Grow up reading with Bubbles
வயது வரம்பு : 2 முதல் 6 வரை
மொழி : ஆங்கிலம்
அதிலுள்ள ஆறு கதைகள் :
1. Bubbles goes to School
2. Bubbles The Artist
3. Bubbles Plays with Fire
4. Bubbles Has a Toothache
5. Bubbles The Litterbug
6. Bubbles Is Selfish
கதைகள் என்பதை விட ஆறு சிறு நிகழ்வுகள். Bubbles என்னும் குட்டிக் குரங்கு கதாநாயகன். பள்ளி என்றால் என்ன?, சுவரில் வரையாமல் பேப்பரில் வரை, தீயில் விளையாடக் கூடாது, நிறைய மிட்டாய் சாப்பிடக்கூடாது, குப்பைக்கூடையில் தான் குப்பை போட வேண்டும், பகிர்ந்து விளையாட வேண்டும் என்பதே ஆறு கதைகளின் சாராம்சம்.
படங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. எழுத்துக்களுக்கும் மிகவும் பெரிதாக இருக்கின்றன. நாம் வாசித்துக் காட்டுவதற்கும், வாசிக்கப் பழகும் குழந்தைகளும் உபயோகப்படுத்தும் படியுள்ளது.
வாசிக்கும் பொழுதே தன்னை Bubblesஉடன் ஒப்பிடத் தொடங்கிவிட்டாள். நான் மிட்டாய் நிறைய சாப்பிட மாட்டேன், நான் முந்தி தான் சுவத்தில வரஞ்சேன் போன்றவை. ஒரு முறை படித்துக் காட்டிய உடன் படங்களைப் பார்த்தே கதை சொல்லிவிடலாம்.
கதைகள் சிறார்களுக்கு மிகவும் விருப்பமாக இருக்கும் படி இருக்கின்றன. மூன்று நாட்களில் கிட்டத்தட்ட பத்து முறையேனும் வாசித்து இருப்போம். பயனுள்ளப் புத்தகம்.
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
6 comments:
பபில்ஸ் நல்லா இருக்கு, உபயோகமாகவும்! பகிர்ந்தமைக்கு நன்றி தீஷூ!
//நான் மிட்டாய் நிறைய சாப்பிட மாட்டேன், நான் முந்தி தான் சுவத்தில வரஞ்சேன் போன்றவை.//
சமத்து தீஷூ! :-)
சொல்ல மறந்துவிட்டேன்!சேம் பிளட்! :-)நானும் எழுதி இருக்கிறேன், முன்னர்!
ஆமாம் முல்லை. நீங்க எழுதியிருந்ததை மறந்து விட்டேன். தீஷு விருப்பமாகப் படித்ததால் அனைவருக்கும் பயன்படும் என்று நினைத்தேன்.
ஹேய்..கண்டிப்பா உபயோகமா இருக்கும்! மத்தபடி,நான் ஜஸ்ட் லைக் தட் சொன்னேன்ப்பா!
ஒருத்தர் எழுதினா இன்னொருத்தர் எழுதக்கூடாதா என்ன?! எல்லார் வியூஸ்-ம் தெரிஞ்சுக்கலாம்தானே! :-)
நான் பபிள்ஸ் பொம்மை மட்டுமே வைத்துள்ளேன்.. இப்போதைக்கு...
கதை புத்தகம் வாங்க இன்னும் 1வருடம் ஆகனும் :)
நன்றி ஐடியாவிற்கு... ஏற்கனவே முல்லையும் இந்த ஐடியா குடித்திருக்காங்க... ஓகே எல்லாத்தையும் மைண்ட்ல வெச்சுக்கிறேன் :))))
//ஹேய்..கண்டிப்பா உபயோகமா இருக்கும்! மத்தபடி,நான் ஜஸ்ட் லைக் தட் சொன்னேன்ப்பா!
ஒருத்தர் எழுதினா இன்னொருத்தர் எழுதக்கூடாதா என்ன?! எல்லார் வியூஸ்-ம் தெரிஞ்சுக்கலாம்தானே! :-)
//
Please!! நீங்க விளக்கமெல்லாம் கொடுக்க வேண்டாம் முல்லை. நானும் ஜஸ்ட் லைக் தட் தான் சொன்னேன்ப்பா.. No issues..
Post a Comment