Tuesday, May 19, 2009

நாமே செய்யலாமே

நம் குழந்தையை அழைத்துக் கொண்டு, பிற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு அவர்கள் வீட்டிற்குச் செல்வது வழக்கமானது தான். குழந்தைகள் சேர்ந்து விளையாடும் பொழுது அவர்களுக்குப் பல பாடங்கள் கிடைக்கப் பெறுகின்றன. குழந்தைகளும் அடுத்தவர்களின் பொருட்களை எப்படி பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தி விட்டு கொடுத்து விட வேண்டும், யார் பொருட்கள் ஆயினும் பகிர்தல் வேண்டும் போன்றவை கற்கின்றனர். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு பொருட்களை அடுத்தவர் வீட்டில் எடுத்த இடத்தில் வைக்கச் சொல்கிறோமா?

முன்பு தீஷு பெரிய பெரிய விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாண்டதால் பிரச்சனைத் தெரியவிலை. ஆனால் இப்பொழுது பஸில் போன்றவை சிறு சிறு பகுதிகள் கொண்டவை. ஒன்று தொலைந்தாலும் விளையாட முடியாது. அதேப் போல் ஒன்றுக்கு ஒன்று மாறினாலும் ஒவ்வொரு டப்பாவாக தேட வேண்டும். ஒரு குழந்தை விளையாண்டு விட்டு போனால், அனைத்தையும் அதற்குரிய டப்பாவில் வைத்து, எடுத்த இடத்தில் வைப்பதற்குக் குறைந்தது அரை மணி நேரமாகிறது. குழந்தையுடன் வரும் அம்மாக்கள் ஒன்றை முடித்தவுடன் எடுத்து வைத்து விட்டு தான் மற்றொன்றை எடுக்க வேண்டும் என்று கூறினால் நலமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இப்பொழுது நாங்கள் யார் வீட்டிற்குச் சென்றாலும் எடுத்து வைத்து விட்டு வருவதற்குப் பழகியிருக்கிறோம். இதனால் அவர்களுக்கும் சிரமம் குறையும், நம் குழந்தையும் கற்றுக் கொள்ளும்.

9 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

very true.. nangalum ippadi seyvathu ..and varra kuzandhaikalidamum solli parpathu ..( ennanna sila kids seyvanga silar maruthuduvanga but solli parpom )

ஆகாய நதி said...

நல்ல பழக்கம்.. நானும் இந்த பழக்கத்தை விரவிலேயே கற்றுத் தர வேணும்னு இருக்கேன்.. பொதுவாக ஒரு பொருளைப் பயன் படுத்தி முடிந்ததும் அதை அதனுடைய இடத்தில் வைக்கப் பழக்கிவிடுதல் நல்லது... இன்று நாம் செய்யும் சில நியாபக மறதி தவறுகள் அவர்கள் செய்யமாட்டாஎகள் :)

Nagendra Bharathi said...

payanulla pazhakkam

Anonymous said...

அதயேன் கேக்கறீங்க. . மொத்தம் ஆறு பேர், அவங்க அடிக்கற லூட்டியில் தெனம் பிரஷர் எகிறுது. அதனால் இப்பல்லாம் பஸுல் எடுத்து உள்ள வெச்சுட்டேன். பழைய விளையாட்டுதான், கல்லு ( ஐந்து கல் வெச்ச வெளையாட்டு), நொண்டி, தாயம், பரம பதம், கொலைகொலைய முந்திரிக்க, இதுதான், அவங்களுக்கு சொல்லி குடுக்கற சாக்கில் நான் விளையாடுகிறேன். என்ன கொடுமை இது.... ( நல்லத்தான் இருக்கு)

தீபாதேன் said...

பயனுள்ள பதிவு.

என் மகள் படிக்கும் மாண்டசோரியில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடம் ஒதுக்கப் பட்டிருக்கும். மேலும் குழந்தைகள் ஒவ்வொரு பொருளையும் ஒரு work mat ல் வைத்து தான் விளையாட வேண்டும். இதனால் ஒரே சமயத்தில் ஒரு விளையாட்டுப் பொருளுக்கு மேல் எடுத்து விளையாட முடியாது.

அமுதா said...

நல்ல பழக்கம். எங்க வீட்ல குழந்தைகள் முதல்ல இதெல்லாம் செய்தாங்க. இப்ப சொன்னால் தான் செய்றாங்க.

Deepa said...

நல்ல பதிவு. பிள்ளைகளுக்குக் கண்டிப்பாக இந்தப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நன்றி.

Dhiyana said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

சந்தனமுல்லை said...

நல்ல பழக்கம் தீஷூ! தொடர்ந்து கொண்டு வருவதில்தான் இருக்கிறது சவால்! :-)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger