நல்ல பயனுள்ள பதிவு ஆகாயநதி! உபயோகமான குறிப்புகள், மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி, சொன்னவேகத்தில் பதிவிட்டதற்கு! :-) மேலும் சில குறிப்புகள் :
1. due date சொல்லியிருக்கும் நாளிலிருந்து +/-15 நாட்கள் எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம். எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், மனதளவிலும்! எ.கா (20ஆம் தேதி எனில், 15 நாட்களுக்கு முன்பும் பிறக்க சாத்தியங்களுண்டு ) ஆகாயநதி சொன்னதுபோல் உடலில் எங்கிருந்து வேண்டுமானாலும் வலி தொடங்கலாம். சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வந்தாலோ, உள்ளாடையில் ஈரமாக உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவமனையை
அணுகுவது நலம். பனிக்குடம் உடைவதாகக் கூட இருக்கலாம். (suspect..suspect..suspect!)
2. உங்கள் மகப்பேறு மருத்துவரின் தொலைப்பேசி-யை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவரிடமும்,இரவில் வலி வந்தால் அவருக்குத் தெரியப்படுத்துவது பற்றி, மருத்துவமனை procedures பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். (எ.க-ஆக, நான் கன்சல்ட் செய்த மருத்துவர் கிளினிக்கில் கன்சல்ட் செய்வார். பேஷண்டுகளுக்கு இசபெல் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பார்)
3. நாட்கள் நெருங்க நெருங்க மனதில் பயம் வரும். அது இயல்புதான். ஆனால் நம்பிக்கையோடு இருகக் வேண்டும். மருத்துவரை முழுவதுமாக நம்ப வேண்டும். துணைக்கு ஒருவர் எப்போதும் கூட இருப்பது நல்லது. குழந்தையின் அசைவுகளை கவனிக்க வேண்டும். நீண்ட நேரம் அசைவுகள் இல்லாமலிருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்ளுதல் நலம்.
4. தொப்புள் கொடியை சேகரிக்க திட்டமிட்டிருந்தால், அவர்களை தொடர்பு கொண்டு முன்னேற்பாடுகளை செய்தல் வேண்டும். (life cell)
5. ஒரு பையை தயாராக வைத்திருத்தல் நலம். சுத்தமான துண்டு, குழந்தை நாப்கின்கள் ஒரு பேக், ஒரு சோப், காட்டன் ரோல், நர்ஸிங் நைட்டி. நர்சிங் உள்ளாடைகள், உங்களுக்குத் தனியாக துண்டு, டெட்டால் ஒரு பாட்டில், பிளாஸ்க்/தம்ளர். மொபைல் சார்ஜர், டார்ச் லைட்/மெழுகுவர்த்தி,தீப்பெட்டி, பாத்ரூம் செருப்பு. படிக்க ஏதாவதொரு புத்தகம்/parenting book.
6. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் பிரசவத்திற்குச் செல்வதாயிருந்தால் எல்லா prescriptions, ஸ்கேன் ரெக்கார்ட் களை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். என்ன மருந்துகள் உட்கொண்டது, தற்போது என்ன உட்கொள்கிறீர்கள், செய்த சோதனைகள் என்று எலலவற்றையும் ஒரு பைலில் வைத்துக் கொள்ளுங்கள். ஹார்மோன் பிரச்சினைகள் இருந்தால் தயவு செய்து மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள்!
7. சில மருத்துவமனைகளில், முன்னேற்பாடாக பதிவு செய்வது வழக்கமாக இருக்கலாம், ஏசி அறைகள் தேவைப்படும் பட்சத்தில்! (சென்னை இசபெல் மருத்துவமனையில் செய்ய வேண்டியிருந்தது)மேலும், மருத்துவக் காப்பீடுகள் இருந்தால், செல்லும் மருத்துவமனை அதில் வருகிறதாவென பார்த்துக்கொள்ளுதல் நலம். அப்படி இல்லாத நேரத்தில், அதற்கான ஏற்பாடுகளை அவர்களது கஸ்டமர் கேரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வது நல்லது.
Happy Motherhood!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
6 comments:
தங்கமணி சார்பில் நன்றி! இன்னும் ஒரு வாரந்தான் இருக்கு... இஃகிஃகி!!
//நல்ல பயனுள்ள பதிவு//
நல்ல பயனுள்ள இடுகை!
பயனுள்ள இடுகை முல்லை. அதே போல் பெரும்பாலான பெண்கள் பிரசவத்திற்க்கு தாய் வீடு சென்ற பின் தான் மருத்துவர் தேடுவார்கள். அதற்கு பதில் 8ஆம் மாதமே நீங்கள் டெலிவரி பார்த்துக்கொள்ள போகும் மருத்துவரை பார்ப்பது நல்லதூ. அவரிடம் உங்கள் கேஸ் ஹிஸ்டரியை (so far) காண்பித்தல் நலம். மினிமம் 3 அல்லது 4 விசிட்களாவது தேவைப்படும். ஆரம்பகாலத்தில் பார்த்த மகப்பேறு மருத்தவரிடம் கேஸ் ஹிஸ்டரியை வாங்கிக்கொள்ளலாம்.
நன்றி முல்லை :) சில மேட்டர்களை இணைத்தமைக்கு :)
இவற்றை மருத்துவமனைக்கு ஆயத்தமாதல் என்னும் தலைப்பின் கீழ் கொடுக்கலாம் என்றிருந்தேன் :)
நன்றி பழமைபேசி! :)
வாழ்த்துகளும் :)
அப்படியே இன்னொரு குறிப்பும் சேர்த்திருக்கலாம் முல்லை. என்னவானாலும் பதட்டம் கொள்ளக் கூடாது. அது எல்லாவிதங்களிலும் சிக்கல் தான்.
முக்கியமா ஏற்கனவே பீதியில ரங்கமணிகள இன்னும் பீதியில ஆழ்த்துக் கூடாது ;-)
வாழ்த்துகள்!!
தங்களின் இந்த பதிவு thiratti.com தளத்தின் பரிந்துரை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வெங்கடேஷ்
thiratti.com
Post a Comment