மேமாதமும் வந்துவிட்டது. கொளுத்தும் கோடை. குட்டீசை சம்மர் கேம்ப் அனுப்புவது சாத்தியப்படாத (கொண்டு போய் விடுவது, கூட்டி வருவது, தேவையான பொருட்களை வாங்கி தருவது அல்லது விதவிதமான பெயர்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை கொடுத்துச் சேர்ப்பது முதலான பல காரணங்கள்) பட்சத்தில் துறுதுறு கைகளை வீட்டிலேயே பிசியாக வைக்க ஒரு சில விளையாட்டுகள்/ஆக்டிவிட்டீஸ்:
1. சதுரங்கம்/சுடோகு கற்றுக் கொடுத்து பழக்கலாம்.
2. அவர்களைப் பற்றி ஒரு புத்தகம் - பிடித்த விளையாட்டு, பிடித்த கலர்கள், பறவைகள்,
தலைவர்கள், புத்தகங்கள் போன்றவை.
3. படங்கள் வரைதல்
4. போர்டு விளையாட்டுகள்(snakes & ladders மாதிரி)
5. தோட்டம் அமைத்தல் ( ஒரு கோடை விடுமுறையில் kitchen garden அமைத்தோம், வெண்டைக்காய், ஏதோ ஒரு வகைக் கீரை, தக்காளி பயிரிட்டோம்.)
6. ஆங்கில எழுத்துகளை அட்டைகளில் வெட்டி ஒட்டி சீட்டுக் கட்டு தயாரித்து, வார்த்தைகள் அமைத்து விளையாடுதல்.
7. Handicrafts/கொலாஜ் செய்தல்
8. பட்டம் விடுதல்
9. புதிதாக ஏதேனும் விளையாட்டை கண்டுபிடிக்கச் சொல்லலாம்.
10. செய்திதாள் படித்தபின்,முக்கிய செய்தியாக அவர்களுக்குத் தோன்றுவதை வெட்டி ஒரு நோட்டுப்புத்தகத்தில் ஒட்டச்சொல்லலாம். கூடவே அவர்களுக்குத் தோன்றும் குறிப்புகளையும் எழுதச் சொல்லலாம்.
விடுமுறை இனிதாக அமையட்டும்! வாழ்த்துகள்!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
4 comments:
நல்ல ஐடியா! :)
இந்த துறு துறு குட்டிஸ வீட்டில புடிச்சு வைச்சு வெயில்ல இருந்து காப்பாத்திடலாம் :)
நல்ல ஐடியா, இந்த விடுமுறை எனக்கும் தான், அதனால் சின்ன வயதில் விளையாடிய எல்லா விளையாட்டும் ரிபீட் அவங்களுக்கு சொல்லித்தரேன் என்ற பெயரில்.....
ஐடியா நல்லாருக்கே
நல்ல ஐடியாக்கள் முல்லை.. பெரியவளுக்கு பள்ளியிலிருந்தே சுடோகு ஹாலிடே ஹோம் ஒர்க் குடுத்திருக்காங்க.. சபரிக்கு குடுத்த ஹாலிடே ஹோம் ஒர்க்கை நான் வலையேத்தறேன்...
Post a Comment