அம்மாவாக ஒரு சின்ன அறிமுகம் செய்துக்குறேன்..! எனக்கு ஒரே மகன் , பெயர் நவீன். அவனை எந்த /யார் உதவியும் இன்றி தனியாக வளர்த்தேன் என்பது என் வாழ்க்கையின் சாதனையாகவே நினைக்கிறேன். மூன்று மாதங்கள் வரை ஆயா துணை இருந்தாலும் அவரின் வயது காரணமாக அவரால் ரொம்பவும் குழந்தையை கவனித்து க்கொள்ள முடியாது. நானே அவர்களுக்கு ஒரு குழந்தை என்பதால் என்னை கவனிப்பதில் அவரின் கவனம் இருந்தது. ஆயாவின் நேரடி கவனிப்பில் அந்த மூன்று மாதங்கள் இருக்கும் போதே எப்படி எல்லாம் குழந்தையை வைத்துக்கொள்ள வேண்டும், என்னுடைய & குழந்தையின் உணவு பழக்கம், குளிக்க ஊற்றுதல், குறிப்பாக தலைக்கு ஊற்றுதல், என் மற்றும் குழந்தையின் தூக்கம், தாய்ப்பால் போன்ற நிறைய குறிப்புகளை என்னில் பதியவைத்துக்கொண்டேன். பின்பு எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு தேவைப்படும் போது கடிதம் எழுதி ஆயாவிடம் கேட்டுக்கொள்வேன். அப்போதும் அவர் எனக்கு கொடுக்கும் குறிப்புகள் உணவும் , தூக்கம் சம்பந்தமாகவே இருக்கும்.
ஆயாவின் ஒரு சின்ன அறிவுரையோடு ஆரம்பிக்கிறேன். "உணவே மருந்து !! எந்த அளவு நீயும் குழந்தையும் ஒழுங்கான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து சாப்பிட்டு வருகிறீர்களோ.. .அந்த அளவு நீங்கள் டாக்டருக்கு பணம் கொடுக்க வேண்டாம், டாக்டருக்கு கொடுக்கும் பணத்தை உணவாக மாற்று !! "
இந்த வரிகள் இப்போதும் எனக்குள் உள்ளது, சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு எல்லாம் எல்லாம் என்னையும் சரி நவீனையும் சரி டாக்டரிடம் போகாமல் இருக்க தேவையானவற்றை வீட்டிலே செய்துக் கொள்ள பழகிக்கொண்டேன். உடல் பிரச்சனைகள் குறிப்பாக நவீனுக்கு வராமல் பார்த்துக்கொள்ள ரொம்பவும் அக்கறை எடுத்துக்கொள்வேன். அவற்றில் சில
1. சுத்தமான தண்ணீர்
2. விளையாடிவிட்டு வந்தவுடன் கை, கால் கழுவுதல், அல்லது குளித்தல்
3. கொசுக்கடிக்காமல் பார்த்துக்கொள்வேன். இதற்கு ரொம்பவும் சிரமப்பட்டேன் எனலாம்.
4. வேளைக்கு தகுந்த, தேவையான உணவு (நேரம் தவறாமல் எப்படியும் கொடுத்துவிடுவேன், இதற்காக அடுத்தநாள் உணவு என்று எழுதி வைத்து தயார் செய்ய வசதியாக்கி க்கொள்வேன், நேரத்திற்கு ஒரு லிஸ்ட் எழுதி வைத்துக்கொள்வேன்)
5. உடம்பை கஷ்டப்படுத்தாத ஆடைகள், பொதுவாக மெல்லிய பருத்தி ஆடைகள், தவிர்ப்பது நைலான், நிறைய சிமிக்கி வேலைபாடுகள் உள்ள ஆடைகள், மிகவும் இறுக்கமான ஆடைகள்.
6. சுத்தமான படுக்கை, படுக்கை பொதுவாக குழந்தைகளுக்கு வெள்ளை நிறத்தில் கவர் போட்டு இருக்க வேண்டும், அப்போது தான் பூச்சி, எறும்பு போன்றவை இருந்தால் தெரியும்.
7. நேரத்திற்கு சரியான தூக்கம்
8. ஆடைகள் துவைக்கும் போது , கிருமி நாசினி (டெட்டால்) யை கலந்து உலர்த்துவேன். தலையணை உறைகள், பெட் கவர்கள், உள்ளாடைகளை வாரம் ஒருமுறையாவது சுடத்தண்ணீரில் கொதிக்க வைத்து துவைப்பது.
உணவு முறைகள் :-
தாய்ப்பால் :- தாய்ப்பாலை விட சிறந்த உணவு இல்லை. குழந்தைக்கு தேவைப்படும் எதிர்ப்பு சக்தியை அந்த குழந்தையின் வாழ்நாள் முழுதும் கொடுப்பதும், நல்ல திடமான தேக ஆரோக்கியத்துடன் இருக்க இது தான் அடிக்கல் எனலாம். குறைந்தபட்சம் 1 வருடம் அதிகபட்சம் அவரவரின் விருப்பத்தை பொருத்தது. இப்போது எல்லோரும் வேலைக்கு செல்வதால் இது எந்த அளவு சாத்தியப்படுகிறது என்று தெரியவில்லை. மேலும் அறிய
http://www.indiaparenting.com/diet/data/diet23_03.shtml
http://www.indg.in/health/child-health/benefits-of-breastfeeding
http://www.babycenter.com/0_how-breastfeeding-benefits-you-and-your-baby_8910.bc
தாய்ப்பால் கொடுக்கும் தாயிக்கான சிறந்த உணவுகள் :-
1. முருங்கைக்கீரை - இதை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிடலாம், ஆனால் இந்த கீரை சரியான முறையில் சமைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லையேல் வயிற்றுவலி வர வாய்ப்புகள் அதிகம்.
2. மீன் , பால் சுறாப்புட்டு மிகச்சிறந்த உணவு, இதுவும், செய்த அன்று சாப்பிடுவது நல்லது, வைத்திருந்து சாப்பிடக்கூடாது குறிப்பாக பால் கொடுக்கும் பெண்கள்.
3. கீரை வகைகள் அத்தனையும்.
4. பசும்பால் குறைந்தபட்சம் 500 மிலி குடிக்கவேண்டும். (கண்டிப்பாக.)
குழந்தைகளுக்கான உணவு:-
இது 7 மாதங்களில் இருந்து ஆரம்பிக்கலாம். இருப்பினும் உங்களின் குழந்தை டாக்டரிடம் கலந்து ஆலோசித்து பிறகு கொடுங்கள். நவீனுக்கு டின் ஃபுட் எதுவுமே கொடுக்கவில்லை. கொடுக்கக்கூடாது என்று தவிர்த்துவிட்டேன் எனலாம். அதற்கு பதிலாக வீட்டிலேயே தயார் சத்துமாவு கஞ்சி கொடுப்பேன்.
சத்துமாவு கஞ்சி :-
பச்சரசி : 1/4 கிகி
சம்பா கோதுமை : 1/4 கிகி
கேழ்வரகு : 1/4 கிகி
சோளம் : 100 கி
பார்லி : 50 கி
கம்பு : 50 கி
சுக்கு : சுண்டு விரல் அளவு 3
ஏலக்காய் : 5
பொட்டுகடலை : 200 *
முந்திரி : 200 *
பாதாம் : 200 *
இதில் * இட்டதை வீட்டில் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள், மீதமுள்ளதை நன்கு கழுவி சுத்தம் செய்து, காயவைத்து மிஷினில், அரிசி அரைத்த பிறகு இதை கொடுத்து அரைத்துக்கொள்ளுங்கள், பிறகு வீட்டில் அரைத்து வைத்ததை இதனுடன் கலந்து , வயதிற்கு தகுந்தார் போன்று தேவையான அளவு எடுத்து கஞ்சி காய்த்து, பால் , சர்க்கரையுடன் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.
தினமும் குழந்தையின் உணவு பட்டியலில் சேர்க்கவேண்டியவை
கீரை :- தினமும் ஒரு கீரை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்,
முட்டை :- தினம் ஒரு வித சுவையில் செய்து கொடுங்கள்
சுண்டல் : ஏதாவது ஒரு சுண்டல் தினமும் ஒரு வேளை இதை கொடுக்கலாம்
பசும் பால் : - ஏதோ ஒரு வகையில் இதுவும் உள்ளே செல்ல வேண்டும்
சீரக தண்ணீர் : வெறும் தண்ணீர் கொடுப்பதற்கு பதில் சீரகம், காய்ந்த திராட்சை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து (திராட்சையை நசுக்கி விடவும்) குழந்தைகளுக்கு இதையே கொடுத்துவந்தால், உணவு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.
பிஸ்கட் : க்ரீம் இல்லாத பிஸ்கட் கொடுக்கலாம் (க்ரீம் இருப்பவற்றை குழந்தைகளுக்கு தயவு செய்து கொடுத்து பழக்கவேண்டாம்)
வத்தல் : கடையில் வாங்குவதாக இருந்தால் கலர் வத்தலாக இல்லாமல், வெள்ளையாக இருப்பதை மட்டும் வாங்கி பொரித்து கொடுக்கலாம் வீட்டில் செய்தால் குழந்தை சாப்பிட வசதியாக அதிக பச்சைமிளகாய் சேர்க்காமல் செய்து வைத்து கொடுக்கலாம்.
இன்றைக்கு இதோடு.. இன்னும் தொடர முயற்சிக்கிறேன்...
வாய்ப்பு கொடுத்த முல்ஸ்' க்கு அன்பு முத்தங்கள்.. :)
அணில்குட்டி அனிதா : அம்மணி என்ன இப்ப எல்லாம் அவங்க வீடு தங்காம வீடு வீடா போக ஆரம்பிச்சிட்ட்டான்ங்க..... வெயில் அதிகமா போச்சோ.. ஸ்ஸ் ஒரு வீடே தாங்கமுடியாம இருக்கேன்.. இதுல இது வேற.... அதுவும் மாட்டினது பாவும் சின்ன புள்ளைங்க... அம்மாங்களா. .சாக்கறதை... அம்மணி சொல்றாங்களேன்னு நீங்களும் அப்படியே எதையும் செய்துபிடாதீங்க...
பீட்டர் தாத்ஸ் :- God could not be everywhere and therefore he made mothers."
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
19 comments:
அம்மாவின் குறிப்புகள் அம்சமா இருக்கு.
வாழ்த்துக்கள்
ஹை மீ த பர்ஸ்டு
அருமையான குறிப்புகள் கவிதா! ஆயா சொன்னது சரிதான்! அந்த 8 பாயிண்ட்ஸ் ரொம்ப கரெக்ட்! மிக்க நன்றி கவிதா!
அருமையான குறிப்புகள்... தொடருங்கள்...
மிகவும் உபயோகமான குறிப்புக்கள். நன்றி கவிதா
அருமையான குறிப்புக்கள். இளம் தாய்மாருக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கும்.
நானும் என் குழந்தையை இரண்டு மாதத்திலிருந்து நானே தான் வளர்த்து வருகிறேன். அம்மா வீடு அருகில் இருந்தாலும் குழந்தையைப் பொறுத்த மட்டில் அம்மாவால் எதுவும் செய்ய இயலாது.
உணவுப் பழக்க வழக்கங்களில் நீங்கள் சொல்லி இருப்பது நிச்சயம் பின்பற்ற வேண்டிய ஒன்று. உங்கள் பதிவு எனக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன.
அனைத்து குறிப்புகளும் ரொம்ப உபயோகமானது.மேலும் தொடருங்கள்,வாழ்த்துக்கள்!!
நல்ல குறிப்புகள்... இப்படி தான் நான் பொழிலனைப் பார்த்துக் கொள்கிறேன் :) அவனுக்கும் நீங்கள் கூறிய அதே கஞ்சி தான் கொடுக்கிறேன்...
1வயது வரை தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம்...
அதுவும் குறை மாதக் குழந்தைகள் கண்டிப்பாக தாய்ப்பால் அருந்துவது இன்றியமையாதது!
இது பற்றிய சுட்டிகளை நாம் அறிந்து கொள்வது மட்டுமன்றீ பலருக்கும் எடுத்து செல்ல நாம் ஏதாவது செய்ய வேண்டும்... ஏனென்றால் இன்னும் தாய்ப்பால் கொடுக்க யோசிக்கும் தாய்மார்களைக் காண்கிறேன் :(
குழந்தை தூங்கவிடாமல் பால் கேட்கிறது அதனால் பால் கொடுப்பதையே நிறுத்திவிட்டேன் என்று கூறுகிறார்கள் :(
மிகவும் உபயோகமான குறிப்புகள் :) நன்றி....
தாய்மார்களுக்கான உணவு சூப்பர் :)
அதோடு கேரட், கத்திரிக்காய், பீட்ரூட்,
ஓட்ஸ் இவையும் இனைத்துக் கொள்ளுங்களேன் :)
பீட்ரூட்டை வெறுக்கும் நான் பொழிலனுக்காகவே பீட்ரூட் சாப்பிட ஆரம்பித்தேன்...
அத்தனையும் அருமையான விஷயங்கள்...எல்லா தாய்மார்களும் கடை பிடிக்க வேண்டிய அனைத்தும் உங்கள் பதிவிலேயே அடக்கம்!!!
@புதுமைத்தென்றல் (சரியா??) - நன்றிப்பா
@முல்ஸ் - நன்றி
@ அமுதா - நன்றி
@ திஷீ - நன்றி
@ தீபா - நன்றி
@ மேனகா சத்தியா - நன்றி
@ ஆகாய நதி - ரொம்ப நன்றி.. ம்ம் கத்திரிக்காய் வேண்டாம், மற்றது ஒகே.. கத்திரிக்காய் பொதுவாக தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டு செய்யும், அது சிலருக்கு இதனால் தான் வருகிறது என்று தெரியாது. கத்திரிக்காய் குறைந்த அளவு சேர்த்துக்கொள்ளலாம்.
@ சசிரேகா - நன்றி :)
அதுவும் சரிதான் :)
சூப்பர் கவிதா:)
@புதுமைத்தென்றல் (சரியா??)//
தெனாலி படத்துல ரமேஷ் கிருஷ்ணா கமலோட பேரை கடைசிலதான் சரியாச் சொல்வாரு. அது மாதிரி இருக்கு கவிதா நடத்துங்க...
:)))
மிகவும் அருமையான, பயனுள்ள பதிவு. நன்றி.
இளமை விகடன் குட் ப்ளாக்கில் இடம்பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் :-)
குழந்தையின் உடம்பில் வேர்க்குரு வராமல் இருப்பதற்காக, அரிசி களைந்த நீரால் முதலில் சிறிது குளிப்பாட்டிவிட்டு பின்னர் வழக்கமான நீரில் குளிப்பாட்டுகிறார்கள். இத்தகவல் எந்தளவுக்கு சரியானது என்று எனக்குத் தெரியவில்லை.
தெனாலி படத்துல ரமேஷ் கிருஷ்ணா கமலோட பேரை கடைசிலதான் சரியாச் சொல்வாரு. அது மாதிரி இருக்கு கவிதா நடத்துங்க...
:)))
//
ஹி..ஹி.. ஆனா நமக்கு கடைசின்னா எது? :))
மிகவும் அருமையான, பயனுள்ள பதிவு. நன்றி.
இளமை விகடன் குட் ப்ளாக்கில் இடம்பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் :-)
//
:) நன்றிங்க..
உங்களுக்கு இரட்டை நாக்காங்க.. ஒரு பதிவுல என்னை கேவலம்னு சொல்றீங்க இங்க வந்து அதையே உல்டாவா சொல்றீங்க..
ம்ம்... மனிதர்கள்... !! :(
//உங்களுக்கு இரட்டை நாக்காங்க.. ஒரு பதிவுல என்னை கேவலம்னு சொல்றீங்க இங்க வந்து அதையே உல்டாவா சொல்றீங்க..//
நான் எப்போ உங்களை கேவலம்னு சொன்னேன்??? சத்தியமா இருக்காது. எந்த பதிவில் என்று கூறுங்கள். என் பக்கம் தவறு இருப்பின் அதை undo பண்ணிக்கிறேன்.
அப்படி சொல்கிற அளவிற்கு உங்க பதிவு கேவலாமா இருந்ததா என்ன? :-)
Post a Comment