Saturday, May 23, 2009

ஆரோக்கியமான குழந்தை மற்றும் ஆரோக்கியமான கர்ப்ப காலத்திற்கு!

குழந்தைகள் பிறந்தது முதலே ஆரோக்கியமான உணவு முறை மூலம் ஆரோக்கியமான சந்ததிக்கு வித்திடுகிறோம்!

அதிலும் பருவமடைந்ததும் ஆண்/பெண் இரு பாலரின் உணவு முறையிலும் அதிக கவனம் தேவை!
அதிலும் பெண்கள் கருவை சுமக்கும் அளவிற்கு திடகாத்திரமாக இருப்பது அவசியம்!
11வயது முதல் உணவு முறையில், பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை கொண்டு வருதல் நலம்; அது பற்றியே இப்பதிவு!

இதில் உள்ள அனைத்து குறிப்புகளும் மருத்துவர் மூலமும், பிறர் அனுபவத்திலும், என் சொந்த அனுபவத்திலும் அறிந்தவை... உங்களுக்கும் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க உதவுமே என்று கூறுகிறேன்!
ஏதேனும் பிழை இருந்தால் பின்னூட்டத்தில் கூறலாம் வேறு சில உணவுகளையும், பழக்கங்களையும் சேர்க்கலாம் எனில் அதையும் பின்னூட்டத்தில் கூறி அனைவருக்கும் உதவுங்கள்!

முதலில் உணவினைப் பற்றிப் பார்க்கலாம்.

ஆண்களுக்கான உணவு 11வயது முதல்:

பச்சைக் காய்கறி சாலட்
தக்காளி ஜூஸ்/தக்காளி உணவு
வெங்காயம்
பூண்டு
பாதாம் பருப்பு
தேன்
பேரிச்சை
பால்
தயிர்
கீரை
பழங்கள்
முட்டை

இந்த உணவுப் பொருட்கள் தினசரி உணவில் இருப்பது நலம்.
வயிற்றில் கல் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் தக்காளியைத் தவிர்க்கலாம்!

பெண்களுக்கு:

பச்சைக் காய்கறி சாலட்
பாதாம் பருப்பு
தேன்
பேரிச்சை
பால்
தயிர்
கீரை
பழங்கள்
வெந்தயக் களி
உளுந்து களி
முட்டை
மீன்
நல்லெண்ணெய்
பப்பாளி

இவை அனைத்து இரத்தவிருத்தி, இரத்தசுத்தி, கர்ப்பப்பை வலுவூட்ட, தேக ஆரோக்கியம் மற்றும் இயற்கை அழகு போன்றவற்றிற்கு பயன்படும் தலை சிறந்த உணவுகள்.

பழக்கவழக்கங்கள்:(பெற்றோர் மற்றும் பிள்ளைகள் கடமை)

குழந்தை தானாக குளிக்கத் தொடங்கியதிலிருந்து உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என தாய் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும்;

இதில் குழந்தையின் எதிர்கால ஆரோக்கியம் மட்டுமின்றி நோயற்ற சந்ததியினருக்கான வாய்ப்பும் அடங்கியுள்ளது!

நொறுக்குத் தீனிகளை, எண்ணெய் உணவுகளை அறவே தவிர்த்தல் வேண்டும்.
குழந்தைப் பருவத்திலேயே இதற்குப் பழக்கிவிட வேண்டும்;

பாலியல் கல்வி கற்பதில் பெற்றோரும், ஆசிரியருமே ஒரு குழந்தைக்கு துணையாக இருந்து நல்ல அறிவியல் வழியில் அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்;

திருமண பந்தம் பற்றி பெண் குழந்தைகள் மனதில் தவறான புரிதல்களை விதைத்து விடாதீர்கள்;

