Rheumatic fever - rheumatoid arthritis என்று சொல்லப்படும் இந்த காய்ச்சல் மிக கொடியது. இது வந்தால் குழந்தைகளை எளிதில் பாதிக்கும். முதலில் தொண்டை வலியும் எதுவும் முழுங்க முடியாதபடி இருக்கும். அடுத்த நாள் கால், கை joints வீங்கி பயங்கரமா வலிக்கும். இந்த வியாதி ஒரு பழமொழி சொல்றாங்க டாக்டர் :
Rheumatic காய்ச்சல் வந்தால் " Kiss the mouth, lick the knee, and bite the heart" என்று சொல்லுவாங்க. அதாவது முதலில் தொண்டை வலி வரும், பின் கை, கால் முட்டி, விரல் இணைப்புகள் வீங்கி வலிக்கும், பிறகு இதயத்தின் வால்வுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த வகை காய்ச்சல் சின்ன குழந்தைகளுக்குதான் அதிகம் வரும், வந்தால் சில டெஸ்ட் எடுத்து உறுதி செய்து, பிறகுதான் சிகிச்சை தருவார்கள். கண்டிப்பாக எக்கோ எடுப்பாங்கள். இது ஒருமுறை வந்தால் பிறகு எப்போது வேண்டுமானாலும் வரும்.
இதற்கு மருத்து காய்ச்சல் வரும் பொது தருவதுதான், ஆனால், அதற்கு பிறகு வருவதுதான் கொடுமை. சரியாக 21 நாட்களுக்கு ஒரு முறை பென்சிலின் ஊசி போடவேண்டும். முதலி சிறிய அளவு சோதனை ஊசி, பிறகு நெஜமாகவே பெரிய ஊசி, பயங்கரமா கடுகடுன்னு வலிக்கும். இதை அந்த குழந்தைக்கு என்ன வயதில் வருதோ அன்று முதல் அதன் 21 வயது வரை போடனும்.
இந்த காய்ச்சல் வருவதற்கு காரணம் ஒன்றும் இல்லை, யாருக்கு வேண்டுமாலும் வரலாம். மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
5 comments:
Oh my God... :(
குழந்தைகளுக்கு எந்த கொடிய வியாதியும் வரவே கூடாது கடவுளே!
ஆமாம்.இது என் தோழிக்கும் இருந்தது அவளின் சிறு வயது முதல் சரியாக 21 வயது வரை.இதற்காகவே அடிக்கடி கல்லூரிக்கு விடுப்பு போட்டு ஊருக்கு சென்று இந்த வேதனைகளைத் தாங்கிக் கொண்டு வருவாள்.அவளுக்கு கால்கள் வலிக்கும் போது பார்க்கவே மிகவும் கொடுமையாக இருக்கும்.படிகளில் அதிகம் நடமாடக் கூடாதாம்..ஆனால் எங்கள் கல்லூரியில் படிகள்தான் அதிகம்.தண்ணீரில் நீண்ட நேரம் இருந்தாலும் மிகவும் சிரமப் படுவாள்.
இந்த பதிவைப் படித்ததும் எனக்கு அவளின் நினைவுதான்.ஆனால் இப்போது நலமாக எவ்வித பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறாள்!
--இதற்கான காரணத்தைதான்ஆராய வேண்டிஉள்ளது!
விகடன் வழியே இங்கு வருகிறேன்.....
விழிப்புணர்ச்சி பதிவுக்கு வாழ்த்துக்கள்!!
துவக்கத்தில் நீங்கள் கூறியிருப்பது போலில்லாமல்....RHEUMATIC FEVER
ம் RHEUMATOID ARTHRITIS ம் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத இருவேறு வியாதிகள் !!
அவ்வப்போது டாக்டர்களுக்கும் குடைச்சல் ஏற்படும் இரண்டையும் வேறுபடுத்த..!!
A SIMPLE RULE... மூட்டு வலி ஆறு வாரங்களைக் கடந்தால் அது நிச்சயம் RHEUMATIC FEVER அன்று!
மற்றபடி RHEUMATIC FEVER க்கான உங்கள் விளக்கம் விளக்கு போல் தெளிவு !!
இன்னொன்று....நாங்களெல்லாம் வலிக்காமல் ஊசி போடுரவங்களாக்கும் :))
ஆகாய நதி நன்றி ....
சசி மேடம் நன்றி....
வாங்க டாக்டர் சார், என் 8 வயது மகள் போன ஆகஸ்ட் மாதம் இந்த காய்ச்சல் வந்து ரொம்ப கஷ்டப்பட்டாள். ஒவ்வொரு 21 நாட்களுக்கு ஒருமுறை அவளை பார்க்கவே பாவமாக இருக்கும், இன்னும் எத்தனை வருடங்கள்.... டாக்டர்களை பற்றி ஒரு தனி பதிவு போடனும்.
வேறு வழி இருகிறதா? இந்த மருந்தால் வேறு உபாதைகள் வருமா?? யாரிடம் கேட்டல் பதில் கிடைக்கும்.
உங்க பதிவு யூத்புல் விகடனில் வாழ்த்துகள் நண்பா
Post a Comment