நமது குழுப்பதிவை மேலும் சுவாரசியமாக்க ஒருசில எளிய யோசனைகள்!
1. இடுகைகளில் லேபிள்கள் relevant-ஆக வைத்துக் கொள்வோம். ஏற்கெனவே இருக்கும் குறிச்சொற்களையே திரும்ப பயன்படுத்த முயல்வோம். எ.கா - வயது வரம்பு, புத்தகங்கள்,பாடல்கள், கதைகள் என்று இயன்ற வரை பொதுப்படையானதாக, தேடுவதற்கு எளிதானவையாக இருக்கட்டும்.
2. மேலும், இடுகைகளின் குறிச்சொற்களோடு, இடுபவரின் பெயரையும் ஒரு குறிசொல்லாக பயன்படுத்துவோம். (ஆகாயநதி மற்றும் அமித்து அம்மா-வின் இடுகைகள் அவ்வாறே இருக்கக் காணலாம்.) இது சடுதியில் இனம்காண உதவியாயிருக்கும்.
3. நமது இடுகைகள் அம்மாக்கள் பற்றியதும், குழந்தைகள் பற்றியதாய் மட்டும் இருக்கட்டும்.
அது அனுபவங்களாகவோ, விவாதமாகவோ இருக்கலாம். பிற தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்தியாயிருப்பின், சுட்டியை இணைத்து வைப்போம்.
4. தொடர்ந்து எழுதுவதை மனதிற் கொள்வோம். குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு ஒரு இடுகையாவது இடவேண்டுமென மனதிற் கொள்வோம். நமக்கு நாமே உதவி செய்துக் கொள்கிறோம், இந்த வலைப்பதிவின் மூலம்...ஒருவரிடமிருந்து மற்றொருவர் என! நாம் அனைவரும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து இருக்கிறோம், நாமனைவரும் நண்பர்களே என்று உணர்வோம். தேவையற்ற விவாதத்தைத் தவிர்ப்போம்!
5. வாழ்த்துகள், அறிவிப்பு பற்றிய இடுகைகளாக இருப்பின், ஏற்கெனவே அதைப் பற்றிய இடுகை இருக்கிறதாவென அறிந்தபின் இடலாம். இதன்மூலம், பல இடுகைகள் ஒரே அறிவிப்பைக் குறித்து இடுவதைத் தவிர்க்கலாம்.
6. நமது குழுப்பதிவின் இடுகைகளைப் பற்றிய முன்னோட்டங்கள்/முன்னுரை அல்லது சுட்டிகளை நமது சொந்த வலைப்பூவிலும் இடலாம். அதனால் இன்னும் பலரை சென்றடைய வாய்ப்புகள் பெருகும்.
மேற்சொன்னவற்றை முன்பாகவே வரையறுத்திருக்கலாமெனினும், குழப்பங்களை தவிர்க்க இது தேவையானதாகப் படுகிறது. இன்னும் சொல்வதற்கு யோசனைகள் இருப்பின் தெரிவிக்கவும். குழுப்பதிவை மேன்மையானதாக்குவோம்! ஒத்துழைப்பிற்கும், புரிதலுக்கும் நன்றி! ஹூர்ரே..!!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
10 comments:
வர வர இந்த அம்மா பதிவர்களின் அழும்பு தாங்க முடியலப்பா.. சீக்கிரமா அப்பா பதிவர்கள் எல்லாம் வந்து ஒரு பதிவு துவக்குங்கப்பா.. ;-))
உங்கள் கருத்துகளோடு ஒத்துப் போகிறேன் முல்லை. குறிப்பாக லேபிள் என வரும்போது உங்கள் பெயரோடு ஏற்கனவே இருக்கும் ஏதேனும் ஒரு லேபிளை உபயோகப்படுத்த முயற்சியுங்கள். உதாரணத்திற்கு 0-3 வயது வரை என்று ஒரு லேபிளும், 0-5 வயது வரை என ஒரு லேபிளும் இருக்கிறது. இதைத் தவிர்த்து ஒரே லேபிளாக 0-5 வரை என வரையறுக்கலாம்.
இம்மாதிரியான சின்ன சின்ன விஷயங்கள் நம் முயற்சியினை மேலும் செம்மைப்படுத்தும்.
அழகா எழுதி இருக்கீங்க முல்லை..
//ஒத்துழைப்பிற்கும், புரிதலுக்கும் நன்றி! //
நல்லா எழுதி இருக்கீங்க !
ஹூர்ரே..!
அட இதுவும் நல்லாத்தான் இருக்கு :))
இதை ஒரு படம் போட்டு சொல்லி இருக்கலாமே.. பதிவு தேவையா?
அப்படியே செய்வோம் :)
கலக்குது நம்ம வலைப்பூ... :)
தினம் ஒரு பதிவு... தினம் ஒரு தகவல்... சூப்பர்.. நன்றி முல்லை.. :)
நம்ம வலைப்பூக்கு திருஷ்டி படப்போகுது... அம்மாக்களே சுத்திப்போட்டுக்கோங்க உங்களுக்கு...
நல்லா புரியுது முல்லை தல(வி) சொன்ன சரிதான்.
இப்பதான் நம்ம பதிவுகள் நல்லபடியா வருது,
நல்ல யோசனைகள். பின் பற்றுவோம்
Post a Comment