புதிய உறவுகள், அடக்கு முறை என்றெல்லாம் அவர்களைக் குழப்பி கணவனைக் கைக்குள் போடுதல் அது இது என்று பிதற்றி உங்கள் பெண்ணின் வாழ்வைக் குலைத்துவிடாதீர்கள்; இது அவர்களை மன ரீதியாக பாதிப்பதோடன்றி மிகவும் தாமதமான மகப்பேறு அல்லது மகப்பேறின்மைக்கு வழிவகுத்துவிடும்;

ஆண் குழந்தையின் தாயும் இது பற்றியெல்லாம் கவனமெடுத்தல் நலம்;

மேலும் கர்ப்பகாலம் பற்றிய புரிதலை ஒரு தாய்தான் மகனுக்கு எடுத்துக் கூற வேண்டும்; அப்போதுதான் மனைவியின் கர்ப்பகாலத்தில் தனக்கும் பங்கு உண்டு என்பது ஒரு ஆடவனுக்குப் புரியும்; அவனுக்கும் புதிய விஷயம் தானே!

திருமணத்திற்குப் பின்:

தினமும் இரவு பாதாம் பருப்பும் பாலும் தேனும் சேர்த்தல் அவசியம்;

இரவு உறங்க படுக்கைக்குச் செல்லும் முன் சிறுநீர், டாய்லெட் எல்லாம் போய்விட வேண்டும்;

படுக்கும் முன் தண்ணீர் குறைவாகக் குடித்தல் நலம்;

கர்ப்பம் தரிக்கும் சமயம் பெண்களுக்கு முதுகுவலி அறவே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; இது கர்ப்பம் தாங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை;

தம்பதியர் இருவரும் அன்போடு வெளிப்படையாக ஏதாவது பேசுங்கள் தினமும் இரவு படுக்கும் முன்; ஒருவருக்கொருவர் அன்று நடந்த செய்திகளையும், அன்பையும் பகிர்ந்து கொள்ளுங்கள்; இது மன இறுக்கம், கவலை நீக்க உதவும் அருமருந்து!

பெண்கள் ஃபோலிக் அமில உணவுப் பொருளான தர்ப்பூசணி அதிகம் எடுத்துக் கொள்வதோடு, அந்த மாத்திரையையும் கர்ப்பம் தரிக்கும் முன்பாகவே எடுக்கத் துவங்கி விடலாம்;

இவற்றை செய்து பாருங்கள்! அருமையான கர்ப்பகாலமும், ஆரோக்கியமான அழகான குழந்தையும் உங்களுக்கே! :))))

2 comments:

Deepa said...

அருமையான பதிவு.
பெண்குழந்தைகளுக்கான உணவில்
வெந்தயக் களி உளுந்துக் களி சேர்த்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. நினைவில் கொள்கிறேன்.

ஆகாய நதி said...

வாங்க தீபா... இரு களிகளுமே நம் அம்மாக்கள் கூறி நாம் தவிர்ப்பது அல்லது அம்மாவுக்காக என்று விவரம் புரியாமல் சொல்லி கட்டாயமாக விழுங்குவது...

ஆனால் அப்படி நான் விழுங்கியதன் பலன் நான் கர்ப்பமாக இருந்த போது தெரிந்தது... நித்தம் என் மனதினுள் என் அம்மாவும் வெந்தயக் களி மற்றும் உளுந்துக் களியும் வந்து சென்றது!

எப்போது குழந்தை வெளியே வந்து விழும் என்று அஞ்சும் அளவிற்கு மோசமான பாதை மடிப்பாக்கம் - சோழிங்கநல்லூர்... தினம் இது வழியே தான் நான் ஆபிஸ் செல்வேன்... அதுவும் ஒரு ஓட்டை ஸ்வராஜ் மஸ்தாவில் :( எல்லாம் கடவுள் மற்றும் களியின் சித்தம்...

பெரிய வயிறு, கால் பிரச்சனை, வீட்டு வேலை,ஆபிஸ், என்று ஒரு வழியாக ஓட்டிவிட்டேன் 9மாதங்களை :)

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger