Thursday, April 23, 2009

ஒரு அம்மாவின் குறிப்புகள் - 2

நேற்றைய பதிவின் தொடர்ச்சி........

குழந்தைகள் வளர்ப்பு பொதுவாக குழந்தைகளுக்கு உடல் பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொண்டால், நாமும் நலம், குழந்தையும் நலம். அதில் குறிப்பாக அடிக்கடி குழந்தைகளிடம் பார்ப்பது சளித்தொல்லை. பள்ளிக்கு செல்ல ஆரம்பிக்காத குழந்தைகளுக்கு சளிப்பிடித்தால் அதற்கான முழுப்பொறுப்பு குழந்தையின் அம்மாவே சேரும். சளிப்பிடிப்பதால் குழந்தைகள் சாப்பிடுவதும், சாப்பாட்டின் அளவும் ரொம்பவும் குறைந்துவிடும், தூக்கம் கெடும், மூச்சு பிரச்சனை போன்றவை ஏற்படும், சளிப்பிடிக்காமல் இருக்க..

1. அம்மா சரியான உணவை சாப்பிட வேண்டும். அதிக குளிர்ச்சியான உணவுகள் கூடாது. செள செள (பெங்களூர் கத்திரிக்காய்), பீரிக்கங்காய், புளித்த தயிர், சுடசாதத்தில் தயிர் விட்டு சாப்பிடுவது, வியர்வையோடு குளிப்பது, சுடத்தண்ணீர், குளிர்ந்த தண்ணீர் இரண்டையும் கலந்து குடிப்பது, வியர்வையோடு சில்லென்று தண்ணீர் குடிப்பது போன்றவையால் உடனுக்குடன் சளிப்பிடிக்கும். ஒவ்வாத குளிர்ச்சியான காய்கரிகள் சாப்பிடக்கூடாது. தலைக்கு குளித்தால் தலையை ஈரத்தோடு விட்டுவிடுவது போன்றவை.

2. கைவிரல்களின் நகங்கள் சுத்தமாக இருக்கவேண்டும். நகங்களே இல்லாமல் இருந்தால் நலம். ஒவ்வொரு முறை கழிவரை சென்று வந்த பிறகு சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.

3. தினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு எது செய்தாலும் கை கழுவிவிட்டு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

4. எல்லோரையும் குழந்தைக்கு முத்தமிட அனுமதிக்கக்கூடாது. இதை தடுப்பது அம்மாக்களில் கையில் மட்டுமே இருக்கிறது.

5. குழந்தைக்கு குளிக்க ஊற்ற அழைத்து செல்வதற்கு முன், தேவையானவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். அதாவது தண்ணீர் பதமான சூட்டில் இருக்கிறதா? என்று பார்த்து பதமான சூட்டில் வைத்துக்கொள்ள வேண்டும், சோப்பு, ஷாம்பூ, (அ) சியக்காய், உடல் துடைக்க டவல் போன்றவை கைக்கு எட்டும் தொலைவில் வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தையை குளிக்க எடுத்த சென்ற பிறகு இந்த வேலை எல்லாம் செய்யக்கூடாது. அதே போல் குழந்தைக்கு உடலில் தண்ணீர் ஊற்றும் போது சின்ன அளவு குவலையை பயன்படுத்த வேண்டும். எங்கள் வீட்டில் ஆயா குழந்தைக்கு தண்ணீர் ஊற்ற டம்ளரை தான் பயன்படுத்துவார்கள். காரணம் அதிகமாக தண்ணீர் ஊற்றினால் சில சமயம் குழந்தை சுவாசிக்க கஷ்டப்படும். டம்ளரில் கூட அரை அரை டம்ளராக உள்ளங்கையால் டம்ளரின் வாயை பாதி அளவு மூடி வேக வேகமாக ஊற்றுவார்கள். பின் குளித்தமுடித்த கையோடு, டவலால் குழந்தையை உடனே சுற்றிவிடவேண்டும். 4-5 வயது வரை கூட இப்படி செய்வது நல்லது. தண்ணீரில் குழந்தைகளை ரொம்ப நேரம் விளையாடவிடுவதும் கூட சளித்தொல்லைக்கு காரணம்.

