Sunday, February 1, 2009

நாங்க ரெடி ...நீங்க ரெடியா ?(கதை சொல்லத்தாங்க)

தினமும் இரவு தூங்குவதற்கு முன் பாப்புவிற்கு கதை சொல்வதென கொஞ்சநாட்களுக்கு முன்பிலிருந்து தீர்மானித்திருந்தேன் . தினம் ஒரு கதை என நான் முடிவு செய்ததை அவளிஷ்டத்திற்கு இரண்டு ...மூன்று என்று அவளே மாற்றி அமைத்துக் கொண்டாள்.இது ஒரு கஷ்டமான வேலை தான் என்பதை அவள் ஏனோ இப்போது வரை ஒத்துக் கொள்வதே இல்லை .அது மட்டுமல்ல நானும் தான் தினம் தினம் என்ன கதையைத் தான் புது புதுசாகச் சொல்லிக் கொண்டே இருப்பதாம் ?

நான் சின்னவளாக இருந்த போது என் பாட்டிகள் இருவரும் அருமையாகக் கதை சொல்வார்கள்.அதிலும் என் அம்மா வழிப் பாட்டி சொன்ன "குத்து விளக்கு..சர விளக்கு" கதை அது பாட்டுக்கு ஒரு மாதம் ஒன்றரை மாதம் வரை கூட இழுத்துக் கொண்டே போகும்...கதையின் சுவாரஷ்யம் நம்மையும் கதைக்குள் இழுத்துக் கொண்டு போய் நம்மையும் மறந்து நாம் தூங்கி விட்டிருப்போம் ;எப்போது தூங்கினோம் என்பதே விடிந்து எழும் போது ஆச்சரியமாக இருக்கும் .கதை கேட்டவாறு தூங்கும் ஒவ்வொரு இரவும் மிக மிக நுட்பம் வாய்ந்த பல அற்புதக் கனவுகளுடன் தான் நமக்கு விடிந்திருக்கும்.

நிச்சயமாக கனவில் ராட்சசன் வந்திருப்பான் ...வெள்ளை உடை அணிந்து கொண்டு கையில் நட்ச்சத்திர வடிவ மந்திரக் கோல் பிடித்துக் கொண்டு சிறகுகளுடன் தேவதைகள் வந்திருப்பார்கள்...வேட்டைகாரனும் ...புறாவும் வந்திருப்பார்கள் .சிங்கமும் ...புலியும் வந்து நம்முடன் பேசி விட்டுப் போயிருக்கும்.

என் பாட்டி ஒரு "சுண்டெலிக் கதை "சொல்வார்கள் .ஏதோ ஒரு முனிவரின் தவத்தைக் கலைத்ததால் ஒரு அழகான இளவரசி "சுண்டெலியாகச்" சபிக்கப் பட்டு விடுகிறாள். அந்த சுண்டெலி பிறகு அழுது அழுது சாப விமோஷனம் கேட்டதும் முனிவரும் மனமிரங்கி கொடுத்த சாபத்தை மீட்டு எடுக்க முடியாது ;ஆனால் நீ வேண்டுமானால் பகலெல்லாம் சுண்டெலியாகவும் இரவில் மட்டும் அழகான இளவரசியாகவும் இருந்து கொள் உன் சாபம் முடியும் வரை என்று கூறி விட்டுப் போய் விடுவார் .இந்தக் கதையையும் என் பாட்டி இரண்டு மாதங்களுக்கு நீட்டி முழக்கி இழுத்து விடுவார் .

இந்தக் கதை மட்டுமா ...!

பாட்டி சொன்ன கதைகள் :-

  1. அலிபாபாவும் நாற்ப்பது திருடர்களும் கதை
  2. பால நாகம்மாள் கதை
  3. நல்ல தங்காள் கதை
  4. பட்டி விக்கிரமாதித்தன் கதை
  5. போஜ ராஜன் கதை
  6. கோவலன் கண்ணகி கதை (இது சிலப்பதிகாரம் என்பதெல்லாம் ஐந்தாம் வகுப்பிற்கு பிறகே தெரிய வந்தது!!!)
  7. கர்ணன் கதை
  8. குசேலன் கதை
  9. கிருஷ்ண லீலைகள்

இவையெல்லாமே என் பாட்டி சொன்ன கதைகளே ...அதென்னவோ அவர்களிடம் எப்போது போய் கதை கேட்டாலும் டக்கென்று ஏதாவது ஒரு கதையை கை வாசம் வைத்திருப்பார்கள்.

தலை முடியை மிருதுவாக வருடியவாறு பாட்டி சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டே வளர்வதென்பது ஒரு அழகான ஆனந்தம் தான் .என் பாப்புவுக்கு அந்த ஆனந்தம் அத்தனை நிறைவாகக் கிடைக்கவில்லை என்பது எனக்கொரு குறையே!?எனது குழந்தைப் பருவத்தில் எனக்கு கிடைத்த பல சுவாரஷ்யங்கள் என் குழந்தைக்கு இப்போது இல்லை.காலம் மாறி விட்டது .

அன்றெல்லாம் நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலுமே இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் இருப்பார்கள் .கிராமம் என்றால் சொல்லவே வேண்டாம் ...மாலை மயங்குகையில் எல்லா குழந்தைகளும் தெருவில் தான் கூடி நிற்பார்கள் .

  1. பாண்டியோ (இதை நொண்டி என்றும் சிலர் கூறுவார்கள் !)
  2. கள்ளன் ...போலீசோ (
  3. உதவியோ ?!(லாக் அண்ட் கீ )
  4. ஐஸ் பால் (அல்லது ஐஸ் ஒன் ...ஐஸ் டூ வோ !)
  5. கொலை கொலையாம் முந்திரிக்காயோ
  6. கண்ணா மூச்சி ரே...ரே வோ
  7. கிளியாந்தட்டோ
  8. கிட்டிப் புல்லோ

ஏதோ ஒரு விளையாட்டு தட புடல் பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் .

அது முடிந்ததும் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு ஓடி விட்டு கதை கேட்க கூடுபவர்களும் கூடுவார்கள் .எது எப்படி ஆயினும் கிராமங்களில் (90 )தொன்னூறுகளில் எட்டு மணிக்கே ஊர் அடங்கி விடும். அதனால் குழந்தைகளும் சீக்கிரமே தூங்கியாக வேண்டிய கட்டாயம் இருந்தது அப்போது .

இப்போதைப் போல 11 மணி வரை டி.வி பார்க்க வகையில்லை அப்போது...எனென்றால் டி.வி யே அப்போது எங்கோ ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும் .இப்படியெல்லாம் இருந்ததினால் அப்போது எல்லோருக்குமே கதை சொல்வதும் ...கதை கேட்பதும் ஒரு வித பொழுது போக்காக இருந்திருக்கலாம்.சிலர் திரைப் படங்களைப் பார்த்து விட்டு வந்து அதையும் கதை போலவே சொல்வார்கள் .
  1. அலிபாபாவும் நாற்ப்பது திருடர்களும்
  2. ஹரிச்சந்திரன் கதை
  3. சம்பூர்ண ராமாயணம் இதெல்லாமே அந்த வகை ;

இவையெல்லாம் தாண்டி என் அம்மா எனக்குச் சொன்ன சில கதைகளும் உண்டு .

  1. முயல் ஆமைக் கதை (slow and steady win the race)
  2. நான்கு சிங்கங்கள் கதை (the strength of unity)
  3. வேடனும் புறாவும்..எறும்பும் கதை (பலன் கருதாமல் செய்த உதவியின் நற்பலனை உணர்த்தும் கதை)
  4. தவளையும் எலியும் கதை (கூடா நட்பை உணர்த்தும் கதை)
  5. காகமும் பாம்பும் கதை (புத்திசாலித் தனத்தின் அவஷியத்தை உணர்த்தும் கதை)

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் .இதில் பல கதைகள் இங்குள்ள எல்லா அம்மாக்களுக்கும் தெரிந்தே இருக்கலாம்.தெரியாதவர்களுக்கு வாரம் ஒன்று வீதம் இனி நான் இங்கே சொல்கிறேன் .மேலே நான் குறிப்பிட்ட சில கதைகள் வெறும் கற்பனையை மட்டுமே தூண்டக் கூடியவை .என் அம்மா சொன்னதாக நான் குறிப்பிட்டவை மட்டுமே குழந்தைகளை அறிவுப் பூர்வமாக சிந்திக்கச் செய்யக் கூடியதாக இருக்கலாம் .

ஆனால் என்னைப் பொறுத்த வரையில் நம் குழந்தைகளுக்கு வெறும் அறிவு மட்டுமே போதும் என்பதாக எண்ண முடியவில்லை.அறிவோடு சேர்ந்து சிறிது கற்ப்பனை வளமும் வேண்டும்.எதிர் மறையான சிந்தனையை ஏற்படுத்தாமல் ராமாயணம்...பாரதம்...கர்ண பரம்பரைக் கதைகள்...பஞ்ச தந்திரக் கதைகள் ....ராமகிருஷ்ணரின் ஆன்மீகக் கதைகள்...ஹனுமனைப் பற்றிய கதைகள் எல்லாவற்றையும் பாசிடிவ் எண்ணங்கள் தூண்டப் படும் விதமாக சற்றே மாற்றி அல்லது முலாம் பூசி நாம் அவர்களிடத்தே சொல்லத் தகும் என்பதே என் கருத்து .

இங்கிருக்கும் அம்மாக்கள் எண்ண நினைக்கிறீர்கள் என்பதை பின்னூட்டத்தில் கூறுங்கள் .பாப்புவோடு கதை கேட்க நீங்கள் ரெடி என்றால் சொல்ல நாங்களும் ரெடி ....பிறகு தொடரலாம் ....பலப் பல வண்ண ...வண்ணக் கதைகளை.

10 comments:

நட்புடன் ஜமால் said...

நாங்களும் ரெடி.

நட்புடன் ஜமால் said...

எனக்கு என் சித்தப்பா ஒரு வித்தியாசமான கதை சொல்வாரு.

சட்னியும் சாம்பாரும்.

வயித்து உள்ள போய் போடும் சண்டை

ஆஹா அந்த நாட்கள் இனிமையான நாட்கள்

சந்தனமுல்லை said...

//நட்புடன் ஜமால் said...
நாங்களும் ரெடி.
//

ரிப்பீட்டு!

Anonymous said...

நான் குழந்தயா இருக்கச்சே என் பாட்டியை நானும் இப்படிதான் உங்க பெண்போல படுத்துவேன். அவங்க எனக்கு கம்பராமாயணம் கதையவே திரும்ப திரும்ப சொல்லுவாங்க. நிலாச் சோறுதான் சாப்பிடுவேன். என் பாட்டி கைதான் என்க்கு அருமையான ஸ்பூன். மறக்க முயவில்லை. அவர்களையும் நினைவுகளையும்.

Poornima Saravana kumar said...

ஹைய்யா கதை சொல்ல போறாங்க:)))

அமுதா said...

நான் ரெடிப்பா. ஹையா நிறைய கதை கிடைக்கப் போகுது. என் பொண்ணுக்கு தினம் விதம் விதமா கதை சொல்றது பெரிய சேலஞ்சா இருக்குது. இனி ஜாலி தான்

pudugaithendral said...

கையில் சோறு உருட்டி போட்டுக்கொண்டு கதை சொல்வது என் பிள்ளைகள் இருவருக்கும் மிகவும் பிடிக்கும்.

நானும் ரெடி.

Sasirekha Ramachandran said...

do i have to wait for ONNnne week?so sad!am in need of so many stories. am telling bed time stories nearly about one year.
appo ennoda nelamaya yosichippaarunga.

Dhiyana said...

தினமும் ஒரு கதை யோசிப்பது கஷ்டமாயிருக்கு. இனி ரொம்ப யோசிக்க வேண்டாம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நாங்க ரெடி, நீங்க ரெடியா

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger