இரவு எட்டு மணி இருக்கும். ஜுனியரோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், பாஸ் குடுகுடுவென வாசக்கதவருகே ஓடிப்போய் ப்பா என்றார். ரகுவைப் பார்த்ததும் கைகள் ரெண்டையும் விரித்து தூக்கிக்கோ என்பதுபோல் சைகை செய்தார். அப்பாவைப் பார்த்ததும் அப்படி ஒரு குஷி. "அடப்பாவி நாள் முழுக்கப் பார்த்துக்கறது நான். அப்பாவைப் பார்த்தவுடனே என்னை விட்டுட்டா ஓட்ற" என்று முதுகில் (செல்லமாக) ஒன்று வைத்தேன். அந்தத் தருணம் சட்டென்று அம்மா நினைவுக்கு வந்தாள்.
பொதுவாகவே பெண் குழந்தைகள் அப்பாவிடமும், ஆண் குழந்தைகள் அம்மாவிடமும் அட்டாச்டாக இருக்கும் என்று சொல்வார்கள். நானும் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல. அம்மாவை வைத்துக்கொண்டே நான் அப்பா செல்லம் என்று சொல்லிருக்கேன். கூடவே அம்மா தப்பா எடுத்துக்கமாட்டாங்க என்ற பிட்டையும் போட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் உரைத்தது நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்று. பிறந்து ஒன்றரை வருடமே ஆன என் பையன் அப்பாவைப் பார்த்து ஓடும்போதே எனக்கு என்னமோ மாதிரி இருக்கே. 24 வருஷமா நான் அப்பாவைப் பிடிக்கும் என்று சொல்லும்போது (அந்தத்தருணத்திலாவது) அம்மா எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாள். ஸாரிம்மா. இனிமே (நீ இருக்கும்போது) அப்பாவைத்தான் பிடிக்கும்னு சொல்லவேமாட்டேன். உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல்ல ஜூனியருக்கும் இதை சொல்லிக்கொடுக்கணும்.
அன்னையர் தின வாழ்த்துகள் அனைவருக்கும்:)
நினைவெல்லாம் நிவேதா - 7
12 years ago
8 comments:
நிஜம்தான் வித்யா , குழந்தைகள் வந்த பிறகுதான் நானும் நிறைய கத்துக்கிட்டேன் என் அம்மாவைப்பற்றி. நாம உணரும் அளவுக்கு அப்பாக்கள் உணர்வார்களா?
அருமை வித்யா! :-)
:) நல்லா யோசிச்சிருக்கீங்க
உண்மை தான்... ஆனால் இன்னமும் எனக்கு அப்படி தோன்றுகிறது... என் அம்மாவை விட என் அப்பாவின் டெடிகேஷன் பெரியதாகத் தோன்றுகிறது... காரணம் புரிகிறது ஆனால் புரியவில்லை :(
உண்மை வித்யா.. நான் கூட அப்படி தான் இருந்திருக்கிறேன்.
அமித்து பிறந்து வளர வளர எனக்கு என் அம்மாவின் மீதான அன்பும் வளருகிறது ...
//உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல்ல ஜூனியருக்கும் இதை சொல்லிக்கொடுக்கணும்.//
:-)))
அன்னையர் தின வாழ்த்துகள்
Dear Vidhya
Thanks for yr state ment related to appa and amma.
I also did the same mistake.Now only i find thr yr blog.
Hereafter i wl tell to my dad & mum that i am yr both chellam!
Keep on writting!
Best Regards
Priya
Post a Comment