6. குளித்துமுடித்து பிறகு, பஞ்சை திரியாக்கி காது, மூக்கில் விட்டு தண்ணீர் இருந்தால் எடுத்துவிட வேண்டும். இது செய்ய தெரிந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். சில சமயம் மூக்கில் விடும் போது குழந்தை மூச்சை நன்றாக இழுத்துவிட்டால் பஞ்சி உள்ளே சென்றுவிடும். அதனால் மிகவும் ஜாக்கறதையாக செய்ய வேண்டிய விஷயம். இது ஒவ்வொரு முறை குளித்த பிறகும் செய்யவேண்டும். நம்மை அறியாமல் காதிலோ மூக்கிலோ தண்ணீர் சென்று இருந்தால், இப்படி செய்வதின் மூலம் உடனுக்குடன் எடுத்துவிடலாம்.

7. தலை காயவைக்க நான் சாம்பிராணி புகை போடுவேன். ஆனால் இது எல்லா குழந்தைகளுக்கும் அம்மாக்களுக்கும் ஒற்றுக்கொள்ளாது என்பதை நேரில் பார்த்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் இப்படி புகை போட்டு தலைமுடியை காயவைப்பது தான் பழக்கம். அதனால் நவீனுக்கு எப்பவும் அப்படியே செய்வேன். இதுவும் டாக்டரின் ஆலோசனை கேட்டு உங்களுக்கும் குழந்தைக்கும் ஒற்றுக்கொள்ளும் பட்சத்தில் செய்யலாம். சாம்பிராணி புகையால் சளித்தொல்லை இருக்காது, கூந்தல் வாசனையுடன் இருக்கும்.

8. பொதுவாகவே நம் உடம்பில் எப்போதும் உள்ளுக்குள் சளி இருக்கும். அது இயற்கை. குளிக்க ஊற்றி முடித்தவுடன், ஆயா நவீனின் ஒரு மூக்கின் ஒரு துளையில் விரல் விட்டு அடைத்து இன்னொரு துளையில் வேகமாக ஊதுவார்கள். அவனுக்கு சளி இல்லை என்றால் கூட அவர்கள் அப்படி செய்யும் போது சளி வெளியே வரும். இதுவும் அதில் தேர்ந்தவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். அவன் வலிதாங்காமல் அழுவான், அவன் அழுவதை பார்த்து ஆயா இதைமட்டும் இனிமே நீ செய்யாதே என்று ஒவ்வொரு முறையும் சொல்லுவேன். :). எனக்காக ரொம்பவும் ஊதாமல் விட்டுவிடுவார்கள். :)

9. நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வசம்பு, கண்டத்திப்பிலி, சாதிக்காய் இவற்றை விளக்கெண்ணெய் விட்டு எரியும் விளக்கில் சூடாக்கி கரியாக்கி, சின்ன சந்தனகல்லில் இழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடுவார்கள். இதன் பலன், செய்முறை முழுமையாக தெரியாது, யாருக்காவது தெரிந்தால் எழுதி விளக்கவும்.

(மேற்க்கூறிய குறிப்புகள் அத்தனையும் ஆயா எனக்கு சொல்லிக்கொடுத்து தினப்படி நான் பழக்கிக்கொண்டது. )

அணில் குட்டி அனிதா : ... எனக்கு தூக்கம் வருது... :((

பீட்டர் தாத்தா :- Cough is very common in children. However, cough and cold medicines are not useful in children and can actually be harmful. In most cases, a cough that is unrelated to chronic lung conditions, environmental influences, or other specific factors, will resolve on its own.

19 comments:

Vidhya Chandrasekaran said...

ரொம்பச் சரி கவிதா. ஆனால் அந்ட்க மூக்கு ஊதறது, வசம்பு கொடுக்கிறது இதை ரெண்டும் நான் என் பையனுக்கு செய்ய விடவேயில்லை:)

சந்தனமுல்லை said...

நல்ல தொகுப்பு கவிதா! முத்த்மிடுதலை தவிர்க்க நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல! ஒரு சிலர் புரிந்துக் கொள்வர். தொடர்ந்து எழுதுங்கள்!

ஆகாய நதி said...

நல்ல பதிவு...

இந்த முத்தமிடுதலைத் தவிர்க்க முடியவில்லை... இதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை.... :( இதனால் நானும் மிகவும் சிரமப்படுகிறேன் :(

//
9. நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வசம்பு, கண்டத்திப்பிலி, சாதிக்காய் இவற்றை விளக்கெண்ணெய் விட்டு எரியும் விளக்கில் சூடாக்கி கரியாக்கி, சின்ன சந்தனகல்லில் இழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடுவார்கள். இதன் பலன், செய்முறை முழுமையாக தெரியாது, யாருக்காவது தெரிந்தால் எழுதி விளக்கவும்.

