Sunday, May 3, 2009

இடது கை பழக்கம் - செய்ய வேண்டியது


எப்பவும் நான் என் பப்புவை வெளியில் கூட்டிட்டு போனால் நெறைய விமர்சனங்களை சந்திப்பேன், கல்யாணமோ, ஹோட்டலோ , உறவினர் வீடோ எதுவானலும் எல்லோரும் பப்புவை பார்த்தும் கேட்கும் முதல் கேள்வி, கை மாற்றி சாப்பிட பழக்கலாம்... என்பது தான். காரணம் பப்பு இடது கை பழக்கம் உள்ளவள். பப்பு பிறவியிலேயே இடது கைதான், எழுவது, சாப்பிடுவது, பொருட்களை கையாளுவது எல்லாமே. வலது கையில் நாம் செய்யும் எல்லா வேலைகளையும் போல் அவள் மிக சுலபமாக செய்வாள்.

ஏன் இடது கை பழக்கம்:

நம் மூளையின் இடது, வலது செயல்பாடுகளில் பெரும்பாலும் இடது புறம் இயங்கி உத்தரவுகளாக வரும், அவை கழுத்தருகில் தடம் மாறி உடலின் வலது பக்கத்துக்கு போகிறது. இடது கைககாரர்கள் மூளையின் வலது பாகம் வேலை செய்கிறது. (நன்றி:சுஜாதா சார்)

என்ன செய்வது:
ஒன்றும் செய்ய வேண்டாம், அப்படியே விட்டுவிடுங்கள். அதுதான் அவர்களுக்கு சவுகர்யம். நம்ம கலாச்சாரத்தில் இடது கை பழக்கம் ஆரோக்கியமானது அல்ல என்பதாலும் நாம் அதை மாற்ற முயற்சி பண்ணுகிறோம். அது அவர்களின் தனித்தன்மை. தேவையில்லாமல் விமர்சனம் செய்து அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம்.

8 comments:

சந்தனமுல்லை said...

உண்மைதான். இதைக் குறித்து பெரிதாகவொன்றும் அலட்டிக் கொள்ளவேண்டியதில்லை! அது அவர்களது தனித்தன்மை!

ஆயில்யன் said...

//எப்பவும் நான் என் பப்புவை வெளியில் கூட்டிட்டு போனால் நெறைய விமர்சனங்களை சந்திப்பேன்//


எத்தனை பப்பு.....?????

குழப்பமான மனநிலையுடன்

பப்பு பேரவை
தோஹா - கத்தார்

கானா பிரபா said...

//எப்பவும் நான் என் பப்புவை வெளியில் கூட்டிட்டு போனால் நெறைய விமர்சனங்களை சந்திப்பேன்//


எத்தனை பப்பு.....?????

குழப்பமான மனநிலையுடன்

பாட்டி பேரவை
சிட்னி

அ.மு.செய்யது said...

பயனுள்ள பதிவு.

உபரி தகவல்: இடது கை, வலது கை என்ற வார்த்தை பிரயோகங்கள் தூய
தமிழ் வார்த்தைகளாக நமக்கு தோன்றலாம்.ஆனால் இவையிரண்டும் மரூவுக்கள்.

தமிழில் இது போன்ற வார்த்தைகளே இல்லை.

இடக்கை,வலக்கை என்பவை மட்டுமே சரியான சொல்லாடல்.

Anonymous said...

நன்றி முல்லை - நிறைய பேர் பழக்கத்தை மாற்ற சொல்லி வற்புறுத்துவார்கள்.

நன்றி ஆயில்யன் - உங்களுக்கு தான் இந்த விளக்கம்

நன்றி கானா, உங்கள் பதிவுகள் மிக அருமை. நான் ஒரு லிஸ்ட் வைத்திருக்கேன், நேயர் விருப்பம். ( பாட்டி பேரவை தலையான கானா அவர்களே)

நன்றி செய்யது.

பொதுவாகவே வீட்டில் பிறக்கும் கடைசி (இப்ப எங்கே கடைசி) குழந்தையை பேபி, பாப்பா, பப்பு என்று சொல்வது வழக்கம் தான். எங்க பப்பு நிஜ பெயர் - விபாஷா

goma said...

அடுத்தவர்களைத் திருப்தி படுத்துவதற்காக நாம் நம் குழந்தையை படுத்த வேண்டாம்.

ஆகாய நதி said...

ஆயில்யன் நீங்க பேசாம பப்பூஸ் பேரவைனு வெச்சிக்கோங்களேன்... பப்புவுக்கும் கூட்டணிதானே இன்னொரு பப்பு :)

Anonymous said...

yeah even at the age of 26 I am facing this problem.. Many used to comment on it and asked me to change the habbit.. I can understand the situtation very well.. :)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger