை - சங்கவை கால அவ்வை வள்ளல் பாரி என்ற குறுநில மன்னன் போரிலே இறந்த பிறகு அவனுடைய மகள்களான அங்கவை சங்கவை ஆகிய இருவருக்கும் இந்த அவ்வை பாதுகாப்பு அளித்துள்ளார். அந்த இரு பெண்களும் தன் தந்தையின் நாட்டைப் பற்றி ‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்' என்று பாடி இருக்கிறார்கள்.
http://blog.arutperungo.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b3%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+arutperungo+%28%3F%3F%3F%3F%3F%3F%3F+%3F%3F%3F%3F%3F%3F%3F%3F%3F%29
பிரளயனின் "பாரி படுகளம்" நாடகத்திற்கான லிங்க் இது
மேலே காணும் சுட்டிகள் மேலதிக விளக்கம் அளித்தாலும் கூட அங்கவை சங்கவைக்கும் அவ்வைக்கும் மொட்டைத் தலைக்கும் கிராபிக்ஸ் க்கும் போடப் பட்ட முடிச்சு எனும் செந்தழலின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக இல்லை. எவரேனும் சான்றுகளோடு விளக்கம் அளித்தால் தேவலாம்.குழந்தைகளுக்கு தெளிவாக கதை சொல்ல உதவலாம்.
ஒரு ஆரோக்கியமான விவாதம் போலக்கூட இதைத் தொடரலாம்.
http://www.textbooksonline.tn.nic.in/Books/06/Std06-English.pdf
இந்தச் சுட்டியில் "avvaiyar 's achievement " எனும் தலைப்பில் முதல் பாடத்தில் அவ்வை நடத்தி வைத்த திருமணமும் அதில் மூவேந்தர்களும் கலந்து கொண்ட செய்தியும் இருக்கிறது, ஆனால் பழைய தமிழ் திரைப் படங்களிலும் "நீலச் சிற்றாடை எனும் " துவக்க வகுப்பு தமிழ் பாடத்திலும் கூறப் பட்டுள்ளவாறு அந்த திருமணம் பாரியின் மகள்களான அங்கவை..சங்கவியின் திருமணம் என்பதற்கு போதுமான சான்றுகள் இன்னும் கிடைத்த பாடில்லை.
தேடலாம் ...
கிடைத்ததும் பதிவிடுகிறேன்.
காலக் கொடுமை சார் இது!!! அங்கவை சங்கவை என்ற தமிழ் சரித்திரப் பெயர்களை சிவாஜி படத்தில் வருமே? என்று அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறதே, அதைத்தான் சொன்னேன், காலக் கொடுமை சார் இது!!!
Post a Comment