Thursday, April 23, 2009

அறிமுகம்

வணக்கம் தோழிகளே. இந்த உலகத்தில் நான் பிறந்ததில் இருந்து இதுவரை செய்த பெருமையான செயல் ஒரு அம்மாவாக இருப்பதுதான். என் குழந்தைகள் பிறந்த அந்த கணம் நான் கொண்ட ஒரு நிறைவான சந்தோசம் இதுவரை திருப்பி அனுபவிக்கவில்லை.

நான், விஜி ராம், கோவை வசிப்பிடம், கடந்த ஜனவரி வரை OJASVI என்ற பெயரில் திருப்பூரில் பெண்கள் ஆடையகம் ( சுடிதார் ஷோ ரூம்) வைத்திருந்தேன். மேலும் மிகுந்த விருப்பத்துடன் SAP CONSULTANT ஆனேன். எல்லாமே கடந்த காலத்தில் குறிப்பிட காரணம் என் குழந்தைகள், அவர்கள் நலனுக்காக அதிலிருந்து வெளி வந்து விட்டேன். இப்போது வீட்டில் பொடிக் வைத்திருக்கேன். இரண்டு பெண் குழந்தைகள், வர்ஷா பெரியவள் 8 வயது, சிறியவள் விபாஷா (பப்பு) 4 வயது. என் இரண்டு குழந்தைகளும் யார் துணையும் இல்லாமல் முழுக்க என்னால் மட்டுமே வளர்க்கப்பட்டவர்கள். என் அம்மா உடல் நலம் சரியில்லாதவர் என்பதாலும் , என் மாமியார் டாக்டர் என்பதாலும், வீட்டில் மேலும் ஒரு குழந்தைகள் நல டாக்டர் இருந்ததாலும் இரு பிரசவங்களும் மாமியார் வீட்டில் தான் நடந்தது.

இதில் முக்கியமான விஷயம் என் இரண்டாவது பெண் pre term baby, இனிவரும் நாட்களை குழந்தைகளை பற்றி முடிந்த வரை எழுதுவேன். உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள், முடிந்தவரை எங்கள் வீட்டு டாக்டர்களிடம் கேட்டு சொல்கிறேன்.

நன்றி
விஜி

9 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மயில் நல்வரவு!

சந்தனமுல்லை said...

வாங்க விஜி! :-)

ஆகாய நதி said...

ஹை ஜாலி! வாங்க மேடம்... :)
எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்தாயிற்று! :)

ஆயில்யன் said...

மயில் வரவு நல்வரவு :))

நிறைய செய்திகளை பகிர்ந்துக்கோங்க!

வாழ்த்துக்கள் !

Vidhya Chandrasekaran said...

வாங்க மயில்.

pudugaithendral said...

வாங்க வாங்க,

நானும் இரண்டு பிள்ளைகளை முழுக்க முழுக்க நானே வளர்த்தவள்தான்.

நிறைய்ய சேம் பளட் இருப்பாக போலிருக்கே.

Anonymous said...

நன்றி முத்துலட்சுமி - கயல் விழி
உங்களோட சாப்பிட வாங்க நல்லா இருக்கு.

நன்றி santana முல்லை - நன்றி

நன்றி ஆகாய நதி - எப்பிடிங்க யோசிகறீங்க நல்லா பெயர், மேடம் போட்டு ரொம்ப வயசான பீலிங் வர வெச்சரதீங்க. ஆவ்வ்வ்வ்

நன்றி ஆயில்யன்
நன்றி வித்யா
நன்றி புதுகைத் தென்றல் - நம் குழந்தைகள் நம் கையில் வளர்வதுதான் நல்லது.

goma said...

மயில் நல்வரவு.
குழந்தை நலம் .பற்றி அனைத்து விவரங்களையும் அட்டவணை போட்டு அனைவருக்கும் வழங்குங்கள்.

அமுதா said...

வாங்க விஜி
/* உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள், முடிந்தவரை எங்கள் வீட்டு டாக்டர்களிடம் கேட்டு சொல்கிறேன்.
*/
நிறைய தெரிந்து கொள்ளலாம் போல இருக்கே. நன்றி

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger