வெஜ் இட்லி:
தேவையானவை:
துருவிய கேரட் தேவைக்கேற்ப
துருவிய சிறிய (அ) பெரிய வெங்காயம்
பொடியாக அறிந்த கொத்துமல்லி இலைகள்
மிகவும் பொடியாக அறிந்த பீன்ஸ்
உப்பு
மிளகு தூள்
இட்லி மாவு
நல்லெண்ணெய்
செய்முறை:
குழந்தைக்கு எளிதில் மென்று முழுங்கவும், செரிக்கவும் இவை இரண்டையும் துருவிக் கொள்வது நல்லது.
வெங்காயம் எளிதில் வெந்துவிடும் ஆனால் கேரட் துருவியிருப்பதால் அதற்கு பொருத்தமாக வெங்காயத்தையும் துருவிக்கொள்வோம்.
கொத்துமல்லி இலைகளை பொடியாக அறிந்து, பீன்ஸையும் பொடியாக அறிந்து வைத்துக் கொள்வோம்.
முதலில் இவை நான்கையும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகவைத்துக் கொள்வோம்
பின் இந்தக் கலவையில் சிறிது நெய் மற்றும் மிளகு தூள் சேர்த்துக் கொள்வோம்
இட்லிமாவு எடுத்து சென்ற முறை கூறியது போலவே நல்லெண்ணெய் தடவிய இட்லி தட்டில்
சிறிது ஊற்றி பின் இந்த கலவையை வைத்து அதற்கு மேலும் மாவினை ஊற்றி வேகவைத்து எடுத்தால் வெஜ் இட்லி ரெடி!
குட்டிப்பாப்பாக்களுக்கு இது மிகவும் பிடிக்கும்! :)
பள்ளி செல்லும் குட்டீஸ்கும் ஏற்ற உணவு :)
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
4 comments:
கொஞ்சம் பெரிய குழந்தைக்கு இதே மாவில் ஊத்தப்பம் ஓகே?
ஓ தாராளமா ஊத்தாப்பம் செய்யலாமே! :)
நன்றி மயில் :)
அருமையான ரெசிப்பி. நன்றி.
Post a Comment