Monday, May 25, 2009

பிரசவ அனுபவம்

என் due date மே 25th. இதுவரை எனக்கு வலி வரவில்லை. என் மருத்துவர் இன்று ( திங்கள் இரவு) வரை பார்த்து விட்டு , ஊசி மூலம் வலி வர செய்யலாம் , மருத்துவமனையில் சேர்ந்து விடுங்கள் என்று சொல்லி விட்டார்.
யாருக்கும் , இந்த முறையில் பிரசவம் நடந்து இருந்தால் உங்கள் அனுபவங்களை பகிர்த்து கொள்ளுங்களேன். நான் கொஞ்சம் பயந்து போய் தான் உள்ளேன்.( Very Much Expected Normal Delivery :-( )

13 comments:

லக்கிலுக் said...

இப்படிப்பட்ட நிலையில் பதிவு போடலாமா? :-(

அபி அப்பா said...

என்னம்மா இது இப்ப போய் பதிவெல்லாம் போட்டுகிட்டு!நாங்க வேண்டிகிறோம் நல்லா இருங்கப்பா! எல்லாம் நல்லதா நடக்கும்!

Sathiya said...

Don't worry....be in a positive mind. You can have a normal delivery even if it is induced. Read this link:
http://www.babycenter.com.sg/pregnancy/labourandbirth/labourcomplications/inducedlabour/

Go and get admitted in the hospital. If the baby is fine and there is no complication, the doctor can still wait for the pain to occur naturally.

அமுதா said...

கவலைப் படாதீங்க வீணா. நல்ல படியாக பிரசவம் நடக்கும். எனக்கு தெரிந்த பலருக்கு இப்படி சொல்லி, இயற்கையாக வலி வந்து பிரசவம் நடந்துள்ளது. சிலருக்கு ஊசி மூலம் வலி கொடுத்தும் நல்லபடியாக பிரசவம் நடந்துள்ளது. எனவே மனதை இலேசாக வைத்துக்கொண்டு மழலையின் சிரிப்புக்கு ஆயத்தமாகுங்கள்

Anonymous said...

Don,t worry,even i had the same experience for my 2 sons.Both are normal deliveries,and they are fine...Take care amutha everything will be fine.. All the best!

pudugaithendral said...

எனது இரண்டாவது மகள் பிறந்த பொழுது ஆபரேஷன் தியேட்டருக்கு போய் வலி வந்து நார்மல் டெலிவரி ஆச்சு. பயப்படாதீங்க.

திருச்சி தாயுமானவ சுவாமிக்கு வேண்டிக்கங்க

pudugaithendral said...

எனது இரண்டாவது மகள் பிறந்த பொழுது ஆபரேஷன் தியேட்டருக்கு போய் வலி வந்து நார்மல் டெலிவரி ஆச்சு. பயப்படாதீங்க.

திருச்சி தாயுமானவ சுவாமிக்கு வேண்டிக்கங்க

ஆகாய நதி said...

என் தங்கைக்கும் உங்களைப் போலவே வலி வரவில்லை கொடுத்த தேதியில்... அதனால் அவர்கள் அட்மிட் பண்ணி ஊசி மூலம் வலி வரவழைத்தனர்...

முதலில் 2ஊசி அதற்கும் வலி வரவில்லை பின்னர் ஒரு ஜெல் தடவி மேலும் ஊசி போட்டும் வலி வராததால் நடந்து கொண்டே இருந்தாள் அவளை அப்படி நடக்கச் சொன்னார்கள் பின் மாலையில் லேசாக வலி வந்து இரவில் நல்ல படியாக பிரசவம் முடிந்தது... தாயும் சேயும் நலமுடன் அறைக்கு வந்துவிட்டனர்..

என் தங்கைக்கு இப்படி தான் ஊசி மூலம் வலி வந்தது... கவலை வேண்டாம் வீணா... இதில் பயப்படத் தேவையில்லை... சந்தோஷமான மனநிலையில் உங்கள் குழந்தையை மட்டும் நினைத்துக் கொண்டு இருங்கள்... நான் உங்களுக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்...

உங்கள் பிரசவம் சுகப் பிரசவமாக அமைய வாழ்த்துகள்!

ஆகாய நதி said...

வீணா உங்களுக்கு மேலும் தெளிவான விளக்கம் வேண்டுமெனில் என் தங்கையுடனே போனில் பேசலாம்

எனக்கு ஆகாயநதியில் உங்கள் தொலைபேசி எண்ணோடு ஒரு கமெண்ட் மட்டும் போட்டுவிடுங்கள் போதும்... நானே அழைக்கிறேன்... உங்கள் தொலைபேசி எண் வெளியிடப்படமாட்டாது...

அவளுக்கு பிரசவம் முடிந்து சரியாக 11மாதங்கள் ஆகப் போகிறது...

Dr.Rudhran said...

i hope you have an easy delivery..this method of inducing a labour is not unusual..

Dhanasakthi said...

Yes, as many said, its very much possible. Normal delivery with Pain induced. I delivered the same way as normal with pain induced by gel. But they will do so only when the baby is about to be delivered and the mother still doesn't encounter any pain.

Its lot cooler, going into hospital as normal one with no hurry-burry. But the pitier ones are who wait outside the labour room and waiting for the baby to be delivered safely

லக்கிலுக் said...

வீணாவுக்கு பாப்பா பிறந்துவிட்டதா? தாயும், சேயும் நலம்தானே? விவரம் தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்.

அபி அப்பா said...

பிறந்து விட்டது லக்கி! இப்பதான் பதிவு போட்டிருக்காங்க முல்லை. தாயும் சேயும் நலம்!

 
அம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger