ஒவ்வொரு குழந்தைக்கும் எழுத, வாசிக்கப் பழகுவது முக்கியமான ஒரு கட்டமாகும். எழுதுவது, வாசிப்பது போன்றவை பேசுவது போல் இயற்கையாக வருவதில்லை. நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். எந்த வயதில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற ஐயம் எல்லோர் மனதிலும் உண்டு. சிறு வயதிலே எழுதப் பழக்குகிறார்கள் என்ற காரணத்தால் சில தோழிகள் சில பள்ளிகளை நிராகரித்திருக்கிறார்கள்.
சிறு வயதில் எழுதப் பழக்குவது தவறா? குழந்தை விருப்பமில்லாமல் இருந்தால் தவறு. விருப்பமில்லாத குழந்தைகளை வற்புறுத்துவதால் அவர்கள்களுக்கு எழுதுவதன் மேல் ஒரு வெறுப்பு வந்து விடும். எழுதுவது என்பது எளிதான காரியம் இல்லை. அதற்கு கை, கண், விரல், மூளை அனைத்தும் ஒத்துழைக்க வேண்டும். மூளையில் பதிந்துள்ள எழுத்துக்களின் வடிவங்களை விரல்கள் ஒரு இடத்தில் எழுத கையும், கண்ணும் உதவ வேண்டும்.
எப்பொழுது எழுதப் பழக்கலாம்? அது குழந்தைக்கு குழந்தைக்கு மாறுபடும். ஒரு குழந்தை சீக்கிரமாக எழுதுவதால் அறிவாளி என்றோ, எழுதாததால் மக்கு (சாரி, வேறு வார்த்தை தெரியவில்லை) என்றோ எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு குழந்தையின் வளரும் சூழலுக்கு ஏற்ப அதன் எழுதத் தொடங்கும் வயது மாறுபடும். பெற்றோர்கள் அதிகம் புத்திகங்கள் வாசித்தாலோ, எழுதினாலோ குழந்தைகளும் எழுத விருப்பப்படுவார்கள். சிறு வயதிலிருந்தே (பிறந்ததிலிருந்தே) புத்தகங்கள் குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டினால், அவர்கள் வேகமாக எழுதப் பழகுவார்கள்.
எழுதப் பழக்குவதற்கு முன்
1. எழுத்துக்களைக் கண்டுபிடிக்கப் (identify letters) பழக்குங்கள்.
2. பேப்பர், பேனா, மார்க்கர், crayons போன்றவற்றை எப்பொழுதும் குழந்தைக்கு எடுக்க வசதியாக இருக்கும் இடத்தில் வைத்திருங்கள். கிறுக்கவும், வரையவும் பழக்குங்கள்.
3. குழந்தைகளுக்கு பலவித வடிவங்கள் வரைய கற்றுக் கொடுங்கள். புள்ளி புள்ளியாக வடிவங்கள் வரைந்து புள்ளிகளை இணைக்கச் சொல்லுங்கள்.
4. பெயரை எழுதப் பழக்குங்கள். கடிதம், வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பொழுது அவர்கள் பெயரை அவர்களே எழுத சொல்லுங்கள்.
ஆதாரங்கள் :
http://www.everyday-education.com/articles/teachtowrite.shtml
http://www.ed.gov
http://www.zerotothree.org
http://children.webmd.com/features/when-should-kids-learn-read-write-math
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
5 comments:
ரொம்ப நல்ல கருத்து. அதுவும் முதல் நான்கு எழுத்து எழுத ரொம்ப கஸ்ட படனும் அப்புறம் பாருங்க அவங்களே ஆர்வமா எழுத ஆரம்பிச்சுடுவாங்க..
ஒரு தாம்பாளத்தில் மணல் பரப்பில் அதில் பிள்ளையை கைவிரல் நுனியால் எழுதப் பழக்க வேண்டும்.
SAND PAPER ஹார்ட் வேர்ட் கடைகளில் கிடைக்கும். அதில் எழுத்துக்களை எழுதி வெட்டி அதை தனது விரல் நுனியால் ட்ரேஸ் செய்யச் சொல்ல வேண்டும்.
எழுத்தின் வடிவத்தை எடுத்து பார்க்கும் விதத்தில் movable alphabetsபோல கொடுத்து சொல்லச் சொல்ல வேண்டும்.
இவை எல்லாம் முடிந்த பிறகே எழுதச் சொல்ல முடியும்.
தாரே ஜமீன் பர் படத்தில் அமீர்கான் அந்த மாணவனுக்கு சொல்லிக்கொடுக்க்கும் காட்சியை ஞாபகப்படுத்தி பாருங்கள்.
அதுதான் சரியான முறை.
எழுத்துக்களை எழுதச் சொல்லிக் கொடுக்காமல் patterns தான் பழக்க வேண்டும்.
அதைப் பற்றி ஒரு பதிவு அதிவிரைவில் இங்கே தருகிறேன்.
நன்றி மலர்
எழுந்துங்கள் புதுகைத் தென்றல். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
குழந்தைக்கும் எழுத, வாசிக்கப் பழக்குவது பற்றி இவ்வளவு ஆதாரங்களுடன் எழுதிய உங்கள் பொறுப்புணர்வு அதிசயிக்க வைக்கிறது.
Post a Comment