பொதுவாகவே நிறை மாத கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்குப் பல தேவையற்ற பயம், மற்றும் இனம் தெரியாத ஒரு பீதி இருக்கும். பிரசவ வலி எப்படி வரும், என்ன செய்ய வேண்டும், நேரம் நெருங்கியதை எப்படி உணர்வது இது போன்ற பல சந்தேகங்களும் குழந்தை பற்றிய பல்வேறு எண்ணங்களும் இருக்கும்.இவற்றை நான் அறிந்தவரை தெளிவு படுத்தவே இந்த பதிவு!
கர்ப்பகாலங்கள் பற்றி அறிய என்னுடைய "கர்ப்பிணிகளுக்கான குறிப்புகள்" என்னும் தொடர் பதிவைப் படிக்கலாம். இப்போது பிரசவ காலம் பற்றி அறிவோம்.
பிரசவ வலி:
பொதுவான கர்ப்பத்தின் 9வது மாத துவக்கத்தில் இருந்து பிரசவ விலி ஏற்படலாம்.
நீங்க பிரசவ வலி பற்றி அவசியம் தெரிஞ்சிக்கனும். அதுக்கு பயப்படவே தேவை இல்லை.
உங்க செல்லத்தப் பாக்கப் போற அந்த நேரம், கடவுளுடைய படைப்ப இந்த உலகத்துக்குக் கொண்டு வரப் போற அந்த நேரம் நீங்களும் புதுசாப் பிறக்கப் போற அந்த நேரம், பிஞ்சுக் கால் கைகள தொடப்போற அந்த நேரம், உங்கத் திருமணப் பரிசா ஒரு உன்னதப் பூங்கொத்த உங்களவருக்குக் கொடுக்கப் போற அந்த நேரம், உங்க அம்மாவ தெய்வமா நீங்க உணரப் போற அந்த நேரம், ஒரு புனிதமான நேரம்!!! வாழ்க்கைல அதிக அளவு மகிழ்ச்சியான நேரம்!!!உங்கப் பிறப்போட அர்த்தம் உங்களுக்கு புரியிற நேரம்!!!!
அதுக்காக காத்திருக்க ஆரம்பிங்க. அது உங்களுக்கு மட்டும் வலி இல்லை. குட்டி பாப்பாக்கும் வெளிய வரும் போது வலிக்கும்ல. நீங்க இப்போ தைரியமா இருந்தா தான் பாப்பாவும் தைரியமா இருக்கும்.
இந்த சமயங்களில் பொதுவாக பெரும்பாலானோருக்கு இடுப்புப் பகுதிகளில் வலி துவங்கும்; அதிகமா மூச்சிறைக்கும். உடலில் சில மாற்றங்கள் தெரியும். கால்கள் கூட வலிக்க ஆரம்பிக்கும். கடைசியா தான் பிரசவ வலி உச்சத்திற்கு வரும். அது பல விதமா வரலாம். இடுப்பு, வயிறு முழுதும், அடி வயிறு,இடுப்போடிணைந்து கால்கள்,நடு வயிறு, முதுகு என்று வலி எங்கு வேண்டுமானாலும் வரும்.
இந்த வலி சிலருக்கு பிரசவ நேரத்தில் மட்டும் வரும். அதைக் கண்டறிய கீழ்காணும் சோதனைகளை செய்யுங்கள்:
1. நன்கு வசதியாக இரண்டு மூன்று தலையணைகளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு அடி வயிற்றில் விளக்கெண்ணெய் தேய்த்து, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்த நீர் அருந்த வேண்டும்.
3. இப்போது உங்கள் சுவாசம் சீராக இருக்கும் படி சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும்.
அது பற்றி அடுத்த பதிவில் விளக்குகிறேன்.
4.உங்கள் குழந்தையின் அசைவையும்ம் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும்
இப்போது நீங்கள் கண்டறிய வேண்டியது:
உங்களிடம் ஏதேனும் நீர் போக்கு விடாமல் தொடர்ந்து உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அதாவது பனிக்குடம் உடைதல். அப்போது சிறுநீர் போல நீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கும். பனிக்குட நீர் தான் குழந்தை சுவாசிக்க, நீந்த, உங்களுக்குள் உயிர் வாழ தேவையான ஆதாரம். அது வெளியேறத் துவங்கினால் உடனடியாக சிறிதும் தாமதிக்காமல் ஆம்புலன்சிலோ(அ) காரிலோ மருத்துவமனைக்கு செல்லுங்கள். தயவு செய்து ஆட்டோ வேண்டாம்.
பிரசவ வலியின் போது பனிக்குடம் உடைந்து நீர் வெளியேற ஆரம்பிக்கும். அதனுடன் "ஷோ" என்னும் திரவமும் வெளியேறும் .அப்படி இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள்.அப்புறமென்ன "குவா..குவா" தான் :)
சீரக நீர் அருந்தியும் வலி குறையாமல் கூடிக்கொண்டே இருக்கிறதா என அறிய வேண்டும்.
நீர் போக்கு, உதிர போக்கு இல்லாமலும் ஆனால் வலி மட்டும் தாங்க முடியாத அளவிற்கு கூடிக் கொண்டிருந்தாலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
வலி குறையவும் இல்லை கூடவும் இல்லை, மேற்கண்ட அறிகுறிகளும் இல்லை; ஆனால் வலிக்கிறது என்றால் நீங்கள் செய்ய வேண்டியது:
நீங்கள் நன்கு வசதியாக சாய்ந்து உட்கார்ந்து உங்கள் முழங்கால்களை நன்கு விரித்து குதிக்கால் சற்று தூக்கி வைத்து உட்கார்ந்து கொள்ளுங்கள்.
சீரான சுவாசத்துடன் கொஞ்சம் அடி வயிற்றில் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது முக்குவது போல செய்து மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். வேறு எப்படியும் கைகள், கால் வைத்து எதுவும் செய்யாதீர்கள். இடுப்பினை எதுவும் செய்யாதீர்கள்.
இப்போது வலியின் தாக்கம் எப்படி உள்ளது? கூடியிருக்கிறதா என உணருங்கள்...
உங்கள் குழந்தை உள்ளே எப்படி அசைகிறது என உணருங்கள்... அது பக்கவாட்டு வயிற்றில் அல்லாமல் அதிகம் கீழ் வயிற்றில் அசைகிறதா?
குழந்தையின் உடல் உங்கள் அடி வயிற்றை அழுத்துகிறதா என உணர்ந்து பாருங்கள்!
இப்படியெல்லாம் இருந்தால் மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனைப் படி நடந்து கொள்ளுங்கள்.
சிலருக்கு வலி பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பாகவே வர துவங்கிவிடும். வந்து வந்து குறையும்.
அப்போதெல்லாம் நீங்கள் அதற்காக உள்ள சில யோகா பயிற்சிகளை செய்ய வேண்டும்.
மேற்கண்ட சோதனைகளில் வலி குறைகிறது என்றால் நீங்கள் தற்போது மருத்துவரை அணுக வேண்டியதில்லை.
இந்த பிரசவம் சிலருக்கு இயற்கையாகவும் கிலருக்கு சிசேரியனாகவும் அமையும். இயற்கை என்றால் நல்லது. ஆனால் அதற்கு நீங்கள் உங்கள் மன நிலையை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கு தினமும் தியானம், சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும். திடமான மன நிலையுடன் குழந்தைக்காக உங்கள் வலி எத்தகையதாக இருப்பினும் பொறுத்துக் கொள்ளும் மன நிலையை, மருதுவருடன் ஒத்துழைக்கும் மன நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தயவு செய்து இயற்கை பிரசவத்தின் போது மருத்துவர் மற்றும் செவிலியர்கள் செய்ய சொல்வதை செய்யுங்கள். அது முழுக்க முழுக்க உங்கள் செயலே... பிரசவம் பார்ப்பதும், பிரசவிப்பதும் நீங்கள் தான்! வலிக்கிறதே என்று சிறிது உங்களை ஆசுவாசப் படுத்தினாலும் அது குழந்தைக்கு ஆபத்து. மருத்துவர் கூறும் போது சிறிது ஆசுவாசப் படுத்திக்கொள்ளுங்கள், நீங்களாக செய்யக் கூடாது.
உங்களைப் போல் தான் உங்கள் குழந்தைக்கும் வலிக்கும். வெளியில் இருந்து அனுபவிக்கும் உங்களுக்கே அப்படி வலி என்றால் உள்ளிருந்த்து உடலை நசுக்கி வெளியேறும் குழந்தைக்கு எப்படி வலிக்கும். அதனால் உங்கள் பிஞ்சுக் குழந்தையை மனதில் கொண்டு அதிக நேரம் அதை வலியில் விடாமல் மருத்துவரோடு நன்கு ஒத்துழைத்து விரைவில் பிரசவத்தை முடிக்க பாருங்கள்.
சிசேரியன்:
அந்த அறுவை சிகிச்சையில் அந்த பிரசவ நேர வலி மட்டுமே இல்லை. அதற்காக பலர் விரும்பி சிசேரியன் செய்கின்றனர். அது தவறு. பொதுவாக கீழே உள்ளக் காரணங்களுக்காக மட்டுமே சிசேரியன் செய்ய வேண்டும்.
சிசேரியனுக்கான காரணங்கள்:
* சிலருக்கு வலி குறிப்பிட்டக் காலக் கெடுவுக்குள் வராமலிருக்கும்
* நீர் அளவு குறைந்தோ அல்லது அதிகமாவோ இருக்கலாம்
* குழந்தை தலை பெரியதாவோ (அ) தலை மேலே கால் கீழே இருக்கலாம்
* தாய் (அ) சேய்க்கு அடிபட்டாலும்
* குழந்தையின் கழுத்து/வயிற்றுப் பகுதிகளை பிளாசென்டா இருக்கமாக(மட்டுமே)
சுற்றியிருந்தால்
* பாப்பா எடை அதிகமாக இருந்தால்
* எனக்கு வந்தது போல புதுமையாக சிக்கலான இடத்தில் வலி வந்தாலும் சிசேரியன்
அறுவை சிகிச்சை செய்யனும். மருத்துவர் அறுவைசிகிச்சைனு சொன்னா கணவர் உடனே மனைவியின் உயிரைக்காக்க, குழ்ந்தைக்காக சரினு சொல்லாம அதுக்கான சரியான காரணத்தைக் கேட்டறிந்த பின்பே அனுமதி மற்றும் பொறுப்புக் கையேழுத்து இட வேண்டும்.
சிசேரியனுக்கும் நீங்கள் உங்கள் மனதை தாயார் படுத்திகொள்ள வேண்டும்.
பொதுவாக பயம் என்பது அறவே தவிர்க்க வேண்டியது பிரசவத்தில்! :)
சிசேரியன் பற்றியும், என்ன நடக்கிறது ஆபரேஷன் போது என்றும் அறிய நீங்கள் என்னுடைய
"ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(பிரசவ அனுபவம்)"
"ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்(ஆபரேஷன் தியேட்டரில்)"
"ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல்"
ஆகிய மூன்று பதிவுகளையும் காணலாம்.
இந்தப் பதிவினையும், படத்தினையும் பிரசவ நேரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும்
வீணா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவருக்காகவும், என் தோழி அபிக்காகவும் மற்றும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கவும் சமர்ப்பிக்கின்றேன்! :)
உங்கள் தாய்மைக்கு என்னுடைய வாழ்த்துகள்!
நல்ல முறையில் உங்கள் பிரசவம் அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
13 comments:
பதிவுக்கு நன்றி!
ஆஸ் யூசுவல் ப்ரிண்ட் அவுட் டேக்கன்
நல்ல பயனுள்ள பதிவு ஆகாயநதி! உபயோகமான குறிப்புகள், மிக சரியாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி, சொன்னவேகத்தில் பதிவிட்டதற்கு! :-) மேலும் சில குறிப்புகள் :
1. due date சொல்லியிருக்கும் நாளிலிருந்து +/-15 நாட்கள் எப்போது வேண்டுமானாலும் பிறக்கலாம். எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், மனதளவிலும்! எ.கா (20ஆம் தேதி எனில், 15 நாட்களுக்கு முன்பும் பிறக்க சாத்தியங்களுண்டு ) ஆகாயநதி சொன்னதுபோல் உடலில் எங்கிருந்து வேண்டுமானாலும் வலி தொடங்கலாம். சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் வந்தாலோ, உள்ளாடையில் ஈரமாக உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவமனையை
அணுகுவது நலம். பனிக்குடம் உடைவதாகக் கூட இருக்கலாம். (suspect..suspect..suspect!)
2. உங்கள் மகப்பேறு மருத்துவரின் தொலைப்பேசி-யை வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவரிடமும்,இரவில் வலி வந்தால் அவருக்குத் தெரியப்படுத்துவது பற்றி, மருத்துவமனை procedures பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். (எ.க-ஆக, நான் கன்சல்ட் செய்த மருத்துவர் கிளினிக்கில் கன்சல்ட் செய்வார். பேஷண்டுகளுக்கு இசபெல் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பார்)
3. நாட்கள் நெருங்க நெருங்க மனதில் பயம் வரும். அது இயல்புதான். துணைக்கு ஒருவர் எப்போதும் கூட இருப்பது நல்லது. குழந்தையின் அசைவுகளை கவனிக்க வேண்டும். நீண்ட நேரம் அசைவுகள் இல்லாமலிருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்ளுதல் நலம்.
4. தொப்புள் கொடியை சேகரிக்க திட்டமிட்டிருந்தால், அவர்களை தொடர்பு கொண்டு முன்னேற்பாடுகளை செய்தல் வேண்டும். (life cell)
5. ஒரு பையை தயாராக வைத்திருத்தல் நலம். சுத்தமான துண்டு, குழந்தை நாப்கின்கள் ஒரு பேக், ஒரு சோப், காட்டன் ரோல், நர்ஸிங் நைட்டி. நர்சிங் உள்ளாடைகள், உங்களுக்குத் தனியாக துண்டு, டெட்டால் ஒரு பாட்டில், பிளாஸ்க்/தம்ளர். மொபைல் சார்ஜர், டார்ச் லைட்/மெழுகுவர்த்தி,தீப்பெட்டி, பாத்ரூம் செருப்பு. படிக்க ஏதாவதொரு புத்தகம்/parenting book.
6. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் பிரசவத்திற்குச் செல்வதாயிருந்தால் எல்லா prescriptions, ஸ்கேன் ரெக்கார்ட் களை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். என்ன மருந்துகள் உட்கொண்டது, தற்போது என்ன உட்கொள்கிறீர்கள், செய்த சோதனைகள் என்று எலலவற்றையும் ஒரு பைலில் வைத்துக் கொள்ளுங்கள். ஹார்மோன் பிரச்சினைகள் இருந்தால் தயவு செய்து மருத்துவரிடம் தெரியப்படுத்துங்கள்!
7. சில மருத்துவமனைகளில், முன்னேற்பாடாக பதிவு செய்வது வழக்கமாக இருக்கலாம், ஏசி அறைகள் தேவைப்படும் பட்சத்தில்! (சென்னை இசபெல் மருத்துவமனையில் செய்ய வேண்டியிருந்தது)மேலும், மருத்துவக் காப்பீடுகள் இருந்தால், செல்லும் மருத்துவமனை அதில் வருகிறதாவென பார்த்துக்கொள்ளுதல் நலம். அப்படி இல்லாத நேரத்தில், அதற்கான ஏற்பாடுகளை அவர்களது கஸ்டமர் கேரிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வது நல்லது.
//தொப்புள் கொடியை சேகரிக்க திட்டமிட்டிருந்தால்//
இது எதற்கு?
புரியவில்லை. விளக்கவும்.
தொப்புள் கொடியை குடந்தை பிறந்தவுடன் எடுத்து குளிர்சாதனப்படுத்துகிறார்கள். இது பல மருத்துவங்களுக்குப் பயன்படும். ஒரு முறை சேகரித்தால் அடுத்தக் குழந்தைக்கும் பொருந்தும். life cell அதைச் சேகரிக்கும் ஒரு பேங்க். To treat critical diseases - like diabetes, stroke,cancer, Alzheimer's Disease, Parkinson's Disease. ஒரு தற்காப்புக்குத்தான்..பயப்படுத்துகிறேன் என நினைக்க வேண்டாம்!
இன்னும் தகவலுக்கு - http://www.lifecellinternational.com/
very useful one.
தொப்புள் கொடியை சேகரித்து மோதிரத்தினுள் (அ)தாயத்தினுள் வைத்து குழந்தைக்கு அணிவிக்கலாம் சிலர் அதனை மண்ணில் புதைத்தும் வைப்பர்.
நான் பொழிலனுக்கு தாயத்து செய்ய பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் :)
நன்றி லக்கிலுக்! :)
முல்லை கூறியது புதிய மிக மிக பயனுள்ள தகவல்... நான் இது பற்றி முன்னமே அறிந்திருந்தால் நானும் இப்படி தொப்புள் கொடியை சேகரித்திருப்பேன் :(
நன்றி முல்லை! :)
நன்றி வித்யா! :)
மிக மிக நன்றி ஆகாயநதி!பயனுள்ள குறிப்புக்கள்.... மனதளவில் நானும் தயாராகி கொண்டிருக்கிறேன்.. தாயாக.. அந்த அற்புத நாளை எதிர் நோக்கி.. :-)
Ungaludaya informations mikavum usefulla irunthathau. Unkalodaya sevai melum melum thodara God arul purivanaga....
Ungaludaya informations mikavum usefulla irunthathau. Unkalodaya sevai melum melum thodara God arul purivanaga....
Post a Comment