//

இந்த மருந்து குழந்தையின் வயிற்றை சுத்தப் படுத்தும், 1&2 ஒழுங்காக செல்லும், வயிற்றில் உள்ள மப்பு நீங்கிவிடும்... உடல் குளிர்ச்சி பெரும்... இதனோடு பெருங்காயம், சுக்கு போண்ரவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம் அவையெல்லாமே எது எப்போது தேவை என்பதற்கேற்ப கொடுப்போம்...

இது எனக்கு தெரிந்தது... மேலும் தெரிந்தவர்கள் விளக்கவும் :)

ஆகாய நதி said...

பொழிலனுக்கு அடிக்கடி சளி பிடிப்பதால் மருத்துவர் அவனுக்கு யாரையுமே முத்தம் கொடுக்கவிடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்... அப்பா அம்மா கூட ஓரளவிற்கு தான் கொடுக்கலாம்... மற்றவர்கள் யாரானாலும் கொடுக்கக்கூடாது என்றார்... ஆனால் நான் இதை எப்படி செயல்படுத்துவது?
:(

ஆகாய நதி said...

மூக்கில் ஊதுவது சரியான பழக்கமில்லை என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்... நம் வாயில் உள்ள கிருமி குழந்தை மூக்கு வழியாக உட்செல்லும் அபாயம் அதில் உள்ளது... இதுவும் ஒரு வகையில் முத்தம் கொடுப்பதால் கிருமி தொற்றும் வகை தான்...

நீங்கள் கூறியது போல் பஞ்சு திரி அல்லது தூய வெள்ளைத் துணி மூலம் மூக்கு, காது, தொப்புள் மூன்றையும் சுத்தப் படுத்தவது நல்ல வழி... :)

ஆகாய நதி said...

//
செள செள (பெங்களூர் கத்திரிக்காய்), பீரிக்கங்காய், புளித்த தயிர், சுடசாதத்தில் தயிர் விட்டு சாப்பிடுவது,
//

அறியாத செய்திகள்... ரொம்ப நன்றி கவிதா! :)

Sasirekha Ramachandran said...

//முத்த்மிடுதலை தவிர்க்க நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல! ஒரு சிலர் புரிந்துக் கொள்வர்.//

me too!!

கவிதா | Kavitha said...

ஆஹா எல்லா அம்மாவிற்கும் குழந்தைகளுக்கு முத்தமிடுதல் பெரிய பிரச்சனையாக இருக்கும் போலவே ?!!

சரி நாளைக்கு இதை பற்றி எழுதுகிறேன்.. ஒரு அவர்நெஸ் வந்தால் ஒழிய நம் மக்கள் இதை நிறுத்த மாட்டார்கள்.. சொல்லுவதை சொல்லிக்க்கொண்டே இருப்போம்.. :)

//நீங்கள் கூறியது போல் பஞ்சு திரி அல்லது தூய வெள்ளைத் துணி மூலம் மூக்கு, காது, தொப்புள் மூன்றையும் சுத்தப் படுத்தவது நல்ல வழி... :)
//

ஆகாயநதி தூய வெள்ளை துணி சிறந்தது.. :))) நானும் செய்திருக்கிறேன்.. மறந்துவிட்டேன்..ப்பா.. :))

கவிதா | Kavitha said...

தொடர்ந்து எழுதுங்கள்!
..//

முல்ஸ் எழுதிட்டா போச்சி.. :))

கவிதா | Kavitha said...

@ வித்யா - நன்றி

@ முல்ஸ் - நன்றி

@ ஆகாயநதி - நன்றி

@ சசிரேகா - நன்றி

ஆகாய நதி said...

இந்த சளி தொல்லைக்கு ஏதேனும் தீர்வு கூறுங்களேன்... குழந்தைக்கு அடிகடி சளி பிடிப்பது சரி ஆனால் எனக்கும் அடிக்கடி சளி தான் அதனாலேயே பாவம் பொழிலுக்கும் அடிக்கடி சளி :(

இன்று சளி அதிகமாகி காய்ச்சலும் கூட பொழிலுக்கு :( ஏற்கனவே ஒரு முறை அதிக சளியினால் அவனுக்கு காய்ச்சல் வந்துள்ளது...

சிசேரியன் செய்யும் அன்று காலையே சளி தான்... மாலை சிசேரியன்... அன்று முதல் சளி விடாப்பிடியாக போவேனா என்கிறது :(

ஐயோ வயிற்றில் தையலுடனும் எனக்குக் காலில் ஏற்பட்ட பிரச்சனையுடனும் இந்த சளியை சமாளிக்க நான் பட்ட பாடு கொஞ்சம் அல்ல...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மருந்து நானும் குடுத்தேன் சாதிக்காய் எக்ஸட்ரா.. முதல் குழந்தைக்கு உரைத்துக் கொடுத்தேன்.. இரண்டாவதுக்கு எல்லாம் சாமான்களும் சேர்த்து உருண்டையாக்கி (சின்ன சின்ன உருண்டை உருண்டையாக) ரெடிமேடாக கிடைத்தது ..

விளக்கெண்ணெய் திரி விளக்கில் காட்டி அது எதோ புருவத்துக்கு செய்கிற மை போல சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..புருவம் வளர என் மகளுக்கு நல்ல உபயோகமாக இருந்தது அது.

Nandita said...

I have to disagree with 2 things that you have mentioned and also harmful for the baby. Nose Blowing and sambirani. Blowing will severely affect the ears of the baby and frequent sambirani can lead to wheezing.
Check with a doctor to make sure that the cold is not on the child's lungs then we have nothing to worry. Just put the saline spray in the nose before sleeping which will help them breathe when sleeping. I have not given any medicines to both my children for common colds except for spray at nights which is available in medical shops but please make sure to consult with the doctor before you do. I believe that treating common colds with medicine doesn't help the immnune system to do its work.
You can use a soft cotton cloth to pat the child's head after bath and can use dryer in low cycle if the child is a year and above.
BTW, I'm a mother of 2 beautiful children.

Menaga Sathia said...

ரொம்ப நல்லாயிருக்கு கவிதா எல்லா டிப்ஸ்களும்.மூக்கில் பஞ்சைவிட்டு துடைக்கும் போது அதற்கென விற்கும் டிராஸ் விட்டு துடைத்தால் அழுக்கு வந்துடும்,பஞ்சும் மூக்கில் ஏறாது.இங்கு அப்படித்தான் செய்வாங்க.டாக்டரின் ஆலோசனைப்படி டிராஸ் விடலாம்.தப்பா நினைக்க வேணாம் கவிதா,நான் செய்த்தை சொன்னேன்.

Menaga Sathia said...

ஆகாய நதி

குழந்தைக்கு அடிக்கடி சளிப் பிடித்தால் வசம்பை சுட்டு உள்நாக்கில் வைப்பாங்க அல்லது ஒரு குழிக்கரண்டியில் தேங்காய் எண்ணெயில் கற்பூரம் போட்டு விளக்கில் சூடுகாட்டி குழந்தை மார்பு,முதுகு தடவினால் விரைவில் குணமாகும்.செய்துப் பாருங்க.

கவிதா | Kavitha said...

எல்லா டிப்ஸ்களும்.மூக்கில் பஞ்சைவிட்டு துடைக்கும் போது அதற்கென விற்கும் டிராஸ் விட்டு துடைத்தால் அழுக்கு வந்துடும்//

மேனகா சத்யா, இந்த குறிப்புகள் கொடுத்தது அழுக்கு எடுக்க இல்லைப்பா, குளித்துமுடித்தவுடன் தண்ணீர் காது, மூக்கில் இருக்கும் அதைஇ எடுக்கத்தான்.. நீங்கள் சொன்னபடியும் செய்யலாம்.

பொதுவாக காதில் இருக்கும் அழுக்கை நாம் எடுக்கக்கூடாது என்பது டாக்டர்களின் பரிந்துரை. அது காதை சேதப்படுத்திவிடும். இயற்கையாகவே காதில் உள்ள அழுக்குங்கள் வெளியேற்றப்பற்றுவிடும்.

கவிதா | Kavitha said...

தப்பா நினைக்க வேணாம் கவிதா,நான் செய்த்தை சொன்னேன்.
//

:) இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கு மேனகா.. எதுக்கு இந்த தேவையில்லாத டிஸ்கி.. ம்ம்ம்??

கவிதா | Kavitha said...

I have to disagree with 2 things that you have mentioned and also harmful for the baby. Nose Blowing and sambirani. Blowing will severely affect the ears of the baby and frequent sambirani can lead to wheezing.
Check with a doctor to make sure that the cold is not on the child's lungs then we have nothing to worry. //

Dear Nandita, Thanks !! I did agree with you, I did say the same to check with doctor before they implement any kind of tips that they go thro net.

Ofcourse I saw child suffered by wheezing when his mom dried him with this Sambrani Smoke. I only took him to doctor in hurry. So I never ever suggest people which i used for Naveen.. bcz I strongly believe Naveen;s health is totally different from other child.

கவிதா | Kavitha said...

@ முத்து. எந்த நாட்டு மருந்து விளக்கில் காட்டி கருக்குவது என்றாலும் அது விளக்கெண்ணெய் விட்டு எரியும் விளக்கில் தான் செய்வார்கள். :)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger