குழந்தைகளுக்கு நாம் எவ்வளவோ கற்றுக்கொடுக்கிறோம்.ஆனால் அவர்கள் முக்கியமாக தெரிந்துகொள்ளவேண்டியவைகளுள் இதுவும் அடக்கம்.
பெற்றோரின் தொலை(கை)பேசி எண்கள்.சமயங்களில் அவர்கள் நம்மை தொடர்பு கொள்ள இது ரொம்ப அவசியம்!!
இதெல்லாம் எதற்கு?நாம்தான் பள்ளியில் விடுகிறோம்,பின்பு அழைத்து வருகிறோம்.எங்கு சென்றாலும் நாம்தான் கவனமாக பார்த்துக்கொள்கிறோம்!என்று மட்டும் நினைக்க வேண்டாம்.நம்மையும் அறியாமல் சில இக்கட்டான சூழ்நிலைகள் வர வாய்ப்புகள் உண்டு.எதையும் கற்றுக்கொடுப்பதில் தவறில்லை அது வீணாகவும் போகாது.
அவர்கள் எத்தனை பெரிய பாடல்களாக இருந்தாலும் அதை எளிதாக படித்து விடுகிறார்கள்.இந்த பத்து எண்கலையா மனதில் பதித்துக்கொள்ள முடியாது?
மூன்று வயது குழந்தைகள் முதல் அனைத்து வயது குழந்தைகளுக்கும் பொருந்தும்!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
5 comments:
அவசியமான விஷயம் தான். மேலும் தந்தை/தாயின் பெயர், முடிந்தால் வீட்டு முகவரியையும் சொல்லித் தரலாமே.
அவசியமான விஷயம் தான். மேலும் தந்தை/தாயின் பெயர், முடிந்தால் வீட்டு முகவரியையும் சொல்லித் தரலாமே.//
வழி மொழிகிறேன். அத்துடன்
நம் வீட்டிற்கு வரும் வழியையும் ஞாபகப்படுத்தலாம்.
நம்முடன் வரும்பொழுது எனக்கு வீடுத்தெரியலை என்னைய கூட்டிட்டு போ, ஆனா மெல்ல,”என்று சொன்னால் பெரிய மனிதத் தன்மையுடன் அழைத்துச் செல்வார்கள்.
இதற்கு முன் நம்ம வீட்டுக்கு பக்கதில் இந்தக் கடை இருக்கு, இங்கேர்ந்து இப்படி என பேசிக்கொண்டே வருவது மிக முக்கியம்.
என் அனுபவம் இது
ஆமாம். மிக அவசியம்
நீங்கள் சொல்வதும் சரிதான்!!அதையும் செய்யலாம்.
புதுகை தென்றல்,நீங்கள் சொல்வதுபோல் வீட்டிற்கு வரும் வழியையும் சொல்லித்தர வேண்டும்.இது மிகவும் முக்கியம்.முடிந்தவரை நான் பின்னாளில் அதைப்பற்றி விளக்கமாக தகவல் கொடுக்கிறேன்.நன்றி!!
நல்ல டிப்ஸ் சசி!!
//அத்துடன்
நம் வீட்டிற்கு வரும் வழியையும் ஞாபகப்படுத்தலாம்.
//
:-)))
வாக்கிங் போய்ட்டு, திரும்ப வீட்டை நோக்கி போக ஆரம்பிக்கும்போதே தெரிஞ்சுடுது இந்தக் காலத்துப் பசங்களுக்கு! அதுக்கு எதிர் பக்கம் நம்மை இழுத்துக்கிட்டு போவாங்க!!
Post a Comment