முதலில் ஒரு விஷயம், உங்கள் குழந்தை எப்படி வளர வேண்டும் என்று நீங்கள் மட்டும் தீர்மானம் பண்ணுங்கள். ரொம்ப குண்டா இருக்கும் குழந்தை தான் அழகோ, ஆரோக்கியமோ அல்ல. மேலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வதை காது கொடுத்து மட்டும் கேளுங்கள். உடனே செயல் படுத்த முற்ப்படாதீர்கள். நம் பாட்டி காலம் வேறு, நம் அம்மாவின் காலமும் வேறு, ஏன் நம் சின்ன வயதில் இருந்தது போலவா இப்போது குழந்தைகள் இருக்கிறார்கள். கால கட்டங்களின் மாறுதலுக்கு ஏற்ப நாம் கண்டிப்பாக மாறித்தான் வேண்டும்.
பொதுவாகவே நாட்டு மருந்துகள் இப்போதைய சுழலில் நன்றாக தெரியாமல் கொடுப்பது நல்லது அல்ல. ஆனாலும் எப்போதும் அலோபதி மருந்தும் நல்லது அல்ல. முடிந்தவரை குறைந்த அளவில் மருந்து கொடுத்து பழகுங்கள்.
காய்ச்சல் : குழந்தைகள் காய்ச்சல் வந்தால் மிகவும் சோர்ந்து போவார்கள். முதலில் அவர்கள் நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை அவர்களுக்கு உணரவைக்க வேண்டும். காய்ச்சல் தான கண்ணு சரியாய் போய்டும், இந்த ரச சதம் சாப்பிட்டு, நல்ல ரெஸ்ட் எடு என்று தான் ஆரம்பிக்கவேண்டும். ஐயோ என்று நாம் டென்ஷன் ஆவதில் அர்த்தம் என்ன?
அவர்களுக்கு மிதமான சூட்டில் உடம்புக்கு குளிக்க செய்து, அவர்களுக்கு பிடித்த சவுகர்யமான ஆடை அணிந்து, ரச சத்தமோ, ரொட்டியோ, பாலோ கொஞ்சம் சாப்பிட கொடுங்கள், மருந்தும் கொடுங்கள். அதை விட முக்கியம் சாத்துக்குடி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் கொடுங்கள். சுடு தண்ணீரை ஆற வைத்து அதில் ஜூஸ் பிழிந்து கொடுங்கள். நல்ல காற்றோட்டமாக இருக்கும் இடத்தில் நிம்மதியா தூங்கினாலே பாதி சரியாய் போகும்.
மிக சிறிய குழந்தை எனில் உடல் சுடு அதிகம் இருந்தால் ஒரு டவலை தண்ணீரில் நனைத்து அதன் இரு அக்குளும் தலையும் சேர்த்து சில நிமிடம் வைத்து, பிறகு துடைத்து விடுங்க.
சளி: உண்மைகளில் சளிக்கும் குளிப்பதற்கும் சம்மந்தமே இல்லை. தலயில் ஈரம் இல்லாமல் பார்த்து கொண்டால் போதும். மிளகு , பனங் கற்கண்டு, திப்பலி பொடி செய்து வைத்து கொள்ளுங்கள். ( செய்முறை தனியாக எழுதுகிறேன்)
மிக சிறிய குழந்தைக்கு உரை மருந்து கொடுக்கலாம், மிக பொறுமையாக கொடுக்கணும். இல்லேன்னா ஒரு பெரிய வெற்றிலை எடுத்து சிறிது நல்ல எண்ணெய் தடவி விளக்கு திரியில் லேசாக சூடு பண்ணி குழந்தையின் நெஞ்சில் பற்று போடுங்கள், சளி வெளியில் வாந்தியவோ, மலத்திலோ வெளியே வரும்.
லூஸ் மோஷன் : இது தான் கொஞ்சம் டேஞ்சர் ,முடிந்த வரை டாக்டரிடம் எடுத்து சென்று விடுங்கள்.
வயது வாரியாக பார்க்கலாம்.
அதற்க்கு முன்: குழந்தைகளை பார்க்கும் அதே கவனத்துடன் நம்மையும் பார்த்துக்கணும்.
இன்றைய டிப்ஸ்: கர்ப்பமாக இருக்கும் பொது, எப்போ தெரியுதோ அப்போதிருந்து moisturex என்னும் கிரீம் வயிற்றில் தடவி வந்தால் வரிவரியான தழும்புகள் இருக்காது. அல்லது விட்டமின் ஈ ஆயில் கூட தடவலாம். பிரசவத்திற்கு பின் இருக்கும் தழும்புகள் உடனே போகாது, ஆனாலும் தினமும் சிறிது நல்லெண்ணையுடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து வயிறில் தடவி பிறகு குளித்தால் கொஞ்ச நாளில் போய்டும்.
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
12 comments:
சூப்பர் டிப்ஸ்! நான் இந்த கிரீம் மேட்டர் தெரியாம இப்போ பல முயற்சிகளில் இறங்கிருக்கேன் :(
9மாத பொழிலுக்கு காய்ச்சலின் போது சாத்துகுடி ஜூஸ் கொடுக்கலாமா?
தரலாமா குடுக்கலாம், குழந்தையின் உடம்பில் திரவம் சேர்ந்தால் தான் பொழில் சீக்கிரம் விளையாடுவான். குருணை kanji வைத்து பால் விட்டு கொடுங்கள்
நன்றி! இன்று ரசம் கொடுக்கலாம் என்று தயார் செய்துவிட்டேன்... நாளை கஞ்சி :)
ஆனால் இன்று அவன் இட்லி சாப்பிடாமல் தாய்ப்பால் மட்டுமே எடுக்கிறான்... சரி தாய்ப்பால் நல்லதுதானே நானும் அதற்காக கவலைப் படவில்லை...
தாய் பால் நல்லது தான், குழந்தைக்கு பசியே எடுக்காது, சளி காய்ச்சல் இருந்தால் அதற்குதான் ஜூஸ்.
இது பற்றி தெளிவாக எழுதுங்களேன் :)
நான் சுக்கு மிளகு திப்பிலி பனை கற்கண்டு சேர்த்து பாலில் கொதிக்கவிட்டு கொடுக்கலாம் என்று இருக்கிறேன்
நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் !!
ஆகாயநதி... தயவுசெய்து டாக்டரை கன்சல்ட் செய்து அப்புறம் எதுவானாலும் செய்யுங்கள்... 9 மாதமே குழந்தைக்கு ஆவதால் அதுவும் காய்ச்சல் இருக்கும் போது டாக்டரிடம் கேட்டு ஆகாரம் கொடுப்பது நல்லது.
எல்லா குழந்தைகளின் உடல் வாகும் ஒரே மாதிரி இருக்காது, சரிங்களா?
இந்த வயிற்றினை முழுமையாக குறைப்பதற்கு ஏதும் வழி உண்டா?
எனக்கு சிசேரியன்... அதுவும் பிரசவ வலி எனக்கு காலில் எக்குத்தப்பாக வந்து என்னால் நடக்கவோ திரும்பி புரண்டு படுக்கவோ இயலாது... இன்னுமே புரண்டு படுப்பது பெரும்பாடு :( இப்போது தான் குணமாகிகொண்டே வருகிறது... இதனால் என்னால் 3மாதத்திற்கு பிறகு பெல்ட் அணிய முடியவில்லை... இப்போதும் தொடர்ந்து அணிவதில்லை... ஆனால் மருத்துவர் கூறிய இரு உடற்பயிற்கிகளைய்டும் செய்கிறேன் இப்போது கொஞ்சம் குறைந்துள்ளது... நீங்கள் ஏதேனும் ஐடியா வைத்துள்ளீர்களா?
நன்றி கவிதா... டாக்டரிடம் காட்டிவிட்டேன்... ஊசி போட்டிருக்கிறார்...
நல்ல டிப்ஸ் மயில்.
உடம்பு சரியில்லையென்றவுடனே பதட்டப்படுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். டென்ஷன் ஆவதால் குழந்தைக்கு குணமாகிவிடாது. என் மகனுக்கு 2 வயதாகப்போகிறது. ஆனால் ரொம்ப ஒல்லியாகத் தானிருப்பான். பயங்கர ஆக்டிவ். வெயிட்டைப் பற்றி அதிகம் கவலைப்படத்தேவையில்லை. ஆரோக்கியமே முக்கியம்.
இந்த வயிற்றினை முழுமையாக குறைப்பதற்கு ஏதும் வழி உண்டா?
mm tom.. I write on this.. :)
நன்றி கவிதா... டாக்டரிடம் காட்டிவிட்டேன்... ஊசி போட்டிருக்கிறார்...
//
Excellent !! :) Plz take care..
நல்ல பதிவு மயில்!எனக்கும் சிசேரியன் தான் வயிற்றைக் குறைக்க டிப்ஸ் சொல்லுங்க.
Post a Comment