கடந்த மாதம் சஞ்சய்க்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். நான்கு நாட்கள் அங்கேயிருந்தபோது டாக்டரிடமோ, நர்சுகளிடமோ குழந்தை என்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லாதது கண்டு ரொம்பவே அதிர்ச்சியானேன். குழந்தைக்கு ரத்தப் பரிசோதனைக்கு சாம்பிள் எடுப்பதிலிருந்தே நர்சுகள் எரிந்து விழுந்தார்கள். எதற்குத் தெரியுமா? ஊசி குத்திய பின்னும் குழந்தை அழுதுக்கொண்டே தான் இருந்தான். "ஏண்டா அழற. அதான் needle எடுத்தாச்சுல்ல" என்று அதட்டினார். Needle எடுத்துவிட்டால்
வலியிருக்காதா குழந்தைக்கு??
நரம்பு(IV) மூலமாக தான் மருந்தும், குளுக்கோசும் செலுத்தினார்கள். குழந்தையோ கையிலிருக்கும் பேண்டேஜைப் பார்த்து பார்த்து அழுகிறான். நர்சுகள் வந்தாலே அழுகை இன்னும் ஜாஸ்தியாகிவிடும். என்ன மருந்து கொடுக்கிறீர்களென கேட்டபோது "சொன்னா உங்களுக்குப் புரியுமா" என்றார். "புரியற மாதிரி நீங்கதான் சொல்லனும்" என்றேன். முறைத்துவிட்டு வீசிங்
குறைய மருந்தும், ஆண்டிபயாடிக்குடன் குளுக்கோசும் ஏறுகிறது என்றார். டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது சில கேள்விகள் கேட்டோம். எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்த அவர். "இப்படிதான் இருக்கும். நான் ஒரு நாளைக்கு 300 கேஸ்??? பார்க்கிறேன்." என்றார். அவருக்கு வேண்டுமானால் என் குழந்தை 300ல் ஒரு கேஸாக இருக்கலாம். ஆனால் எனக்கு??
மருத்துவமனைகளில், அதிலும் குழந்தைகள் நல மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கு பாலூட்ட ஒரு அறைக்கூட இல்லை. அடையாறில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் கழிவறையில் கை அலம்புமிடத்தில் பெண் தன் குழந்தையின் பசியாற்றிக்கொண்டிருந்தார். அதிர்ந்து போனேன். உள்ளே நுழைந்தாலே நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ள இடத்தில், குழந்தைக்கு பால் தருவது எவ்வளவு முட்டாள்தனமானது. இத்தனைக்கும் அப்பெண் படித்தவர். கேட்டதற்க்கு வேறு இடமில்லை என நர்ஸ் கூறியதாக சொன்னார். கோடி கோடியாக செலவு செய்து மருத்துவமனை கட்டுபவர்கள் ஒரு சிறிய அறையை இதற்கென ஒதுக்கலாமே. கவனிப்பார்களா?
குழந்தைகளுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்கள் உரிமையும் கூட. மேலும் இந்த சிகிச்சையின் பலன்கள் எப்படி இருக்கும், மருந்துகளை எத்தனை நாட்கள் கொடுக்க வேண்டும், மருந்து கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள் ஏதேனும் உண்டா, மருந்து முடிந்த பின் மீண்டும் பரிசோதனைக்கு வரவேண்டுமா போன்ற கேள்விகளை தவறாமல் கேளுங்கள்.
பி.கு : இது முழுக்க முழுக்க என் சொந்த அனுபவம் தான். நான் எல்லா மருத்துவர்களையும் குறை கூறவில்லை.
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
13 comments:
//மருத்துவமனைகளில், அதிலும் குழந்தைகள் நல மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கு பாலூட்ட ஒரு அறைக்கூட இல்லை//
இதுபோல சொல்றதுக்கு நிறைய இருக்கு,நான் வழக்கமாக என் குழந்தைகளுக்காக செல்லும் இடத்தில் டாக்டர் டோக்கன் சிஸ்டம் எடுத்து விட்டார்.முதலில் வருபவர்களுக்கு முதலில் treatment என்று .
இவரே ஒரு மணிநேரம் லேட் ஆக வர அதற்கு மேலே நம் முறை வர ஓரிரு மணி நேரம் என்று ,சிறிய குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமமாக இருக்கும்.எல்லா குழந்தைகளும் ஒரே நேரத்தில் அழ ,அந்த நினல்யை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.நமக்கு என்று ஒரு டோக்கன் நம்பர் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் appointment கொடுத்துவிட்டால் நாம் வந்து பார்த்து கொள்வோம் அல்லவா,இதில் அவர்களுக்கு என்ன பிரச்னை?
திருந்தவே மாட்டாங்க.. ஜூனியர் எப்படியிருக்காரு
I am read all post in monthers blog.. great work.. I look for more..
Bloger's pl write more for kutties dad/mum..
kindly expose the hospital.. so all should know about it...
No reviews about hospitals in the web.. each case may be differ but we world should know what is happening..
Hope your kid doing fine now..
VS Balajee
அய்யோ பாபு. திருப்பதி ஏழுமலையானைக்கூட சீக்கிரம் தரிசனம் பண்ணிடலாம். ஆனா டாக்டர்கள பார்க்கறதுக்குள்ள கண்ணகட்டிடும்:(
குழந்தை இப்ப நலமா..
இது போன்றதொரு அனுபவம் எனக்கும் உண்டு. ஐசியூ வரை கொண்டு சென்றுவிட்டு அந்த நிலைமைகளை பார்த்து பதறி.. என் சொந்த ரிஸ்கில் கூட்டிப்போகிறேன் என்று கையெழுத்துப்போட்டு வெளியே கொண்டுவந்துவிட்டேன் என் மகனை.. :(
hey,hope is is fine..TC
வருத்தமாகத்தான் இருக்கு.
பெரியவர்களையே சரியா கவனிக்க மாட்டாங்க. இதுல புள்ளைங்களை எங்க பாக்கறது.
என் தங்கையை கடுமையான இருமலுக்காக ஹாஸ்பிட்டல் அழைத்துச் சென்றார் என்னவர்.
அங்கே அந்த டாக்டர் என் தங்கையிடம்,” கன்சீவ் ஆகியிருக்கியா? என்று கேட்டிருக்கார். இல்லைன்னு சொன்னதும் கல்யாணம் ஆகிடிச்சான்னு??!!” கேட்டிருக்காங்க. பக்கத்துல பாவா நிக்கறாங்க இந்த் டாக்டரம்மா இப்படி கேட்டு மானத்தை வாங்கிப்புட்டாஙளேன்னு அந்த ஹாஸ்பிடல் மேலையும், அந்த டாக்டர் மேலையும் காண்டாவே இருக்கா.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல அது அப்ப பழ்மொழி, டாக்டர்னு பட்டம் போட்டுக்கறவங்க எல்லாம் டாக்டர் இல்ல இது என் பழமொழி.
ஜூனியரைப் பாத்துக்கோங்க.
how is sanjay now?
this is the time u can point out the hospital name.so that others will not get in to that trouble
:=((((
அய்யோ, இந்த டாக்டருங்க அலம்பல் பெரிய அலம்பலுங்க... இந்தமாதிரி பல விசயங்கள் எனக்கும் நடந்திருக்கு... இப்பல்ல்லாம் இவங்க வெறுப்புக்கு பயந்துட்டே, தலைவலின்னா கூட ஆஸ்பத்திரிக்கு போகறதில்லை..
கண்டிப்பா என்ன மருந்து, விளைவுகள் என்ன போன்றவைகளெல்லாம் கேட்டுக்கணும்...
******** கண்டிப்பா என்ன மருந்து, விளைவுகள் என்ன போன்றவைகளெல்லாம் கேட்டுக்கணும் ********
இது மாதிரி கேட்டுக்கிட்டு அடுத்த முறை சுயமா மருந்து கொடுக்கறவங்க எவ்வளவு பேரு நம்ப ஊருல இருக்காங்க தெரியுமா ? இல்லாட்டி அடுத்த முறை போகும் போது டாக்டருக்கே என்ன மருந்து கொடுத்தா சரியா போகும்ன்னு சொல்றவங்க எவ்வளவு பேரு தெரியுமா ? இரண்டே நாள்ல இந்த டாக்டர் சரி இல்ல, வேற ஒருத்தர் கிட்ட போகலாம்ன்னு hop பண்றவங்க எவ்வளவு பேரு இருக்காங்க தெரியுமா ? அவங்கள மட்டும் குறை சொல்ல முடியாது. நம்ப மக்கள் கொடுக்கற டார்ச்சர் கொஞ்ச நஞ்சம் கிடையாது. அதையும் அருமையா கையாளும் ஒரு சில டாக்டர்கள் இருக்காங்க. எல்லா டாக்டருக்கும் அந்த maturity வரணும்.
அதுவும் நிச்சயமா ஒரு குழந்தையை அழைச்சிக்கிட்டு போகும்போது, டாக்டர் பொறுமையா தான் பேசணும். நர்ஸ் இன்னும் பொறுமையா தான் இருக்கணும். மக்களும் ரொம்ப புடுங்கக்கூடாது. நல்ல விசாரிச்சிக்கிட்டு டாக்டர் செலக்ட் பண்ணனும். அதுக்கு பிறகு, கொஞ்சமாவது டிரஸ்ட் வைக்கணும்.
வித்யா, இது என்னோட general வியூ. உங்களோட தனிப்பட்ட அனுபவதுக்கான பதில் இல்ல.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. குழந்தை இப்போதூ பூரண நலம். இது நடந்தது போன மாதத்தில்.
மணிகண்டன்
மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் ஜூரம் தவிர வேறு எதற்க்கும் சுயமாக மருந்து கொடுப்பது கிடையாது. நீங்கள் சொல்வது போல் மக்கள் நடப்பார்களேயானால் அது மிகவும் கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.
தீஷு இங்கு பிறந்த பொழுது, என் கணவர் தவிர, வேறு துணை கிடையாது. இந்த நர்ஸ் எனக்கு செய்து விட்ட வேலைகளை என் அம்மா மட்டுமே செய்ய முடியும். ஆனால் அந்த முகத்தில் சிடுசிடுப்போ, அருவருப்போ இல்லை. நான் நன்றி சொன்ன பொழுது, Take it easy என்றார் சிரித்தபடி. நன்றிக்கு ஒரு card கொடுத்து விட்டு வந்தோம். நம் ஊரில் இவ்வளவு தூரம் செய்யவிட்டாலும், மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளலாமே..
Post a Comment