தீஷூ இந்தப் பதிவை போட்டிருந்தாங்க.
அதில் எழுதச் சொல்லிக்கொடுப்பது எப்படின்னு பதிவு
போடறேன்னு சொல்லியிருந்தேன். அந்தப் பதிவு இதோ.
ஹார்ட்வேர்ட் கடைகளில் கிடைக்கும் சாண்ட் பேப்பர்களில்
எழுத்துக்களை எழுதி அந்த வடிவத்திற்கு கட் செய்து
அதை ஒரு கெட்டியான அட்டையில் ஒட்டி
வைத்துக்கொள்ள வேண்டும்.
படத்தில் குழந்தை செய்வது போல் விரல் நுனியால்
அந்த எழுத்துக்களின் மேல் எழுதுவது போல்
ட்ரேஸ் செய்யவேண்டும். ட்ரேஸ் செய்துமுடித்ததும்
அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும்.
மரத்தினால் அல்லது பிளாஸ்டிக்கில் எழுத்துருவங்கள்
கிடைக்கும் அதை MOVABLE ALPHABET என்போம்.
அதைக் கையில் எடுத்து பார்த்து குழந்தை
உணர வைக்க வேண்டும்.
முதலில் vowels எனப்படும் A E I O U எழுத்துக்களை
சொல்லிக் கொடுக்க வேண்டும்.
பிறகே consonants.
எழுத்தின் வடிவம், உச்சரிப்பு ஆகியவை
மனதில் நன்கு பதிந்த பின்னரே எழுதப் பழக்க வேண்டும்.
sand paper letters, movable alphabets ஆகியவற்றைக்
கொண்டு 2 எழுத்து வார்த்தைகள், 3 எழுத்து
வார்த்தைகள் ஆகியவை செய்ய கற்றுக் கொடுக்க
வேண்டும்.
picture + letters (a for apple, b for ball போல)
செய்து மனதில் பதிய வைக்கலாம்.
இதன் பிறகுதான் எழுத்துப் பயிற்சி. அப்பொழுதும்
தான் கற்ற எழுத்துக்களை உடனடியாக
எழுதச் சொல்லக்கூடாது.
patterns எனப்படும் வடிவங்களை கற்றுக்
கொடுத்தால் எப்படி எழுத வேண்டும் என
குழந்தை புரிந்துக்கொள்ளும்.
கீழே கொடுத்திருக்கும் patterns புள்ளி புள்ளியாக
வைத்து BROAD LINE NOTE BOOK எனப்படும்
பெரிய 4 வரி நோட்டில் எழுதிக்கொடுத்து
கலர் பென்சிலால் புள்ளிகளை இணைக்கச்
சொல்ல வேண்டும்.
இவை எந்த மொழிக்கும் அடிப்படை பேட்டர்ன்கள்
ஆகும்.
இவைகளை எழுதப் பழக்கிய பிறகு(strokes களின்
பெயர்களை பிள்ளை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்)
ஆல்ஃபபட்களை எழுத பழக்கலாம்.
இதை அடிப்படையாக வைத்து எப்படி எழுதப் பழக்குவது??
அது அடுத்தபதிவில்.
12 comments:
நீங்கள் நல்ல விசயம் எழுதி இருக்கிறீர்கள்.. என் மகளுக்கு முதலில் இதே போலத்தான் லைன்கள் பழக்கினார்கள்.. பின்னர் ஆரம்பித்தது I, O, L T போன்ற எளிமையான எழுத்துக்கள்.. அப்ப எனக்கு ஆச்சரியமா இருந்தது.. நம்மல்லாம் ஏ பி ன்னு ஆரம்பிச்சமேன்னு ..பட் இது நல்ல வழக்கம்..இப்ப மகன் ஐ ம் ஓ வும் மட்டும் எழுதுவான்.. ப்ளே ஸ்கூலிலேயே எழுதசொல்லிக்கொடுக்கவா என்று கேட்டப்ப மறுத்துட்டேன்..
குட் போஸ்ட்.
நல்ல விடயம்தான்.
பிறகு உபயோகப்படும்.
ஆமாம். எழுதக் கூடத் தெரியாமல் அந்தப் பிள்ளைகள் படிக்கும் பொழுதுஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஆனால் அருமையான முறை இது.
மிக்க நன்றி முத்துலெட்சுமி
பதிவுக்கு நன்றி புதுகைத் தென்றல்
பத்மாவும் இப்படித்தான் பழகுகிறாள்.நல்ல முறைதான்!!!
எழுத்துப் பழக்குவதற்கு நல்ல முறைதான். பலருக்கும் உதவும் நல்ல பதிவு.
Pretty Good information.....on how to teah writing. Thanks for that.
நன்றிக்கு நன்றி தீஷூ
பத்மாவும் இப்படித்தான் பழகுகிறாள்.//
ஓ அப்படியா?
நல்ல முறைதான்!!!//
ஆமாம். இதுதான் சரியான முறை
பலருக்கும் உதவும் நல்ல பதிவு.//
மிக்க நன்றி மாதவி
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி அன்புசிவம்.
Great அக்கா!
சூப்பர் பதிவு.
Post a Comment