நாம் எங்காவது பார்ட்டி களுக்கு நம் குழந்தைகளையும் அழைத்து செல்கிறோமானால்,அதிலும் நம் குழந்தை மற்றவரிடம் பேச தயங்குவதானால்,செல்லும் முன்னரே குழந்தைகளுடன் சிறிது நேரம் அமர்ந்து அவர்களுக்கு போகும் இடத்தில் அனைவரிடமும் எப்படி பேச வேண்டுமென்றும் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும், எப்படி நடந்து கொள்ள வேண்டாமென்றும் முன்னரே சொல்லிக் கொடுத்து அழைத்துச் செல்ல வேண்டும்.நான் இப்படி செய்வதினால் அவர்களும் அதற்க்கேற்றவாறே நடந்து கொள்வர்.அதை விடுத்து போன இடத்தில் குழந்தையிடம் யாரவது பேசும் பொழுது அவர்கள் பேசத் தயங்கினால் உடனே அவர்களை அந்த இடத்திலேயே வர்ப்புறுத்துவது அவர்களுக்கு அங்கே மிகவும் அவமானமாக இருக்கும்.அந்த உணர்வுகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.வெளியே எங்கு செல்வதாக இருந்தாலும் அவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையை சொன்னால் அவர்களும் கூச்சமின்றி பழக ஆரம்பிப்பார்கள்.இதே போல் ஓரிரு முறை வெளியே செல்லும் முன் நாம் செய்தல் அடுத்த முறை அவர்களாகவே போகுமிடங்களில் மற்றவர்களிடம் அழகாகப் பேசி நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துவிடுவர்!!
இது அவர்களின் வருங்கலத்திற்கு மிகவும் உபயோகமாகவும் இருக்கும்!!!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
3 comments:
நீங்க சொல்லறது சரிதான்,
partyikku மட்டும் அல்ல நம் வீட்டுக்கு யாராவது வந்தாலும் பேச சொல்லிதரணும்.
நல்ல பதிவு சசி! //அவர்களுக்கு போகும் இடத்தில் அனைவரிடமும் எப்படி பேச வேண்டுமென்றும் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும்// இந்த மெத்தட் நல்ல பலனளிக்கிறது!
நீங்க சொல்வது சரி தான். நான் கூட நட்டுவை கோவிலுக்கு அழைச்சிட்டு போனேன். சும்மா தான் இருந்தான். நான் அவனுக்கு அறிவுறை சொல்கிறேன் பேர்வழின்னு "தம்பி அந்த அக்கா தலையிலே இருக்கும் பூவை எல்லாம் இழுக்க கூடாது"ன்னு சொன்னேன். போச்சு எல்லா பூவும்.
Post a Comment