Wednesday, May 6, 2009

சம்மர் கேர் நம்ம குட்டீஸ்கு

இந்த கொளுத்தும் கோடை பெரியவர்களான நமக்கே தாங்க முடிவதில்லை :-(
பாவம் பிஞ்சுக் குழந்தைகள்! அவர்களின் சூடு பிரச்சனைகளை சொல்லவும் தெரியாமல், அவஸ்தையை பொறுக்கவும் முடியாமல் அழும் போது நமக்கும் வேதனை தானே? :( நீர் கடுப்பு, மலச் சிக்கல்(அ) வயிற்றுப் போக்கு, வயிற்று வலி, உடல் எரிச்சல் போன்றவை அதிக வெப்பத்தால் குழந்தைகளையும் தாக்கும். மேலும் இந்த விளையாட்டு அம்மை நோய் தடுப்பும் அவசியம்.

இன்று பொழிலனுக்கு தடுப்பூசி போடுவதற்கு சென்ற இடத்தில் ஒரு தாய் 15 நாள் குழந்தையை வெயிலில் வைத்து அழுகையை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். அதுவோ மிகவும் அழுகிறது... ஊசி வலி, வெயில் கொடுமை, பசி... எப்படி அழாமல் இருக்கும். அது என்ன கொஞ்சம் பெரிய குழந்தையா வெளியில் வந்தால் வேடிக்கை பார்க்க.. இதைப் பார்த்து தான் எனக்கு இந்த பதிவு எழுதத் தோன்றியது...

எனக்கு தெரிந்த வரையிலும், மருத்துவர் மற்றும் பெரியோர் கூற்றுப்படியும் சில சூடு தணிக்கும் வழிகளைக் கூறுகிறேன். என் குழந்தையைப் போல் பிற குழந்தைகளும் பயனடைய வேண்டியே இந்த பதிவு.

0-6 மாதக் குழந்தைக்கு:

இவர்களுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு; அதனால் பால் கொடுக்கும் தாய்மார்கள் கீழ்காணும் ஆகாரங்களை எடுத்துக் கொள்வது நல்லது. மற்றபடி தாய்ப்பாலை மதிய வேளையிலும் இரவு படுக்கும் போதும் குழந்தையின் தொப்புள், உச்சி தலை, உள்ளங்காலில் ஒரு சொட்டு வீதம் தடவிவிடுதல் சூட்டைத் தணிக்கும்.

தயவு செய்து சிக்கன் உண்பதைத் தவிர்க்கலாமே! :)

இளநீர்

மோர்

வெந்தய களி( கடும் கோடையில் கண்டிப்பாக இதனால் சளி பிடிக்காது)

சாத்துகுடி ஜூஸ்

மாதுளை ஜூஸ்

வெறும் வயிற்றில் வெந்தயம் முழுங்கலாம்


இவற்றில் தினம் ஏதேனும் ஒன்று எடுத்துக்கொண்டாலே போதும். மேலும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

6 மாதம் முதல் 1வயது வரை:

இளநீர் 100மிலி வரை கொடுக்கலாம்

சாத்துகுடி ஜூஸ் வெண்ணீரில் கலந்தது

ஆரஞ்சு ஜூஸ் வெண்ணீரில் கலந்தது

அதிகம் புளிக்காத மோர் வெண்ணீரில் கலந்தது

மோர் சாதம்

கொதிக்க வைத்து ஆர வைத்த தண்ணீர் அதிகம் குடிக்கவைக்க வேண்டும்

வெள்ளரி பழம் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம்

இவர்களுக்கு அடி வயிறு தொப்புள் மற்றும் உள்ளங்காலுக்கு தாய்ப்பாலினை தடவி விடலாம்.

இப்படி செய்தாலே வெயிலினால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைத்து குட்டிகளின் உடலை குளிர்ச்சியாக பராமரிக்கலாம்.

வாரம் இரு முறை தலைக்கு ஊற்றலாம்...ஆனால் அதிகம் வெயில் மற்றும் வியர்வை இல்லாத சமயம் குளிப்பாட்டலாம்.

எனக்கு தெரிந்த அளவு உங்களோடு பகிர்ந்துவிட்டேன். இன்னும் ஏதாவது வழிகள் இருப்பின் பின்னூட்டத்தில் கூறி அனைவருக்கும் உதவுங்கள்!

17 comments:

Anonymous said...

மெல்லிய காட்டன் துணிகளை போட்டுவிடணும், முடிந்தால் இரு வேளை குளித்து விடனும். இரு தொடை இடுக்குகளிலும், தொப்புளுக்கு கீழ் அடிவயிரிலும் சிறிது விளக்கெண்ணை தடவி திட்டல் சூட்டினால் வரும் நீர்கடுப்பு குறையும்.

குட் ஆகாய நதி.

Vidhya Chandrasekaran said...

நீங்க முந்திகிட்டிங்க ஆகாயநதி. ரெண்டு வேளை மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை கொண்டு குளிப்பாட்டுங்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி

மேடேஸ்வரன் said...

ammaakkalukku mattumillai, ennai maadhiri appakkalukkum ithu rombave useful...

லக்கிலுக் said...

பிரிண்ட்-அவுட் எடுத்து வைத்துக் கொண்டேன். நன்றி! :-)

லக்கிலுக் said...

ஒரு சின்ன டவுட்.

0 - 6 மாதக்குழந்தைகளுக்கு ஏசியால் ஏதாவது பாதிப்பு வருமா?

ஆகாய நதி said...

நன்றி மயில்... இவற்றை மறந்துவிட்டேன் எழுத... உணவினை மட்டுமே எழுதிவிட்டேன் ( நம்ம எதை செய்யுறோமோ அதுதானே நினைப்புல இருக்கும் ஹி ஹி ஹி!)

இரு வேளை குளிப்பாட்டலும் நல்ல ஐடியா! நன்றி!

தொடை இருக்குகள் பொதுவாக உலர்ந்தே இருப்பது நல்லது... அடி வயிறு மற்றும் பாதங்களில் விளக்கெண்ணெய் தடவலாம்... :)

ஆகாய நதி said...

நன்றி வித்யா! :)

ஆகாய நதி said...

நன்றி அமித்துஅம்மா! :)

ஆகாய நதி said...

நன்றி மேடேஸ்வரன் :) உங்கள் குழந்தைக்கு என்ன வயது...

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.. அப்பாக்களும் இதில் பொறுப்பேற்கலாம்... :)

ஆகாய நதி said...

மிக்க நன்றி லக்கிலுக்!

பொதுவாக ஏ/சி சூடு தான்;
அதனால் முடிந்தவரை குழந்தையை நல்ல காற்றோட்டமான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்... இரவு நேரத்தில் வேண்டுமானால் ஏ/சி யில் உறங்க வைக்கலாம்..

அதுவும் இல்லாமல் சில குழந்தைகளுக்கு ஏ/சி ஒவ்வாது.. தோல் உலர்ந்து ஈரப்பசை இன்றி உரிய ஆரம்பித்துவிடும் :(

என் அக்கா குழந்தைக்கு இது பெரிய அளவில் சருமத்தை பாதித்தது. வெயில் நேரத்தில் இப்பிரச்சனை அதிகம் இருக்காது :)

ஆகாய நதி said...

லக்கிலுக்... உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறதா? :)

Anonymous said...

எப்போதும் ஆயில் போடா வேண்டியது இல்லை, சூடு பிடித்து அழும் போது மட்டும்...

"உழவன்" "Uzhavan" said...

பயனுள்ள பல தகவல்களுக்கு மிக்க நன்றி.

ஆகாய நதி said...

ஓ அப்படியா? நன்றி மயில் :)

ஆகாய நதி said...

நன்றி உழவன்! :)

லக்கிலுக் said...

//லக்கிலுக்... உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறதா? :)//

மேடம்! நான் பேச்சுலர் :-(

சும்மா பொதுஅறிவுக்காக கேட்டேன் :-)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger