Friday, May 1, 2009

அன்னையர் தினம் - அன்பென்றால் அம்மா

நல்லா பேசிட்டு இருப்போம்,திடீர்னு மூட்ஆகும், மனதை காயப்படுத்திய சம்பவங்கள் நினைவுக்கு வந்து மேலும் கிளரும். என்னை மூட் அவுட் பண்ணும் விஷயம் இரண்டு. முதல் விஷயம் என் அம்மா. என்னடாது அம்மாவ நினைத்தால் எப்படி கஷ்டமா இருக்கும்னு யோசிக்காதீங்க.

எல்லோருக்குமே அம்மா என்பது ஒரு அற்புதமான உறவு, அவர் கடைசி வரை நம்மோடு நல்லபடியா இருந்து நம் சுக, துக்கங்களை பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாரா இருக்கணும். இருப்பார், ஒரு அம்மாக்கு அதவிட பெரிய சந்தோசம் எதுவும் இருக்காது. ஆனால் அப்படி அம்மா எல்லோருக்கும் அமையாது, அமைந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் .

என் அம்மா ஒரு சின்ன கிராமத்தில் இருந்து வந்தவர், அவரோட அம்மா என் மாமா பிறந்த உடனே இறந்துட்டங்கலாம். சின்ன வயதில் இருந்து கஷ்டப்பட்டவர்கள். திருமணம் ஆகி திருப்பூர் வந்தபின் அவர் அப்பா, ( என் அப்பிச்சி) நெலம் எல்லாம் வித்து என் அம்மாவின் அருகிலே வந்து குடும்பத்துடன் செட்டில் ஆயிட்டார்.

என் கல்லூரி காலம் வரை ஒரு குடம் தண்ணீர் எடுக்க என் அம்மா என்னை விட்டதில்லை. இத்தனைக்கும் நாங்கள் நாலு பேர்( 2 தம்பி, ஒரு தங்கை), யாரையும் ஒரு வேலை செய்ய விடமாட்டார். நான் வேலைக்கு போகும் சமயம் கூட நான் வெளியில் இருந்து வண்டி ஸ்டார்ட் பண்ணி சத்தம் போட்டுடே இருப்பேன், லஞ்ச் பாக்சை தலைகீழ கவுத்து லேசா வெளியில் வந்த அப்படியே வெச்சுட்டு போய்டுவேன். ரொம்ப படுத்தி இருக்கேன். திடீர்னு ஒரு நாள் நான் ஊரில் இல்லாத சமயம் என் அம்மா தண்ணீர் தொட்டியில் கீழ விழுந்துட்டாங்க, மயக்கமும் வந்துடுச்சு, அந்த நேரம் யாரும் இல்லை, என் பாட்டி வந்து எடுத்து விட்டு ஹாஸ்பிடல் போனால் பக்கவாதம் என்று சொன்னார்கள்.

அன்று முதல் இன்னைக்கு வரை அவர்க்கு சரியாகவே இல்லை, கொஞ்சமா வீட்டுக்குள் நடப்பார், அவ்வளவு தான், இதுவரை பார்க்காத வைத்தியம் இல்லை, மருத்துவர்கள் சொல்வது, அவங்க fight பண்ணவே மாட்டேங்கறாங்க, மருந்தை விட மனசு சரியாகணும் , என் அம்மாக்கு முதல் முறை உடல் நிலை சரி இல்லாத போது என் வீட்டில் சில பிரச்னை இருந்தது. இப்ப அதெல்லாம் ஒன்றும் இல்லாவிட்டாலும் அவர் இன்னும் குணமாக வில்லை. எதுவுமே நினைவு இல்லை, எப்பவும் என்னை பார்த்தால் அழுவாங்க.

