புத்தகம் : Bubbles Owns Up, Bubbles Goes to School,Bubbles the Artist
வயது : 2-6
வழி : ஆங்கில புத்தகம்
எளிய புத்தகம். எளிய வார்த்தைகள். எளிய நடை. குழந்தைகளைக் கவரும் விதத்தில் படங்கள். ஏனோ, எளிய புத்தகங்களே எனக்கு விருப்பமானவை, பப்புவிற்கு படித்துக் காட்ட, கதைச் சொல்ல..
பபிள்ஸ் தான் இந்த சீரீஸின் ஹீரோ! 7-10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கும். எளிய ஆங்கில வார்த்தைகளில் கதாபாத்திரங்கள் பேசுவதுதான் மொத்தக் கதை! உதாரணத்திற்கு, பபிள்ஸ் ஓன்ஸ் அப் என் சீரிஸில், பபிள்ஸ் தனதுப் பொருட்களை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்கிறான் எனது சிறு சிறு நிகழ்வுகள் மூலம் விளக்கப் பட்டிருக்கும்!
எல்லாப் புத்தகத் தொடருமே, ஏதாவதொரு நல்ல வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, நமது அன்றாட நிகழ்ச்சிகளின் மூலம் சொல்லப்பட்டிருப்பதுதான் இதன் பலம். வெகு எளிதில் குழந்தைகள் அந்த இடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்வார்கள்.
தடிமனாக இல்லாமல் மெல்லிய பக்கங்களாக இருப்பதால், பெரியவர்களின் அருகாமை அவசியம்!
பபிள்ஸ் புத்தகம் பற்றிய மேல்விபரங்கள் இங்கே!!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
1 comments:
:) இப்போதைக்கு பொழில்குட்டிக்கு பபிள்ஸ் பொம்மை தான் வாங்கியிருக்கிறோம்...
அதையும் அவர் கையில் கொடுப்பதில்லை... வாயில் வைப்பதை தவிர்ப்பதற்காக :)
உங்கள் முறையை ஏற்று 2ம் வயதில் புத்தகம் வாங்கி விடலாம் :)
Post a Comment