எனக்கு குழந்தை பிறந்த சமயம் தினமும் நான் என் அம்மாவை நினைத்து அழுவேன். இன்னமும் என்னைக்கு அவரை நினைக்கிறேனோ அந்த நாள் முழுதும் அவர் நினைவாகவே இருக்கும்,

அவரிடம் நான் பலமுறை கேட்டு பதில் பெறாத கேள்வி, ஏம்மா இப்படி இருக்கே, உனக்கு என்ன வேணும் என்கிட்ட சொல், நான் கண்டிப்பா பண்றேன். மறுபடியும் என் ஸ்கூல் காலேஜ் கால அம்மா எனக்கு வேணும், இதுவரை உன் மடியில் தூங்கினதா எனக்கு நினைவே இல்லை, ஒரு தடவை யாவது தூங்கனும், எவ்வளவு வருஷம் ஆச்சு, உன் கையால் சாப்பிட்டு, எல்லோரும் சொல்லராங்க நான் உன்னை மாதிரியே இருக்கேன், உன்னை மாதிரியே சமையல் பண்றேன், அம்மா உனக்கு ஒரு கடமையும் மீதி இல்லை, உன் உடம்பு சரியில்லாமல் போன சமயம் இருந்த மாதிரி இல்லை நம் குடும்பம், எனக்கு, நம்ம குட்டி மகேஷுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, நீதான் வரவே இல்லையே, நம்ம பழைய வீடு வித்துட்டாலும் புது வீடு கட்டி அதில்தான் நீ இருக்கே. உன் நிலையில் நான் இருந்து எல்லாமே முடிச்சுட்டேன். ப்ளீஸ் மா, ஒரு தடவை பழைய மாதிரி இரும்மா, உன்ன கட்டி பிடிச்சு அழக்கூட பயமா இருக்கு, உனக்கு எதாவது ஆயிடுமோன்னு, உன்னோட புடவையை என் கண் முன்னாடி வச்சுருக்கேன், எப்பவும் நீ என் கூட இரு. ஏன் என்னை பார்த்தல் அழுகறே? என்ன இருக்கு உன் மனசில், நாங்க எல்லோரும் நல்ல இருக்கோம், அம்மா நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு, என்ன செஞ்சா நீ திரும்ப பழையபடி வருவே.

அம்மா உன்னை நான் என்னனு வாழ்த்தறது, நான் எதாவது தப்பு பண்ணிருந்தா என்னை மன்னிச்சுடு. ப்ளீஸ்.

எவ்வளவு நாள் உன் போட்டோ , புடவையும் வைத்து உன் வாசம் பிடிப்பது, அம்மா ஒரு தரம் என்னை பார்த்து சிரி. ப்ளீஸ்.

அன்னையர் தின வாழ்த்துக்கள்


.

4 comments:

சந்தனமுல்லை said...

very touchy! மனசு பாரமா ஆகிடுச்சு! உங்க அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்! உங்களுக்கும்தான்!

செம ஃபாஸ்ட் விஜி, உங்க போஸ்ட் போடும் வேகத்தைச் சொல்கிறேன்!!

கிரி said...

மனதை தொட்டுட்டீங்க..

அம்மாவின் அன்பிற்கு இணை இந்த உலகில் எதுவுமில்லை

கல்கி said...

நம்மில் பலர் இப்படித்தான் இருக்கிறோம். நாம் தாயான பின்புதான், நம் தாயின் தியாகங்கள், கண்டிப்புகளின் அர்த்தங்கள் முழுமையாக புரிகிறது.
எனக்கு புரிந்து விட்டது, நான் உணர்ந்து விட்டேன் என்று நாம் சொல்லத்துடிக்கும் தருணங்களில் நம்மில் பலருக்கு சொல்லி அழும் வாய்ப்பு கூட கிடைப்பதில்லை.. :-(

அமிர்தவர்ஷினி அம்மா said...

மனசு கனத்த பதிவு

உங்கள் அம்மா சீக்கிரமே உங்களிடமே பேச ப்ரார்த்தனைகள்.

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger